ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2014

கடவுளின் அவதாரம் - நரசிம்மா

ஒன்பதாவது அவதாரம் – நரசிம்மா
1. பார்வதி பஜே நமச்சிவாய
மனிதனான நாம் அன்பும் பண்பும் கொண்டு வாழ்கிறோம். நமது நண்பர்களோ, அல்லது உறவினர்களோ வேதனைப்படுவதை நாம் பார்த்தால், நாமும் அந்த வேதனையை நுகர நேருகின்றது.

அதே சமயம், உணர்வின் ஈர்க்கும் காந்தத்தால் மோதும் பொழுது அணுவின் தன்மையாக உருவாக்குகின்றது. அதே நிலைகள் மீண்டும் பிரம்மமாக்கிவிடுகின்றது.

அந்த வேதனையான உணர்வுகளை, வேதனையை உருவாக்கும் அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கிவிடுகின்றது நமது உயிர்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் சென்றபின்,
அணுக்களை சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.
இதைத்தான், “பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள்.

கண்களால் பார்க்கப்படும் தீமையின் உணர்வுகள்
உயிரில் மோதும் பொழுது,
உணர்வின் தன்மை இயக்கப்பட்டு,
அந்த உணர்வின் இயக்கமாக, “பஜே நமச்சிவாய”
இந்த உடலுக்குள், அதனின் உணர்வை இயக்கும்
உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக அமைந்துவிடுகின்றது
என்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.
2. இரண்யன் இந்திரலோகத்தில் புகுந்து ஆக்கிரமிக்கின்றான்
வேதனையின் உணர்வை நாம் நுகர்வதினால், விஷமான உணர்வின் அணுக்கள் நமது உடல் முழுவதும் படர்கின்றது. நல்ல காரியங்கள் செய்வதற்கும் தடை ஏற்படுகின்றது.

விஷமான உணர்வின் தன்மைகளை, இரண்யன் என்று காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

உடலான இந்திரலோகத்திற்குள் விஷமான உணர்வின் தன்மைகளான இரண்யன் புகுந்து, நல்ல செயல்கள் நடைபெறமுடியாதபடி தடை ஏற்படுத்துகின்றான் என்று, ஞானிகள் நன்கு தெளிவாக்கியுள்ளனர்.

வேதனை உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிட்டால், அவைகள் இந்த உடலில் தன் உணர்ச்சிகளை உந்துகின்றன. அதாவது, தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் நம் உடலில் விளைந்துவிட்டால், அது நம்மிடத்தில் வேதனையை உருவாக்குகின்றது.
3. சிவன் (நம் உடல்) வருவதையெல்லாம் அரணைக்கின்றான்
இதனால், நல்லதைச் செய்ய முடியாதபடி இருக்கின்றதே, சிவமே, என்று இந்த உடலில் உணர்ச்சிகளைத் தூண்டி அறிவிக்கின்றது,  நமது இந்திரலோகத்து அவயங்கள்.

இதனை ஞானிகள்,  ‘’தேவர்கள் சிவனிடம் முறையிடுவதாகக் காண்பித்தார்கள்.

அதற்கு சிவன், எனக்கு வருவதை அணைக்கத்தான் தெரியுமே தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது’’, என்று அவர்களுக்கு பதிலளிப்பதாக ஞானிகள் நமக்கு தெளிவாக்கியுள்ளார்கள்.

அதன் பின், வரம் கொடுப்பவன் விஷ்ணு. ஆகவே அவனிடம் செல்வோம் என விஷ்ணுவிடம் வருகின்றனர். உயிரிடம் வேண்டும்படி கேட்கின்றனர்.
4. விஷ்ணு (நம் உயிர்) வரம் கொடுக்கின்றான்
இந்திரலோகத்தினுள் இரண்யன் புகுந்து எங்களைச் செயலற்றதாக ஆக்குகின்றான் நீங்கள் கொடுத்த வரத்தால், ‘’விஷ்ணுவே..!  பரந்தாமா..! எல்லாவற்றையும் உருவாக்கும் நிலைகள் கொண்டு, நீ வரம் கொடுத்த தன்மையால் இரண்யன் தரும் துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லையே’’ என்று கதறுகின்றனர்.

அதற்கு விஷ்ணு, “நான் என்ன செய்யமுடியும்? என்னால் வரம்தான் கொடுக்க முடியும் என்று சொல்லுகின்றார்.

‘’பிரம்மா உருவாக்குகின்றான்’’, அவனிடம் செல்வோம், அவன் அதற்கு உபாயத்தைச் சொல்வான் என்று பிரம்மனிடம் செல்லுகின்றார்கள்.
5. பிரம்மா உருவாக்குகின்றான்
அங்கே பிரம்மனிடம் சென்றாலோ, ‘’என் தந்தை விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட நான், அவர் இட்ட கட்டளைகளைச் செய்தே ஆகவேண்டும். நான் உருவாக்கவில்லையென்றால் உலகம் உருவாகாது’’ என்று பிரம்மனும் சொல்கின்றார்.

எதனின் உணர்வின் தன்மை பெற்றதோ, இன்று ஒரு நெல்லின் நிலைகள் உருவாக்கினால் அது உணர்வின் தன்மை பதிவு செய்தால்தான், அந்த நெல்லின் தன்மை உருவாகும்.

ஆக நான் எண்ணினாலும், என் தந்தை சொல்லை மீறாமல் என்னை எந்த வழியில் உருவாக்கினாரோ அந்த குணத்தின் இனத்தை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கமுடியும்.

நான் என் பணியில் தவறினால் உலகம் உருப்பெறாது, வாழவைக்க முடியாது என்று பிரம்மன் கூறுவதாக, அங்கே தெளிவாக்குகின்றார்கள்.

இந்திரலோகத்திற்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் வரும்பொழுதும், நல்ல உணர்வின் தன்மை அழியப்படும்பொழுதும்,
சிவனும், விஷ்ணுவும், பிரம்மாவும்
என்ன உபாயங்கள் செய்கின்றார்கள்?ன்ற நிலைகளை
கேள்வி பதில்களாக அமைத்து,
நாமெல்லாம் அறிவதற்கு
காவியத் தொகுப்புகளைத் தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்
6. கண்ணனுக்குத்தான் (நம் கண்கள்) எல்லாம் தெரியும்
அப்போது இவையெல்லாம் கண்ணனுக்குத் தான் தெரியும். ஆகவே அவரிடம் சென்று கேட்போம், அவர் சரியான உபாயத்தை கொடுப்பார், என்பதை விளக்குவதற்காக காவியமாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

ஏனென்றால், கண் தோன்றியபின் எதைக் கூர்மையாகப் பார்த்து, உணர்வின் தன்மையைக் கவர்ந்து, தமக்குள் இந்திரலோகத்தை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டு,
இந்த உலகையே சிருஷ்டிக்கும் வல்லமை கொண்ட
மனிதனின் ஆறாவது அறிவாகவும்,
தீமைகளை வென்றிடும் மனித உருவை உருவாக்கியது
என்ற நிலைகளை அங்கே தெளிவாக்குகின்றார்கள்.
அப்போதுதான் கண்ணனிடம் செல்கின்றார்கள், 

கண், தான் தோன்றியதிலிருந்து ஒவ்வொன்றையும் காத்தருளும் உணர்வை அறிவாக ஊட்டி, அதனிலிருந்து விலகிச் செல்வதும், நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் வளர்வதற்கும் மூலகாரணமாக இருப்பது கண்கள்.

மனிதன் வரையிலும் வளர்த்தது இந்தக் கண்களே.
ஆகையினால் அனைத்தும் அவனுக்குத் தெரியும்.
அவனிடம் செல்வோம். அவனிடம் உபாயம் கேட்போம்.
அவன் காட்டும் வழியில், நாம் செல்வோம் என்ற நிலைகளில்
பிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும் அவனிடம் செல்கின்றார்கள்.

யாரிடம் செல்கின்றார்கள்?

நமது கண்களிடம் உணர்வின் நிலைகளை முறையிடும்படி செய்கின்றார்கள்.
7. "அதோ.., வருகிறான்!" ரிஷியின் மகன் நாரதன்
இந்திரலோகமாக உடலின் செயலாக்கங்களை, மனிதன் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு, எப்படித் தெளிவாக்க வேண்டும் என்று நமது காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை நாம் யாரும் பயன்படுத்தவில்லை.

ஞானிகள் காண்பித்த அருள்வழிப்படி, 
வானை நோக்கச் சொல்கின்றான்,
‘’அதோ வருகிறான் ரிஷியின் மகன் நாரதன்,  அவன் சூரியனின் அபிமானபுத்திரன்.

ஆக மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று, தமக்குள் தீமையை வென்றிடும் நிலைகளை சிருஷ்டித்துக் கொண்டவன், துருவ மகரிஷி.

தீமைகளை வெல்லும் உணர்வின் தன்மை, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவருவதை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், ரிஷியால் உருவாக்கப்பட்ட குழந்தைதான், நாராயணனின் அபிமானப்புத்திரன் ஆகின்றது.

சூரியன், தான் ஒளியின் சிகரமாக இருந்து, ஒன்றைத் தான் கவர்ந்து, மற்றொன்றை எப்படி இயக்குகின்றதோ, இதைப்போன்று மனிதனானபின்,
துருவ நட்சத்திர உணர்வின் ஒளிகளை எவர் நுகர்கின்றாரோ,
அவரின் உணர்வுகள், தீமைகளைப் பிளந்து,
உண்மைகளைத் தனக்குள் உணர்த்தும் என்று
இந்தக் கண்கள் அதைக் காட்டிக் கூறுகின்றது.

அப்போது பிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும் ‘’ஐயோ, அவன் கலகப்பிரியன் ஆயிற்றே, கலகங்கள் இனி என்ன நடக்கப் போகின்றதோ’’ என்று அஞ்சுகின்றனர்.
8. கலகப்பிரியன் நாரதன்
தற்கு கண்ணன் சொல்கின்றான்,  ‘’கலகம் நன்மையில் தானே முடிகின்றது. தீமையல்லவே’’ இதையெல்லாம் உணர்த்துகின்றனர் ஞானிகள்.

நம்மிடத்தில் சேர்ந்துள்ள வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்திருக்கும் நிலையில், கண்ணன் காட்டும் வழியில், துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து நம்முள் இணைக்க வேண்டும்.

அப்படி இணைக்கும் பொழுது,
நம்முள் விளைந்துள்ள  வேதனையின் உணர்வுக்கும்
துருவ மகரிஷிகளின்  அருள் உணர்வுகளுக்கும்
போராகி, கலகப்பிரியனாகி விடுகின்றது.
இதெல்லாம் ஞானிகள் நமக்கு உணர்த்திய நிலைகள்.
9. தீமைகளைப் பிளத்தல் - நரசிம்மா
ஆக கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, மகாஞானிகளின் அருளுணர்வுகளை நம்முள் செலுத்தும்பொழுது, நம்முள் ஞானியின் உணர்வுகள் பிராணாயாமம்.

ஒரு பானைக்குள் போட்டு வேக வைக்கும்போது
அதனின் சத்து கொதித்து,
அதனின் மணம் வெளிவருவதைப் போன்று, நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி, நம் உடலுக்குள் சேர்க்கும்முன், நம் ஆன்மாவாக, மணமாக மாறுகின்றது.

ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, கண்ணின் நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி, ‘’மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவான்மா பெற வேண்டும்’’ என்று
கண்ணான  கண்களின் நினைவலைகளை
உட்புறமாகச் செலுத்தப்படும்போது,
நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்.
அவ்வாறு எண்ணிய உணர்வுகள் ஜீவன் பெற்று,
அந்த மணத்தின் வீரியத்தின் தன்மை
உள்நின்று வெளிவருவதை,
நாம் வேதனைப்பட்ட உணர்வை ”பிளக்கின்றது.
ஆகவே, ‘’உயிரான அவன், வாசற்படி மீது அமர்ந்து, இரண்யனை மடிமீது அமர்த்திப் பிளந்தான்’’ என்று எடுத்துரைக்கப்பட்டது.
10. துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் ஆன்மாவாக ஆக்க வேண்டும்
இதுதான்,  கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, அருள்மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணும்போது
உயிரான நிலைகள் ‘’’’ என்று பிரணவமாகி,
நுகர்ந்த உணர்வின் சக்தி பிரம்மாவாகி,
உடலுக்குள் அனைத்து நிலையும் இணைத்து, சிருஷ்டித்து
அதனின் ஜீவனாகி, ஓங்கி, விண்ணின் வீரிய சத்தாக,
உள்நின்று வெளிப்படும் உணர்வின் துணை கொண்டு,
வளர்ந்திருக்கும் தீமையைப் பிளந்து,  
நாம் மகாஞானியின் உணர்வை நேர்முகமாக உள்சுவாசித்து  
தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு,
நமக்குள் அருள் உணர்வின் தன்மையை சேர்க்கும் நிலைதான்
‘’நரசிம்ம அவதாரம்’’ என்கிறோம்.
 
துருவ நட்சத்திரத்திலிருந்தும்,
சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்
வெளிப்படும் உணர்வின் ஒளியலைகளை,
நமக்குள் கவர்ந்து, நம் ஆன்மாவாக மாற்றி,
நம்மில் வந்து மோதும் தீயஉணர்வுகளைப் பிளந்து, உயிரில் இணையும் உணர்வினை ஒளியின் உணர்வாக இணைக்கவேண்டும்.

தீமைகள் என்றும் நம்முள் நுழையாதபடி, தடைப்படுத்திடல் வேண்டும். இவ்வாறு, தீமையின் தன்மை நம்முள் நுழையாதபடி தடைசெய்வதைத்தான், ‘’நரசிம்மன்’’ என்றார்கள் ஞானியர்கள்.