நமது வாழ்க்கையில்
அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்து வரப்படும்போது கோபம் என்ற உணர்வுகளை எடுத்தால் என்ன
ஆகும்? நமக்குள் மகிழ்ச்சியுற்ற நிலைகளை இழந்துவிடுவோம்.
பிறரை மகிழச்
செய்யும் நிலைகளையும் இழக்கச் செய்து கோபத்துடன் கொதித்தெழும் நிலைகளில் தாக்கும் உணர்வுதான் நமக்கு வருகின்றது.
இதைப் போல வரும்போது
அந்தக் கோபத்தின் உணர்வையும் நம் உயிர் அது ஈசனாக உருவாக்கி இந்திரலோகமாக மாற்றி நமக்குள்
மகிழ்ச்சி என்ற உணர்வுக்கு மாறாக இரத்தக் கொதிப்பு என்ற உணர்வை உருவாக்குகின்றது.
இதனால் நாம்
அடுத்தவர்கள் மேல் கோபப்படும் உணர்வு உருவாகிவிடுகின்றது.
ஆகவே, நாம்
எண்ணும் உணர்வுகள் எதுவோ அதை பிரம்மமாக மாற்றி அந்த உணர்வின் தன்மை சிவமாக (உடலாக)
மாற்றப்படும்போது புலி எப்படி இரக்கமற்றுக் கொன்று தன் உணவைப் புசிக்கின்றதோ இதைப்
போன்று
மனிதனுக்கும்
கோபம் வந்துவிட்டால்
எதையும் கோபத்துடன்
தாக்கும் நிலையும்
மற்றவரைக் கோபமாகப்
பேசும் நிலையும் அதிகமாகின்றது.
அங்கே சிவன்
ஆலயத்தில் என்ன இருக்கின்றது? நாம் சுவாசித்த
உணர்வுகள் நந்தீஸ்வரா.
நாம் சுவாசித்த உணர்வுகள் உருவாக்கி அதன் வழி அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த
உடலை உருவாக்கும் என்ற நிலைதான் நம் சிவ தத்துவம் தெளிவாகக் கூறுகின்றது.
புலியின் உடலும்
சிவமே. அதனின் கொடூர உணர்வுகள் அது விஷ்ணு வரம் கொடுத்துவிடுகிறான். அந்த பிரம்மலோகமாக
அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உணர்வின் அணுக்களை அங்கே
விளைவிக்கின்றான்.
அதன் வழி உடலாகின்றது.
ஆகவே இது புலியாக
மாறுகின்றது.
புலியாக இருந்த
நாம் இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று சிவன் ஆலயத்தில் மான் புலி யானை என்ற இந்த
உடலை ஆடைகளாக அணிந்தான் என்று சிவ தத்துவத்தில் கூறப்படுகின்றது.
இதைப் போல பலவிதமான
உடல்களை நாம் எடுத்துத் தான் இன்று நாம் மனிதனாக வந்தோம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.
சிவன் என்ன
செய்கிறான் இவ்வொரு மணிக்கட்டிலேயும் விஷத்தின் துளிகளை அந்தப் பாம்பினை அதைக் காப்பாகப்
போட்டிருப்பார்கள்.
கழுத்திலே பாம்பு
ஜடா முடியிலே பாம்பு
கைகளிலே பாம்பு என்ற நிலையும்
எல்லாவற்றிலும் இயக்கம் விஷத்தின் இயக்கமே அனைத்திலும் என்று நாம் அறிந்து கொள்வதற்குத்தான் சிவ தத்துவத்தில்
இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
இதையெல்லாம்
நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம் இனத்தை
மனித இனத்தைக் காத்து, தான் மனிதனான பின் இனி பிறவியில்லா நிலைகள் எவ்வாறு அடைய வேண்டும்
என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
நாம் மனிதனானபின் எதை நுகர வேண்டும்? என்று காட்டியுள்ளார்கள்.
தன்னை அறியாத
நிலைகளில் தீமைகளை நுகர்ந்தால் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
எப்படித் தூய்மைப்படுத்த
வேண்டும்
எப்படி மனதைச்
சுத்தப்படுத்த வேண்டும்
தீமைகள் வராது
நமக்குள் எப்படித் தடுத்தல் வேண்டும் என்பதைத்தான்
இராமாயணம்,
மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம் விநாயக புராணம் என்ற காவியங்கள் உணர்த்துகின்றது.
ஆக, இவ்வாறு
அந்தக் காவியங்களைப் படைத்தவர்கள் மெய்ஞானிகள்.
அதிலே உருவத்தை அமைத்து அருவ செயல்கள் நம்மை எப்படி மாற்றுகின்றது?
வாழ்க்கையின்
எப்படி ரூபங்களை மாற்றுகின்றது?
அடுத்த பிறவிகளை
எப்படி மாற்றிக் கொண்டேயிருக்கிறது?
உடல்களை நமது
உயிர் எப்படி மாற்றுகிறது?
என்பதை நமது காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.