1. குரு அருளைப்
பெற்ற நாம் எப்படி வழியறிந்து செயல்படவேண்டும்?
குரு
அருளைப் பெற்ற நாம், வழியறிந்து செயல்படும், தன்மையும் பெறவேண்டும். எதனை,
எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அந்த
நிலைகள் கொண்டு, சந்தர்ப்பம் ஏனென்றால்,
அழுத்தமான
நேரங்களில்,
சிலருடைய
உணர்வுகளை மாற்றும் நிலைகள் வேறு.
நமது
உணர்வின் உணர்வுகளை,
ஒருவர்
ஏற்றுக் கொள்ளும் அழுத்தம்,
ஏற்றுக்
கொள்ளும் பண்பு, அங்கு குறைந்து இருந்தால்,
அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ
நிலையை,
ஈர்க்கும் மனம் பெறவேண்டும்.
ஆகவே, அந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுகளைச் சமப்படுத்தி வெளிப்படுத்தும் பொழுது, அங்கு பதிவாகும். பதிவானால், உற்று நோக்கும் நிலை வரும்.
கண்ணாடியில், எழுத்துக்களைச் சீக்கிரம் எழுதிவிடலாம் என்று, தட்டுதலை
அழுத்தமாகத் தட்டிவிட்டால், எழுதும் தன்மையே போய்விடும். கண்ணாடி உடைந்துவிடும். ஒரு
கண்ணாடியைப் போன்றுதான், ஆன்மாவின் செயலும்.
பல
உணர்வுகள் அழுத்தமாக இருக்கும் பொழுது, சொல்லின் தன்மையானபின், மோதல் அதிகமானால், இதனுடைய அழுத்தம், முன்பகுதியில் அழுத்தமாகச் சென்று, வெறுப்பின்
தன்மையில், மனம்
உடைந்து சிதறிவிடும். உண்மையின் உணர்வு, பதிவாகும் தன்மையும் இழந்துவிடும்.
உணர்ச்சியின் உணர்வுகளின் தன்மையையும்
நாம் அறிதல் வேண்டும்.
ஏனென்றால், நமக்குள் இருக்கும் உணர்வுகள் எத்தனையோ, அதனுடைய வேகத் துடிப்பு இருக்கும் பொழுது, நீங்கள் ஏற்றுக் கொள்ளும் நல்ல பண்பினை,
உங்களுக்குள் புகாது,
உங்களையே, உங்களுக்குள் நின்றே,
எதிரிகளை அதிகமாக்கும்.
நீங்கள் ஏற்றுக் கொண்ட, பண்பின் உணர்வினை,
அது, அழுத்தமாகச் சொல்வதற்கு பதில்,
இது உங்களுக்குள் உருவாகி,
உணர்வின் சொல்லால் வெளிவருவது,
அழுத்தத்தின் தன்மை அதிகமாக வந்துவிடும்.
2. அருள் ஒளியைக்
கூட்டும் அழுத்தம்
நீர்க் குழாய்களின் முகப்பில் சிறுத்துவிட்டால், அழுத்தத்தின்
தன்மை அதிகமாகிறது. ஒரு பாத்திரத்தை அங்கு வைத்தால்,
பாத்திரத்திற்குள் விழுந்து, நிறைவது
மாதிரி இருக்கும். ஆனால், வெளியில் போய்க் கொண்டே இருக்கும்.
பாத்திரம்
நிறைவதற்கு நேரமாக, இதனுடைய அழுத்தம் அதிகமாகும் பொழுது, வேகத்துடிப்பு
வந்து, பாத்திரம்
நிறைந்துவிட்டது என்று எண்ணுவோம். இந்த வேகத்தின் அழுத்தத்தைக் கொண்டு, பாதிதான்
பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். மீண்டும், அதனுடைய அழுத்தத்தைக் குறைத்தால், பாத்திரத்தை
நிரப்பலாம்.
மீண்டும், அதே
அழுத்தத்தைக் கொடுத்தால் என்னவாகும்? தண்ணீர் மீண்டும் வெளியேறும். நேரத்தை வீணாக்கியதுதான்
மிச்சம். இதை எதற்குச் சொல்லுகின்றேன் என்றால்,
சிலர், சில உணர்வுகளில் இருக்கலாம்.
அந்த உணர்வுடன் இருக்கும் பொழுது,
அழுத்தத்தின் நிலைகள் அதிகமானால்,
உணர்வுகள் உட்புகாதபடி, வெளியில் தள்ளிக் கொண்டே இருக்கும்.
நம் சொல்லின் தன்மைகள், அங்கே ஏற்காது,
வெளியில் தள்ளிக் கொண்டே
இருக்கும்.
அங்கே உள்ளே சென்றால் தானே, தங்கும்.
எவ்வழியிலும்
சரி, நீங்கள்
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, வெறுப்படைந்துவிட்டால், அது பார்க்கும் நிலையே மறந்துவிடும். வெறுப்படைந்து
பாருங்கள். சாமானுடைய தரத்தை மறந்து, நமக்கு என்ன? என்ற நிலைகளில் மீண்டும் அது சுத்தமாகவே மறந்துவிடும். அதே
சமயத்தில், சொல்லின்
ஒலிகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை உள்ளே வந்தவுடன்,
இதை ஏற்றுக் கொள்ளாது,
உள்ளே மாற்றும்.
அதே
சமயத்தில், உடலுக்குள்
சுவாசித்து, உள்ளே
செல்வதை, அழுத்தத்தின்
தன்மை நிறுத்திவிடும். உணர்வின் தன்மை அழுத்தமானபின், சுவாசிக்கும்
நிலை வரும் பொழுது, ஏதாவது உணவு உட்கொண்டாலும்,
சுவையை மாற்றிவிடும்.
சுவை மாறும் பொழுது, ஏங்கி பெறும் அணுக்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உணர்ச்சிகள் வரும். பின், அந்த உணர்ச்சியின் தன்மை, பெறுவது தடைப்பட்டால், சோர்வின் தன்மை வரும்.
நம்மையறியாமலே, இத்தனை உணர்வுகள், நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
இதைப் போன்ற நிலைகளை, நாம் பிளத்தல் வேண்டும். அருள் ஒளியைக் கூட்டுதல் வேண்டும். அதனுடைய அழுத்தத்தின் தன்மையைக் கூட்டி, இந்த அருள் உணர்வின் நிலைகளாக, வெளிப்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.