ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2014

ஈசன் (உயிர்) போய்விட்டால் நீசத்திற்கு "வேலையே இல்லை"

உதாரணமாக நாம், நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது, அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில் நம்மைவாங்க..,” என்று அழைக்காது விட்டுவிட்டால் போதும்.

நமது மனதில், “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார், வீடு தேடி வந்திருக்கிறேன். கொஞ்சமாவது மதிக்கிறானா?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.
நம்மை மதிக்கவில்லையேஎன்று எண்ணும் பொழுது,
வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.

வாங்கஎன்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ, அந்த மனிதருடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை, நாம் அறிய முடியாதபடி நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

நண்பராக இருந்து அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் இருந்தாலும், அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன், இந்த உடலைவிட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.
நாம் எத்தனை கௌரவம்,
எத்தனை துணி,
எத்தனை அலங்காரம்,
எத்தனை சுகமான நிலை,
எத்தனை பஞ்சு மெத்தை போட்டு வைத்ததிருந்தாலும்,
இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போய் எரித்துவிடுவார்கள்.

நாம் இங்கு பார்க்கும் கௌரவம் எல்லாம்,
இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ?
ஆனால், இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்,
மண்ணைக் கொட்டும் போதும்
பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

"ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்கிறோமோ?
ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால், நாற்றம் அடிக்கும்
தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது, இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி, அந்த மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்த கௌரவப் பிரச்னை”, நமக்குள் நிறையவே உண்டு.

ஏனென்றால், நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப்பண்ணினாலும் சரி? உடனே போர் முறைதான். நான் சொன்னேன், கேட்கவில்லை. உடனே போர்முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை. உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி விட்டால், அதே உணர்வு, என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.

இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். ஆக, எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ, அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்காகத்தான், உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து, வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.