1. குருநாதர்
காட்டிய அருள் வழி
பிறர் குறை செய்வதைப் பார்த்தவுடன், ‘’நீ குறை செய்கிறாய்’’ என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் அதைப்போல நமக்குள் அந்தக் குறையான உணர்வு வரப்படும்போது,
அது நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி, ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படித் தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு நாமே
நம்மைக் கோபப்படச் செய்யும்,
குரோதப்படச் செய்யும்,
வேதனைப்படச் செய்யும்,
சோர்வடையச் செய்யும்,
இந்தக் குறைகளை நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த
வேண்டும்.
அதைத் தடுத்து
நிறுத்துவதற்குத்தான், நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழி
நமது குருநாதர் அருளான அந்த அருள் ஒளிப்படி, மெய்ஞானிகள் வளர்த்து, அவர்கள் உடலில் விளையவைத்த சத்துக்கள் நம் பூமியிலே படர்ந்திருக்கின்றது.
அந்த மெய்ஞானிகள், சப்தரிஷி
மண்டலங்களில் மண்டலங்களாக இருக்கின்றார்கள். அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து நீங்கள் சக்திகள் பெறுவதற்கு, யாம் சதா உபதேசத்தின்
வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
இந்த உணர்வை எடுப்பதற்கு, ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, அது உங்களுக்குள் உள்ள மனக்கலக்கத்தைத்
தடுத்து நிறுத்த உதவும்.
2. வேக வைத்துத்தான்
எதையும் உட்கொள்ள வேண்டும்
அதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், நம் உடலுக்குள் வியாதியாகி நம் உடலுக்குள் விளைய ஆரம்பித்து
விடுகின்றது. அவ்வப்பொழுது,
உடனுக்குடன் நாம் அதைத் துடைக்க
வேண்டும்.
உங்களுக்கு, எந்த சந்தர்ப்பத்தில் துன்பங்கள்
நேர்ந்தாலும், அடுத்த கணமே நீங்கள் ஆத்மசுத்தி செய்தீர்கள்
என்றால், மனபலம் கிடைக்கும். ஆக, நம் உடலில் பின்னால் வரக்கூடிய துன்பத்தை,
முன்னாடியே தடுத்து நிறுத்திவிடலாம்.,
கெட்டதை முதலில் நாம் அறிந்து கொள்கின்றோம். அதாவது, கருணைக் கிழங்கிலே விஷம்
இருக்கின்றது என்று அறிந்து கொள்கின்றோம். அதை வேக வைத்து நீக்குகின்றோம்,
ஒருவர் கெட்டவர் என்று, நாம் எண்ணுகின்றோம். அவருடைய எண்ணங்களை நாம் மனதிலே
எண்ணும் பொழுது, அவர் செய்கையினுடைய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி, அந்த
உணர்வுகள் வந்து, அவரைக் குறையாகப் பேச வைக்கின்றது.
அப்படிக் குறையாகப் பேசும் பொழுது, அந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறுகின்றது.
ஆக, நம் உடலுக்குள் நாம் விஷத்தைச் சேர்த்துக் கொள்கின்றோம்.
இப்பொழுது, கருணைக் கிழங்கில் விஷம்
இருக்கிறது என்று தெரிகிறது. அதை வேக வைத்துத்தான், நாம் சாப்பிடுகின்றோம்.
அதைப் போல, ஒருவரிடத்தில் நாம் குறை
காணும் பொழுது, அந்தக் குறையான
உணர்வின் விஷத்தை நாம் நேரடியாக உட்கொள்ளாதபடி, ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அந்தக் குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ, யார் மேலே காணுகின்றோமோ,
அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், அதன்
வீரியம் நம்மைப் பாதிக்காது.
ஆத்ம சுத்தி செய்து, நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதைப் போன்று
எண்ணிப் பழக வேண்டும்.