ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2015

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை மிகப் பெரிய “பாதுகாப்பு அரணாக” உங்களுக்கு அமைத்துக் கொள்ளுங்கள்

நாம் வாழும் இந்தக் குறுகிய கால வாழ்க்கையில் பிடிவாதமான நிலைகள் கொண்டு “என்னை இப்படிச் செய்தான், அவனை விடலாமா..,?” என்ற உணர்வுகள் வருவதை மகாபாரதத்தில் “கௌரவர்கள்” என்று சொல்வார்கள்.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வரும்போது எனது குணத்திற்கொப்பத்தான் எனது இயக்கம் இருக்கும்.

உதாரணமாக செடி கொடிகள் வளரப்படும்போது அதனதன் நிலைகள் பக்கத்தில் இருந்தாலும் தன் இனத்தை மட்டும் கவர்ந்து கொள்ளும். மற்றதை விடுவதில்லை.

 ஆக, இதைப் போல மனிதனுக்குள் நாம் எடுத்துக் கொண்ட பல உணர்வுகள் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் அதிகமாக இருக்கும் நிலையில் நல்ல உணர்வுகளை நமக்குள் வராதபடி ஒதுக்குகின்றது.

கண்ணால் நாம் கவர்கின்றோம் பிறர் நல்லவைகளை. நல்லது என்று நாம் எண்ணுகின்றோம்.

ஆனால், தீமை செய்தே பிழைக்கும் அதாவது திருடனோ, கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ அவன் என்ன செய்கின்றான்?

கொலை செய்து பிழைக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறான். பிறரைத் துன்புறுத்தித்தான் வாழவேண்டும் என்று எண்ணுகின்றான்.

இத்தகைய உணர்வு வரப்படும்போது திருடனிடத்தில் போய் நியாயத்தைப் பேசினால் முடியுமா? கொலைகாரனிடத்தில் போய் கொலை செய்கிறாய்.., என்று எண்ணினா எடுப்பானா?

ஆக, உணர்வுக்கொப்பதான் அது எடுக்கும். அதைத்தான் மகாபாரதப் போரில் அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆக, புறக் கண்ணால் காட்டும் கண்ணனின் சகோதரி திரௌபதை. கண்ணன் என்பது கண்கள், உயிரிலே படும்போது பார்த்ததன் உணர்ச்சி, ஆக கண்ணனின் சகோதரி திரௌபதை.

புறக்கண்ணால் நாம் பார்க்க முடிகின்றது. நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் நன்மை தீமை என்ற உணர்வை அறிய முடிகின்றது.

நல்ல உணர்வை நுகரப்படும்போது நமக்குள் கௌரவம் என்ற நிலைகளில் கொலைகாரனுக்கு நாம் கொலை செய்யாதிருக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உடலில் உள்ள கொலை செய்யும் உணர்வுகள் விடுமா?

அப்பொழுது அந்தத் திரௌபதையை அந்தக் கௌரவர்கள் என்ற நிலை அவமதிக்கின்றது. ஆகவே, தீமை செய்யும் ஏனென்றால் மகாபாரதத்தில்  மற்றவர்களைக் கொன்று குவித்து தானே கௌரவமாக ஆட்சி புரிய வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதைப் போல பலவிதமான உணர்வுகள் நம் உடலிலே எப்படி இணைகின்றது? ஆக, இந்தக் கௌரவப் பிரச்னையிலிருந்து நல்லதை நாம் செயல்படுத்த வேண்டுமென்றால் நாம் உள்ளே செல்லாதபடி அது வலிமை கொண்டு தள்ளிவிடுகின்றது.

அப்பொழுது திரௌபதையை என்ன செய்கின்றான்?
நல்ல உண்மையின் உணர்வினை உணர்த்தினாலும்
அதைத் தடைப்படுத்தி “அவமதிக்கின்றது”.

இப்பொழுது நாம் நல்ல குணங்கள் வேண்டுமென்று விரும்பினால் நம் உடலிலுள்ள நிலைகள் இப்பொழுது எனக்கு ஒருவன் தீமை செய்கிறான் என்றால்
அந்தத் தீங்கு செய்வோன் உணர்வு எனக்குள் இருக்கப்படும்போது
அந்தத் தீமை செய்யும் உணர்வு வந்தால்தான் எனக்குள் அனுமதிக்கின்றது.
அப்பொழுது நன்மை செய்யும் உணர்வுகள் எனக்குள் வருவதில்லை.

ஆகவே, இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் மகாபாரதப் போர் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.

கண்ணன் என்ற கண்களால் மற்றொன்றை உண்மையை உணர்த்தினாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகரப்படும்போது அந்த உணர்வின் தன்மை நாம் அறியப்படும்போது
நம் உயிர் என்ற உணர்வுகள் அந்தத் திரௌபதை
அது கவர்ந்து தனக்குள் சொல்கின்றது.

காரணம் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் ஒரு உணர்வின் தன்மையை எடுத்தால் அர்ச்சுனன், எந்த உணர்வின் தன்மையோ அது உணர்ச்சி கொண்டு தாக்கி அந்த உணர்வால் இயக்கும் தன்மைகள் அதுதான் அர்ச்சுனன் என்பது.

ஆகவே, அதே சமயத்தில் நாம் சூரியன் என்ற நிலைகள் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் (காந்தம்) நகுலன். தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை இணைந்து செயல்படுத்தும் தன்மை வருகின்றது. அந்த வெப்பம் என்ற நிலைகள் சகாதேவன்.

எதன் உணர்வை எடுத்ததோ அதன் வழி செயல்படும் என்ற நிலைகள்.

அதனால் தான் திரௌபதை என்ற நிலைகளுடன் கலந்து கொள்ளப்படும்போது உணர்வின் தன்மை இந்த அர்ச்சுனன் என்ற வலிமையான உணர்வுகள் அது உணர்வின் தன்மை அணுவாகப்படும்போது அது பீமன் ஆகின்றது. வலிமை கொண்ட உணர்வு கொண்டு அதுவே காக்கும் தன்மை வருகின்றது.

அதே சமயத்தில் இதையெல்லாம் சேர்த்து உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது தர்மன் ஆகின்றது. தான் உணர்வின் தன்மை எதை எடுத்ததோ அதைத்தான் வளர்த்துக் கொள்ளும் தன்மை வருகின்றது என்று மகாபாரத்தில் வியாசகர் சாதாரண மக்களும் புரியும்படி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆகவே, நாம் எதை எடுக்க வேண்டும்?
எதை வளர்த்துக் கொள்ள வேண்டும்?
எதை வலுவாக்க வேண்டும்” என்று சிந்தித்துப் பாருங்கள்.

தீமையை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் அடர்த்தியின் நிலைகள் கொண்டு துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வந்து கொண்டயிருக்கின்றது.

அதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சொல்லிச் சொல்லி, திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

அதைப் பெற்று உங்களை அறியாமல் ஆட்டிப்படைக்கும் தீயவினைகள், பாவ வினைகள், சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து விடுபடுங்கள். விஞ்ஞான விஷத்தன்மைகளிலிருந்து விடுபடுங்கள்.

இன்றைய உலகில் தீவிரவாதம் என்ற நிலையில் சிந்தைனையற்ற நிலையில் செயல்படும் நிலைகளிலிருந்தும் உங்களக் காக்க உங்கள் எண்ணத்தால் முடியும்.

துருவப் பகுதியின் வழியாக உற்று நோக்கி
நீங்கள் நுகரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
உங்கள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி
உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும்
மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக அமையும்.
எமது அருளாசிகள்.