மனிதன் விஞ்ஞான அறிவால்
கண்டுபிடித்த உணர்வு கொண்டு தாவர இனங்களை காய்கறிகளானாலும் சரி, நெற்
பயிர்களானாலும் சரி
நாளைக்குக் காய்கறிகளை விற்க வேண்டுமென்றால்
முதல் நாளே பூச்சி மருந்துகளைப் போட்டுவிடுகிறார்கள்.
நாம் இந்தக் காய்கறிகளை வாங்கி தண்ணீர் விட்டுக் கழுவினாலும் அவை போவதில்லை. அந்தக் காய்க்குள்
அந்த மருந்துகள் கலந்துவிடுகிறது. இதை உணவாக உட்கொண்டால் இந்த விஷத்தின் தன்மை நம்
இரத்தங்களில் கலந்து விடுகிறது.
இரத்தத்தில் கலக்கும் இந்த
விஷங்கள் நம் உடல் உறுப்புகளுக்குள் இணைகின்றது. நம்மையறியாமலே இத்தகைய விஷங்கள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
இந்த விஷத்தின் தன்மை நம்
கல்லீரலில் பட்டால் அது வீக்கமடைகின்றது. எறும்பு கடித்தால் நம் உடலில் எப்படி
வீக்கமடையுமோ அதே மாதிரி அடைந்து கல்லீரல் வடிகட்டும் நிலைகளை மாற்றி உறையும்
தன்மைகலை மாற்றி நமக்குள் மூச்சுத் திணறல் போன்ற நிலைகள் வந்துவிடுகிறது.
இதே போல நுரையீரல், ஈரல் போன்ற
நிலைகளில் விஷங்கள் பாய்ந்தால் ஈரல்கள் வலி எடுக்கும். கொள்ளை நோய் என்று
சொல்வார்கள்.
உணவுக்குள் மறைந்துள்ள நிலைகள்
நம் இரத்த நாளங்களில் கலந்து எல்லா உறுப்புகளுக்குள்ளும் செல்லும்போது நுரையீரல்,
ஈரல், கல்லீரல் இந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் ஏற்க மறுக்கும்போது இந்த
விஷம் அதற்குள் ஊடுருவி விடுகிறது.
இதுதான் ஓமுக்குள் ஓம். இந்த
உணர்வின் தன்மை அணு இரத்தத்தில் கலக்கும்போது சுவாசித்து
அந்த உணர்வின் தன்மையால் நம்
நல்ல குணங்கள் மாறி
வேதனை என்ற நிலைகளை உடல்
உறுப்புகளில் உருவாக்கிவிடுகிறது.
அதைத்தான் கொள்ளை நோய் என்று
சொல்வது.
நாம் தவறு செய்தோமா…? இல்லை.
விஞ்ஞான அறிவினால்
காய்கறிகளில் உள்ள பூச்சிகளைக் கொன்று விட்டால் காய்கள் நன்றாக விளைகிறது.
பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவியபின் (விஷம்) மருந்து
பூச்சிகளைக் கொன்றுவிடுகிறது.
ஆனால், அந்த மருந்து செடிகளில்
கலந்து அதனுடன் இணை சேர்த்து காய்கறிகளுக்குள் விஷத்தைச் சேர்த்து விளையும்படி
செய்துவிடுகிறது.
.முந்தைய காலங்களில் எல்லாம்
காய்கறிகளில் சாதாரண உரங்களைப் போடும்போது சுவையாக இருந்தது. அதே சமயத்தில் காய்கறிகளில்
நோய் வந்தால் அன்று சாம்பலைத் தட்டிப் பொடியாக்கித் தூவிவிடுவார்கள்.
சாம்பல் விஷத்தைக் கழித்தது.
சாம்பலின் நெடி தாக்கும்போது அந்தக் காய்கறிகளில் உள்ள பூச்சிகள் தாங்காது அது
வெளிவந்து விடுகிறது. ஏனென்றால் விஷத்தைக் கழித்த சாம்பலுக்குள் இந்தப் பூச்சிகள் இரையாக்கப்படும்போது
காய்கறிகள் நன்கு விளைகின்றது.
இன்று விஞ்ஞானத்தால்
உருவாக்கப்பட்ட பூச்சி மருந்துகளைப் போட்டாலும் அந்தப் பூச்சிகள் சாவதில்லை. அந்த
(பூச்சி மருந்தையும்) விஷத்தை உணவாக
உட்கொள்ளும் புது விதமான பூச்சிகளாக மீண்டும் பெருகிக் கொண்டேதான் உள்ளது.
ஏனென்றால் அது விஷத்தைத் தாங்கும் சக்தி கொண்டது.
அந்த அளவுக்கு வந்தபின்
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆக, அதைக் கொல்ல இன்னும்
அதிகமான விஷம் கொண்ட மருந்துகளைத் தூவ வேண்டியுள்ளது. அதனால் நாம் உணவாக
உட்கொள்ளும் அந்தக் காய்களுக்குள் விஷம் அதிகமாகிறது.
நாம் பரிணாம வளர்ச்சியில்
விஷத்தைக் கழிக்கும் உயிரினங்களாக வளர்ச்சி ஆகி விஷத்தைக் கழிக்கும் உறுப்புகள்
பெற்ற இந்த மனித உடலில் மீண்டும் விஷத்தைச் சேமிக்கும் நிலை வரும்போது இதனால் என்ன
ஆகும்?
நமக்குள் மீண்டும் விஷங்களைச்
சேமிக்கும் உறுப்புகளாக உருமாறும். அப்பொழுது அதற்குத்தக்க கீழான விஷம் கொண்ட
ஊர்ந்து செல்லும் உயிரினங்களாகத் தான் நாம் பிறக்க நேரும்.
நாம் நம் முன்னோர்கள் காட்டிய மெய்
வழிகளிலிருந்து எப்படி மாறிவிட்டோம் என்று சற்று சிந்தித்துப்
பாருங்கள்.