உதாரணமாக, பெண்கள் தங்களது குழந்தைகள்மீது
அன்பாக இருப்பார்கள். பாசமாக இருப்பார்கள். ஆனால், பையன் சேட்டை செய்யும்பொழுது, “சும்மா சேட்டை செய்கிறானே, தொலைஞ்சு போறவன்”.
என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசிவிடுவார்கள்.
தன் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும், கோபத்தில் “தொலைஞ்சு போறவனே..,” என்ற வார்த்தையை சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.
இதே போன்று, மாமியார் மருமகளைப் பார்த்து,
ஒரு வேலையாக “ஏம்மா இப்படிச் செய்கிறாய்.
அதைச் செய்தால் என்ன” என்று, ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லிவிட்டால் போதும்,
உடனே மருமகள் “சும்மா சொல்லிக் கொண்டிருந்தால்
எப்படி? நான்
செய்ய மாட்டேனா எனக்குத் தெரியாதா?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.
ஆக, இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால்,
வீட்டில் பதிந்துவிடுகின்றது. பதிந்தபின்,
இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது. நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது.
வெறுப்பான உணர்வுகள், இருவரிடத்திலும் படரப்படும்
பொழுது, அது அவர்களிடம் விஷ
அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது,
அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு, எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது,
அவர்களது உடலில் அரிப்பு வரும் சில வீடுகளில் சங்கடமும், சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு
உடலில் அரிப்பு வரும். பார்க்கலாம்.
அதுவும் சிறிது நாள் சென்றால், அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக
மாறிவிடும். வீட்டில், சஞ்சலமும்,
சலிப்பும், சங்கடமும், வேதனையும் கொண்டவர்களுடைய தலையில் நிச்சயம் பேன் வரும்.
சந்தோஷத்தை உருவாக்கிப்
பாருங்கள். பேன் இருக்கும் இடம் தெரியாமல்,
காணாமல் போய்விடும். ஏனென்றால், “பேனிற்கு” மனிதரின் சந்தோஷமான
உணர்வுகள் எதிரி.
வீட்டில் சலிப்பு, மாமியாரின் கோபம், பையனின் சேட்டை, கடை வியாபாரத்தில் மந்தம்,
பக்கத்து வீட்டுக்காரரின் வம்பு, என்று பலவற்றை
எண்ணி, சலித்து, வெறுத்துப் பேசிக்
கொண்டிருந்தால் போதும், நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.
அந்தப் பேன் அவர் தலையை
விட்டு இறங்கினால், அடுத்து
சஞ்சலம் கொண்ட இன்னொருத்தரிடம்தான்
போகுமே தவிர, மற்றவர்களைப் பார்த்தால் அஞ்சி ஓடிவிடும்.
ஒரு வீட்டில் நாலைந்து
பேர் இருந்தாலும், சஞ்சலம்
கொண்டவரிடத்தில் மட்டுமே, பேன்கள் உருவாகும்.
இது எதனால் ஆனது? நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சையும்,
நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும், சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது. மீண்டும், அதை நம்முள் சேர்த்தவுடனே, அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
நம் உடலிலிருந்து வந்தது,
நம் உடலிலேயே பாய்கின்றது.
இந்த உணர்வின் தன்மையை
ஒட்டி இதனுடைய சக்தியை எடுத்து, அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து,
சாப்பிட ஆரம்பிக்கின்றது. இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.