ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2014

ஈசன் – உயிரின் இயக்கம் எப்படி உருவாகின்றது?

1. ஈசன் – உயிரின் இயக்கம் எப்படி உருவாகின்றது?
விஷத்தன்மை கொண்ட நட்சத்திரத்தின் உணர்வலைகளை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் இன்னொரு விஷத்தன்மை கொண்ட அலைகளை எடுத்து வருகின்றது.

ரேவதி நட்சத்திரம் என்பது விஷத்தன்மை கொண்ட உணர்வலைகளை வளர்ப்பதுதான். கார்த்திகை நட்சத்திரம் என்பது விஷத் தன்மை கொண்ட ஆசைகளை வளர்ப்பதுதான். இவை மிகவும் கடின விஷம் கொண்டது.

அதே சமயத்தில், வியாழன் கோளில்தான் உடல் அமைப்பு கோள்கள் உருவானாலும், அது தனக்குள் கவர்ந்து கொண்ட விஷக் கதிரியக்கங்களை உருவாக்கும் உணர்வுகள் வெளிப்படுவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

இந்த மூன்றில் வித்தியாசம் ஆகப்படும் பொழுது, விஷத்தின் உணர்வின் ஆற்றல் வியாழன் கோளில் உருவாகும் இந்த உணர்வுகள் கண்டபின், ரேவதி நட்சத்திரத்தின் உணர்விகள் அஞ்சி ஓடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வலைக்குள் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி, இந்த விஷத்தின் தன்மை கொண்டு துடிப்பாகும் பொழுது ஒளியின் மின் அணுவாக மாறுகின்றது.
2. உடல் உறுப்பில் மின் அணுவாக மாறுவது - “மின்மினிப் பூச்சி”
மின்னெட்டாம் பூச்சி என்ற நிலைகளைப் பார்க்கலாம். அதன் துடிப்பின் நிலைகள் வரப்படும் பொழுது, அதிலே கலந்த
கெமிக்கலின் தன்மை வரும் பொழுதுதான்
மின்னிக் கொண்டேயிருக்கும்.
இது உடல் உறுப்பில் மின் அணுவாக மாறுவது.

ஆனால், உயிரின் உணர்வுக்குள் துடிப்பாகும் பொழுது, இந்த துடிப்பின் உணர்வாகப்படும் பொழுதுதான் ஒன்றை உருவாக்கும் உயிரணுவாக மாறுகின்றது.

ஆகவே, அதுவும் விஷத்தின் மோதலில் இருளை வென்று ஒளியின் சக்தியாக மாறுகின்றது.

இன்று வைரத்தை எடுத்துக் கொண்டால் இயற்கையில் பகலைப் போன்று மின் அணுவாக மாறுகின்றது. ஆனால், கடும் விஷம் கொண்டது வைரம்.

ஒன்றுடன் ஒன்று மோதி, உணர்வின் நிலைகள் அடக்கப்பட்டதுதான் வைரம்.

அதே சமயத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளை இந்த வைரம் தனக்குள் எடுக்கும் பொழுது
ஒளி அலைகளாக மின்னுகின்றது.
இவையெல்லாம் இயற்கையின் நியதிகள்.
3. துடிப்பால் அறிவின் ஒளியாக மாற்றுவது உயிரின் இயக்கம்
விஷத்தின் துடிப்பு கொண்டு
மின் அணுவாக வரும் நிலைகளில்
உயிர் என்ற நிலைகள் ஊடுருவி,
தனக்குள் சிக்கும் உணர்வுகளை துடிப்பின் நிலை கொண்டு
அறிவின் ஒளியாக மாற்றுகின்றது. இதுதான் நம் உயிரின் இயக்கம்

ஆகவே, அதன் உணர்வின் தன்மை இதனுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது அது எதனால் உருவாக்கப்பட்டதோ அதே உணர்வைத் தனக்குள் எடுத்து
அதன் மலத்தின் தன்மை உயிருடன் ஒன்றி
அடைபடும் பொழுது சிவன் இராத்திரி, சிவமாகின்றது.
இருளுக்குள் மறைந்துவிடுகின்றது இந்த உயிர்.

ஆக, நுகர்ந்த உணர்வின் தன்மையைத் தன் உடலாக மாற்றும் திறன் கொண்டது உயிரின் தன்மை. காரணப்பெயர் ஈசன்.

உள் நின்று ஈசனாக உருவாக்குகின்றது என்பதனை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.