ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2013

ஒவ்வொரு நிமிடத்திலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

1. ஒவ்வொரு நிமிடத்திலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் கலந்து கொண்டே வரவேண்டும்.
உங்களை எல்லாம் எங்கே கொண்டு போகின்றோம் என்றால்,  அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு,  துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம். குருநாதர், என்னை இப்படித்தான் கொண்டு சென்றார். அந்த குரு காட்டிய நிலைகளில் தான், உங்களை அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்து,  உங்கள் உடலில், எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும், அதனுடன் இணைத்து, இணைத்து, அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன். 

உங்கள் கண்ணின் நினைவு, உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதை சேர்க்கும். அப்படி சேர்க்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.  அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால்தான் ஈர்க்கும்,  இல்லையென்றால் எடுக்காது.

அதனால் தான், அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு, நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில், இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதை பக்குவப்படுத்துதல் உங்கள் கையில் தான் இருக்கின்றது. ஆனாலும், உங்களை ஆயுள் மெம்பராக சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில், ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்துவிட்டால், ஈஸ்வரா (நமது உயிரை எண்ணி) என்று சொல்லுங்கள். இந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாக பேசுகிறார்கள் என்றால், உடனே ஈஸ்வரா என்று எண்ணி, அதை தடுத்துவிடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர்கள் செய்வது, யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெறவேண்டும், அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது, அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால், ஈஸ்வரா என்று எண்ணி நம் உடலுக்குள் பெற செய்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையை சொல்லப்படும் பொழுது, இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கின்றது.

அப்பொழுது, இதே மாதிரி நம்மை எப்பொழுது திட்டினானோ, இது கொஞ்சம் கொஞ்சமாக, போய் சேரும். ஆக அவன் திருந்தும் நிலை வரும்.  அவன் எடுத்துக் கொண்ட உணர்வு, திருந்த எண்ணினால் வருகின்றது.  நம்மை திட்டும்போது, நம் உடலுக்கு பாதுகாப்பாக இருக்கும்.  சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி, வாழ்க்கையில் நாம்
ஒவ்வொரு நிமிடத்திலும்,
ஒவ்வொரு குணங்களிலும்,
ஒவ்வொரு உணர்விலும்,
ஒவ்வொரு செயல்களிலும்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.
பலவிதமான குழம்பு வைக்கிறோம், பலவிதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி, நமக்குள் அந்த உணர்வை (தீமை செய்யும் உணர்வை)  மாற்றி, சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.. இப்படி, நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது. கொஞ்சம்,  இதில் பொறுமை தேவை.

ஏனென்றால், மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால், ரோட்டில் போகும் பொழுது பார்த்தால், போகின்றான் பார் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி, ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்துவிடுகின்றோம்.. பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்து, தவறு செய்யும் அணுக்களைத் தான் நாம் வளர்க்கின்றோம். ஒருவன் சாபம் விடுகின்றான், அவனை பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன், எதை பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். இந்த உணர்வுகள், சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும், அந்த தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது,  அந்தக் கணமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை, புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும். 

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடலிலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். நம் வாழ்நாளில் இதைப் பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து, அந்த தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளி பழக வேண்டும். எமது அருளாசிகள்.
2. கங்கா சேர் வானம்

நாம் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொன்றிலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அந்த சேர்க்கும் பருவத்தை செய்வதற்குத் தான், இதை உபதேசிக்கின்றோம்.

குழம்பு வைக்கும் பொழுது, ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை சேர்க்கும் பொழுது, ருசியை மாற்றிவிடுகிறோம். அதுபோல நாம் நல்ல குணங்களுடன், இந்த வேதனையான உணர்வுகளை எடுத்தால்,  அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது, நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது. 

நல்ல அணுக்களை மீண்டும் பெறவேண்டும் ன்றால், அந்த உணர்வை, இதற்கு மேல் சேர்த்து மாற்றவேண்டும். அதை அடிமையாக்க வேண்டும்.

கங்கா சேர் வானம் மாதிரி
நமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது,
அணுவுக்குள் அணு.
ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்
என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறது.  அந்தப் பிரணவ தத்துவம், புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்,  ஒவ்வொரு அணுவையும்  நுண்ணிய அணுக்களாக மாற்றி, மாற்றி,  அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.

ஆக, இந்த உடலின் அணுக்கள், பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான், அதற்கு தக்க மனித உறுப்புகளை உருவாக்கும். மனித உறுப்புகளை உருவாக்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை, நாம்  மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால், ரூபங்களை மாற்றி அதற்கு தக்கவாறு உண்டாக்கிவிடும்.

நாம், புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கு தக்க, இந்த உறுப்புகள் மாறுகிறது.  அப்படி படிப்படியாக வரும்போது, எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.

இந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின், நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். உயிர் ஒளியானது ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி.

எல்லாவற்றையும் சேர்த்து உயிர் எப்படி ஆனதோ, ஒன்றாக அமைத்ததோ, இதுதான் தனுஷ்கோடி என்று சொல்வது. இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா?

அதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும், இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும், என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கிறான்? மணலைக் கூட்டிச் சேர்க்கிறான். இது ஒரே நாளில் முடியுமோ?

இந்த கோடிக்கரையில் இருந்து, நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி, நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை, என்னுடன் இணைத்து விடுகின்றது.

உங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான், அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம். அதே சமயத்தில், எல்லோரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுகிறோம்.
அவர்கள், அதைப் பெற்றால் பரவாயில்லை.
பெறவில்லை என்றால்,
அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வு,
என்னுள் உள்ளது.
என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.
நீங்கள் பெறவேண்டுமென்று யாம் எண்ணுகிறோம்.
இந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்களைத் திட்டியவர்களை எண்ணினால், புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது, அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நான் பெறவேண்டும், என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.

அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். என் உடல் முழுவதும் பெறவேண்டும் என் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு, அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது,  இந்த உணர்வு நமக்குள் வருகிறது. அவர்கள் உணர்வு பதிவாகிறது.  இதனுடன் கலந்து, இதை யாம் மாற்றிவிடுகின்றோம்.

அப்பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்துவிடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றிவிடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா!

அது கலந்தவுடன், இதை மாற்றிவிட்டு,  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும், என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.  அதைக் கொடுத்தவுடன், 
நாம் கலந்து போவதை, எடுத்துப் பழக வேண்டும்.
ஒன்றில்லாது ஒன்றில்லை.
எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால், வடதுருவத்தில் இருப்பது  இழுக்கும்.  தென் துருவத்தில் இருப்பது தள்ளும்.  ஏனென்றால், தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.  காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால், தள்ளிக் கொண்டே போகும்.

இதை போன்று, நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

நம் உடலில் உள்ள இரத்தத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும், நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த மகரிஷிகள்  சென்று அடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், எமது அருளாசிகள்.