இன்று மனித
வாழ்க்கையில் நாம் எவ்வளவு திடசாலியாக இருந்தாலும்,
“நாம் எதையும் சாதிப்பேன்”
எப்படியும் செய்வேன் என்று வலுகொண்ட மனிதனாக
இருந்தாலும், ஒரு சமயம்
அச்சுறுத்தும் தன்மை கொண்டு, ஒரு பயத்தைப் பற்றிய கதையை பேசிக் கொண்டிருக்கின்றோம், என்று
வைத்துக் கொள்ளுங்கள்.
அவர்
மிகவும் தைரியசாலிதான், கெட்டிக்காரர்தான், இருந்தாலும், நாம் இங்கே பேச்சுவாக்கிலே “இரண்டு மூன்று பேர் ஒரு மரத்திற்கு அடியில் போனவுடன், திடீரென்று
ஒரு ஆவி வந்து, இவர் உடலிலே
புகுந்து, பல இம்சைகள்
செய்தது” என்று நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அதே சமயம்
இன்னொருவர் வலுவானவர், “அது உங்களுக்கு தேவையே இல்லை, எதை எடுத்தாலும் பேய்
இருக்கிறது, எந்த பேய்யா
இருக்கின்றது?”
என்று, தன் வலுவான உணர்வுடன்
கலந்து பேசிக் கொண்டிருப்பார்.
“இல்லை ஐயா, அங்கே
போனவுடன், சல சல என்று
சத்தம் கேட்கின்றது”. “கேட்டவுடன், அப்படி வந்து ஆவி
பிடிக்குதுங்க. இப்படி நிறைய பேரைப் பார்த்தோமுங்க”, என்பார்.
“அடப் போய்யா, எங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும்”, என்று வலுவானவர் சொல்லிக் கொண்டே வருவார். இவர் சொல்லச் சொல்ல, இங்கே ஏறிக் கொள்ளும்.
இந்த உணர்வு
அதிகமான பின், இவர் எந்த
மரத்தைச் சொன்னாரோ, அந்த
மரத்திற்கு அருகில் போனவுடன், சும்மா எலியோ, அல்லது ஏதாவதொன்று, சல சல என்று சத்தம் கேட்டால் போதும், உடனே
இவருக்கு, அவர் சொன்ன நினைவு வந்துவிடும்.
திடுக்… திடுக்…. என்று, அந்த நினைவின் மேலே எண்ண ஓட்டத்தைச் செலுத்திவிடும். அப்பொழுது
எதிர்பார்க்காமல், சத்தம் வந்தால், “ஆ” என்றால் போதும்,
ஆக, இவர்
எவ்வளவு வலுகொண்டு இங்கே மறுத்தாரோ,
வலுகொண்டு
மறுத்த அந்த உணர்வுகள்,
அவருக்குள்
இந்த பயத்திற்குள்
இந்த காந்தம், அந்த உணர்வுக்குள்
துடுக் … துடுக் …. என்கிறபோது,
கரண்டில், எர்த் பாஸான மாதிரி
அந்த ஆவி இங்கே வந்துவிடும்.
நான் என்ன சொன்னேன்? இந்த மாதிரிப் பண்ணிவிட்டார்கள் என்று வீட்டிலே
சொந்தக்காரர்களோ, மற்றவர்களோ அதை எண்ணும்போது,
இதே எண்ணத்திலே இருக்கும்போது, அவர்கள்
எண்ணினால், அந்த
உயிராத்மா என்ன செய்யும்? அவர்கள் உடலுக்குள் போய்விடும்.
அவர்கள்
எண்ணும்போது, “எனக்கு இப்படிச் செய்தார்களே, பாவி” என்று உணர்வைக் கூட்டி இறந்துவிடுவார்கள். ஆனால், உடலுடன்
இருப்பவர்கள் நான் என்ன சொல்லிவிட்டேன்? இந்த மாதிரி பண்ணிவிட்டது,
என் மேலே பழியைப் போட்டுப் போய்விட்டானே என்று
அவர்கள் எண்ணுவார்கள்.
ஆக, உணர்வின் நிலைகளுடன் போனவுடன், அந்த ஆத்மா அங்கே போய், பழிதீர்க்கும் உணர்வுடன், அங்கே ஆட்டிப்படைக்கும். சொல்லிவிட்டுச் செத்தவுடன், அதே மாதிரி பல உணர்வின் அலைகள் இங்கே வந்தவுடன், காந்தம்
இழுத்து, அந்த ஆத்மா அங்கே போய் என்ன செய்யும்?
அதையும்
பிழைக்கவிடாதபடி, அழித்துவிடும். “ஏனென்றால், மனிதனுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் அலைகள், அப்படித் தான் இயக்கும்”
ஏனென்றால், உயிரின்
துடிப்பு கொண்டு, இந்த உடலிலே எதை வளர்த்துக் கொண்டோமோ, இந்த
உணர்வின் அலைகள் நாம் எப்படி கம்ப்யூட்டர், சூப்பர் கம்ப்யூட்டர் என்று சொல்கின்றோமோ,
ஒரு உயிரான
துடிப்பிற்குள்
உயிரணுக்கள், நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்,
மனிதனுக்குள்
எடுத்துக் கொண்ட
ஒவ்வொரு
உணர்விலும் வளர்த்துக் கொண்ட,
அந்த எண்ண
அலைகள்
தனக்குள்
சமைத்த, அந்த
உணர்வின் அணுவின் திசுக்கள்
அதை அலைகளாக
மாற்றி,
இப்பொழுது
இருப்பது, ஒரு அலையாக இருக்கின்றது.
ஆனால், அதே சமயம்
அணுக்களின் நிலைகள், சிலிக்கானுடைய தன்மைகளை,
கம்ப்யூட்டரில் போட்டவுடன், எதை
எதையெல்லாம் பதிவு செய்வதற்காக வேண்டி, இந்த உணர்வலைகளை பாய்ச்சப்பட்டு, சிலிகான்களாக
பதிவு செய்கிறோமோ, அதேபோல,
எண்ணத்தின் உணர்வலைகள்
நமக்குள் சிலிகான்களாக மாறுகின்றது.
ஆனால், அதே சமயம்
உயிருடன் துடிப்பு கொண்டிருக்கும்போது அதே உணர்வலைகள் கொண்ட, ஒரு காந்தத்தின் அலைகள் மோதியவுடன், இந்த
அலைகளில் தொடர் கொண்டு அந்த ஆத்மாவை இழுத்துவிடும். ஏனென்றால், இந்த அலைகள் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும்.
இதைப்
போன்றுதான், இன்று
விஞ்ஞானத்தில் எப்படி இருக்கின்றதோ, அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வின் தன்மைகளும்
இதுவே. இப்படித்தான், அது மாறிக் கொண்டிருக்கின்றது.
இப்பொழுது, மனித வாழ்க்கையில் நாம் எப்படி இருந்தாலும், சண்டை
போடாதவர்கள் இல்லை, வெறுப்பில்லாதவர்கள் இல்லை. ஏதாவதொரு பயத்திலிருப்போம்.
ஒவ்வொரு வீட்டிலும் பல நிலைகள் வரப்படும்போது, ஒருத்தர் மேல் பழி சுமத்திக் கொண்டே இருப்பார்கள்.
இன்று
வரதட்சணை கொடுமைகளை எடுத்துக் கொண்டால், இதை விட ஜாஸ்தி, குடும்பமே ஏகமாக, அந்த வேதனையும் சங்கடமும் பட்டிருப்பார்கள். “எனக்கு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே” என்று அந்த
உயிராத்மா இறந்தால், இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் போனால், அந்த
குடும்பத்தை சின்னா பின்னப்படுத்தும். அதிலிருந்து தப்ப முடியாது.
இப்படியெல்லாம்
விஷங்கள் வளர்ந்து, ஒரு குடும்பத்திற்குள் மதத்தின் அடிப்படையில் எவ்வளவுதான்
வளர்ந்தாலும், எவ்வளவு
கோடிக்கணக்கான பொருளை வைத்திருந்தாலும், அவர்களுக்குள் உண்மை இருக்காது.
காரணம், நாம் பதிவு
செய்துகொண்ட "சிலிகானுடைய நிலைகள்" அந்த அலைகள் நமக்குள் ஓடிக் கொண்டே
இருக்கும்.
இந்த உணர்வின் சத்துக்கள்
உமிழ்நீராக மாறி,
நம் உயிராத்மாவுடன்
சேர்க்கும்போது,
சிலிகான்களாக மாற்றிவிடும்.
அந்த உணர்வுக்கொப்பத் தான்
அடுத்த உடல் எடுக்கும் தன்மையை, நிச்சயம் மாற்றிவிடும்.
மனிதர்களிலே, நாம் யாரும் தவறு செய்ய வேண்டுமென்று எண்ணுவதில்லை. நல்லதைச் செய்யும் எண்ணத்தை யார் ஒருவர் வைத்திருக்கின்றாரோ, அவர்கள் பிறர் செய்யும் துன்பத்தைப் பாசத்துடன், “இப்படி ஆகிவிட்டதே” என்று ஏங்கினால் போதும், அவருடைய துன்ப அலைகள் இவருக்குள் எல்லை கடந்து, இவருக்குள் வியாதியாகி, நல்லவர்களாக இருப்பவர்களும்
புலம்ப ஆரம்பித்துவிடுவர்.
இதை
காப்பதற்கு, நமக்கு காப்பு வேண்டுமல்லவா?
தயவு செய்து
சிந்தித்துப் பாருங்கள்.
யாரும்
கெட்டவர்கள் அல்ல.
நல்லவர்களாக
எண்ணி நாம் இருக்கும்போது,
சந்தர்ப்பங்கள், அந்த பாசம் என்ற நிலைக்கு வரப்படும்போது,
விஷம் என்ற தன்மை, நமக்குள் ஊடுருவி,
இந்தப் பாசம்
அதற்குள்தான் துடிக்குமே தவிர, விஷத்திற்குள் அடிமைப்பட்டதுதான்.
ஆக, இந்த விஷத்தை முறிக்கும் இந்த ஆற்றலின் நிலைகள், அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை நிகழ்த்துவது, மெய்ஞானியின் அருள் ஒளிதான்.
ஆக அந்த
சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தி, மெய் ஒளியை நாம் பெற வேண்டுமென்றால், நாம் அவசியம், இந்த தியானம் செய்யவேண்டும். அந்த சந்தர்ப்பத்தை, நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.