யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்கின்ற பொழுது, உங்கள் எண்ணத்தின் செவிப்புலனால் ஈர்க்கப்படும் இந்த நிலையில் நீங்கள்
சுவாசிக்கும் நிலைகள் சத்தாகின்றது.
நீங்கள் சுவாசித்தது சத்தானாலும், யாம் உபதேசிப்பது உங்களால், புரிந்து கொள்ள முடியாதவையாக இருப்பினும், யாம்
உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறியும் பொழுது, அதனின் உணர்வுகள்
உங்கள்
உடலுக்குள் ஊடுருவும் நிலையும்,
உடலுடன் இணையச்
செய்யும் நிலையுமாக,
இது
உருவாகின்றது.
இவ்வாறு இணைத்திட்ட நிலைகள் கொண்டு, ‘’அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும்’’
என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வின்
ஈர்ப்பான சக்தி நீங்கள் நுகர ஏதுவாகின்றது.
ஆக, அந்த அருள் ஞானிகள் இந்த உடலின் தன்மை ஒளியாக மாற்றிய, உணர்வின் ஆற்றல் இங்கே மிதந்து கொண்டிருப்பதை அதை நீங்கள் கவர்ந்து, மீண்டும் அதனின் இணைப்பாக உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.
இந்தச் சரீரத்தை
அழியா சரீரமாக, செய்ய வேண்டுமென்றால் அதையும், இந்தச் சரீரத்தில் தான்
செய்ய முடியும்.
நமது குருநாதர் மெய்யுணர்வைக்
கண்டறிந்தார்.
மெய்ஞானிகளின் உடலில் விளைந்த,
தீமைகளைப் போக்கி, மெய்யுணர்வை வளர்த்து,
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சென்ற
அவர்களது
நினைவின் அலைகளை
எமக்குள்
பதியச்செய்தார்.
மனித வாழ்க்கையில் வரும் இருளை வெல்லச் செய்து, மெய் உணர்வின் தன்மையை எம்மிடத்தில் வளர்த்து,
எம்மை மெய்ஞானியாக உருவாக்கினார்.
அந்த நிலையை நீங்களும் பெறவேண்டுமென்று, உங்கள் அனைவரையும் கூட்டமைப்பாக உருவாக்கி, அந்த மெய்ஞானிகளின் அருளுணர்வை உங்களிடத்தில் பெறச்செய்கின்றோம்.
ஆகவே, மெய்யுணர்வைப் பெறும் வகையாக, மெய்ஞானிகள் காண்பித்த
அருள்வழியைப் பின்பற்றிச்
செல்லும் "உங்கள் அனைவருக்கும்" எல்லாம் வல்ல ஆற்றலாக அந்த மெய்ஞானிகளின் அருளாற்றல் கிடைக்கட்டும்.
அதை நீங்கள் பெற்று,
‘’என்றும் 16’’ என்ற ஒளிச்சரீரத்தை
இந்த
சரீரத்திலேயே நீங்கள் பெறவேண்டுமென்று,
எமது
அருளாசியை வழங்குகின்றோம்.