ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2013

கல்கி - பத்தாவது அவதாரம்

என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள். மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில்
இறுதியானதும், உறுதியானதுமான
அழியா ஒளிச் சரீர வாழ்வே,
மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும்
என்றுரைத்தார்கள் ஞானிகள்.

சூரியனின் ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்பட்டுபுவியின் ஈர்ப்பில் வந்த உயிரான்மாவிற்கு விண்ணில் ஒளிச் சரீரம் பெறுவதேமுழுமையான நிலையாகும்.

விண்ணில் ஒளிச் சரீரம் பெற்ற உயிரான்மா, தம் ஒளியின் தன்மையை நாளும் வளர்த்துக் கொண்டாலும், அது எல்லையில்லாப் பேரண்டத்தில், சிறியதாகவே இருக்கும்.
ஒளியின் சரீரத்திற்கு அழிவே இல்லை. ஆகையால்தான், பெருவீடு பெருநிலை என்ற அழியா ஒளிச்சரீரத்திற்கு என்றும் பதினாறு என்று, காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள்.

சப்தரிஷிகள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளைத் தம்முள் கவர்ந்து, தம்முள் நஞ்சினைப் பிளந்து, தீமைகள் தம்முள் வராது தடுத்து, பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதர்களான நாம், நமது ஆறாவது அறிவின் துணைகொண்டு, துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளை நம்முள் கவர்ந்து, நம் உடல் முழுவதும் படரச் செய்து, நமது உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் பரவச் செய்து, அதனின் வலிமை பெற்றபின், வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவாக இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.

தீமைகள் விளைந்த நிலையைப் பிளக்க வேண்டுமென்றால், நாம் எப்படி சக்தி பெறவேண்டும் என்பதை நமக்கு ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

கார்த்திகை நட்சத்திரமும், ரேவதி நட்சத்திரமும், சேர்ந்து ஒரு உயிராக எப்படி உருவானதோ, இதைப் போன்று, தீமைகளை அகற்றிடும் சக்தியினைக் கணவன் மனைவி இரண்டு பேரும், சேர்ந்து பெறவேண்டும்.

அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தம் உடலுக்குள் சேர்த்து, மனைவி தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர் உயர்ந்த நிலை பெறவெண்டும், அவருடைய பார்வை என்றும் என்னைத் தெளிந்த மனமாக்க வேண்டும், மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதுபோன்றே, கணவனும் தன் மனைவி அந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். தீமைகளை அகற்றிடும் சக்தியினை, தனித்து ஒருவர் பெறமுடியாது.
நளாயினி, தன் கணவனைக் கூடையில் வைத்து, தன் சிரம் மீது சுமந்தாள் என்ற நிலையாக, மனைவி
தான் குறைகளை எண்ணாது,
கணவருடைய நிறைவான மனது எனக்கு வரவேண்டும்
என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலேஅகத்தியன் துருவத்தை நுகர்ந்துஅதன் வழியினில் துருவ மகரிஷியாகிதான்  பெற்ற சக்தியெல்லாம் தன் மனைவி பெற வேண்டும்,என்ற உணர்வினை ஊட்டிஅதே உணர்வினை மனைவிதன் கணவனுக்கு கிடைக்கவேண்டும்என்று உணர்வினை வலுபெறச் செய்ததினால், எந்தத் தீங்கினையும் உருமாற்றவல்ல சக்தி அவர்களிடத்தில் உண்டானது.

தீமையை அகற்றிய மகரிஷிகளின் அருளுணர்வுகளைகணவன்மனைவி இரண்டு பேரும் கவர்ந்துதமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான்சமப்படுத்தமுடியும்.

தீமைகளை அகற்றும் செயலாக்கமாககணவன் தனது மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணுவதும்மனைவி தனது கணவன் பெற வேண்டும் என்று என்ணுவதும், ஆக இந்த இரு உணர்வும் வரும்பொழுது ரேவதி நட்சத்திரமும்கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிரானதைப் போன்றுகணவன்மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மையும் ஒன்றாகின்றது.

உணர்வினை ஒளியாக ஒருவருக்கொருவர் மாற்றப்படும் பொழுதுஇருவருக்குள்ளும் வரக்கூடிய இருளினை மாற்றுகின்றது.  இருளை மாய்த்து ஒளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகளின் அருள்சக்தி கணவன்/மனைவி பெறவேண்டும் என்றும்,
அவரின் உணர்வுகள் வலுப்பெற வேண்டும்,
அவர் பேரின்பப்  பெருவாழ்வு வாழ வேண்டும்,
அவருடைய பார்வை எப்பொழுதும்
எனக்குள் நல் ஒளியை உணர்த்த வேண்டும் என்றும்,
இந்த உணர்வை எண்ணும்பொழுது
இந்த உணர்வின் வலுவான நிலைகள் இங்கே கூடி,
வலுவின் தன்மைகள் பெறப்படும்பொழுது,
அவர்கள் பிறருடைய தீமைகளைப் பார்த்தாலும்,
தீமைகள் அவர்களுக்குள் வராது தடுத்து,
கல்கியின் தன்மையினை
அவர்களுக்குள் உருவாக்குகின்றது.