1. அருள் ஞானத்தை மற்றவர்களையும் பெறச் செய்யும் பரிபக்குவ நிலை
நமது உணர்வின் தன்மையை
வலுப்பெறச் செய்தாலும், காலமறிந்து, சொற்களைப்
பிறருக்கு ஊட்டப் பழகவேண்டும். ஆகவே, வீட்டில் அமைதி கொண்டு இருக்கும் பொழுது, அருள்ஞானப் புத்தகங்களை படித்தால், வீட்டிலுள்ளவர்கள் செவிகளில் விழும். அவர்களும், இதைக்
கேட்கும் சந்தர்ப்பம் உருவாகும். அந்த உணர்வைக் கேட்டவுடன், நன்றாகத்
தான் இருக்கின்றது என்பார்கள். அதே மாதிரி,
இந்த ஏற்புடைய நிலைகள், வேண்டுமென்றால்,
அவர்கள் வழியில் சென்று,
இதைப் புகுத்தினால், எதிர்க்கும் தன்மை குறைந்து,
ஏற்கும் தன்மை வரும்.
இதுவெல்லாம், சிந்தனையைச் சீர்படுத்தும் நிலைகள்.
அவருடைய
சிந்தனையைச் சீர்படுத்தும் பொழுது, நம்முடைய உணர்வுகள் கலந்து,
உணர்வுகளைச் சீர்படுத்தும் நிலைகள் வரும். சிந்தனையின் தன்மை வேறு பக்கம் இருக்கும் பொழுது,
அதனுடைய அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது, இதனை ஏற்றுக் கொள்ளாது.
இதைப் போன்றெல்லாம், நமது வாழ்க்கையில் நடப்பதால்,
இந்த உடலுக்குப் பின், எதுவென்று
சிந்தனை செய்து கொண்டிருக்க
வேண்டும்.
இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
பல
துன்பங்களைக் கடந்து, கடந்து, துன்பமில்லாப் பெருவாழ்வு வாழும் இந்த மனித
உடலில் விளைந்த அரும் பெரும் சக்திகளை, மிகமிக ஜாக்கிரதையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
ஏனென்றால், இந்த
அழுத்தத்தின் உணர்வுகளை, யாம், நீங்கள் பெறவேண்டுமென்று,
குருநாதர் காட்டிய அருள்ஞானத்தை உங்களுக்குள் வலுப்
பெறச்செய்து, சிந்தித்துச் செயல்படும் உணர்வு, உங்களில்
விளைய வேண்டுமென்று, சதா யாம் தியானிக்கின்றோம்.
சற்றுப் பொறுமைகள் வேண்டும்.
அடுப்பில்
பாத்திரத்தை வைத்து, சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டுமென்று அவசரப்பட்டு, நெருப்பினைக்
கொளுத்தினால், என்னவாகும்? நெருப்பு, பாத்திரத்தின்
கீழ்தான் உண்டு இந்தத் தணலின் தன்மை
அதிகமானால், அடிப்பாகம், நெருப்பின் தணல் அதிகமானபின்,
கருகும் தன்மை வந்துவிடும்.
அதிக
வெப்பாமாகும் பொழுது, அடிப்பாகத்தில் உள்ளது, இழுத்து விடுகின்றது. மற்றதோடு, இரண்டறக் கலக்கும் தன்மை பிரித்துவிடுகின்றது.
மேலே
இருப்பதில், எதுவும்
தெரியாது. அடுத்து, பார்த்தோம் என்றால், சுவை கெட்டு இருக்கும். அந்த நேரங்களில், நெருப்பின்
தன்மையைச் சிந்தித்து வேக வைக்கும் நிலையாக, அந்தக்
காலப் பருவம் பார்த்துச் செயல்பட
வேண்டும்.
சாதாரணமாக, பல பொருள்களைக் கலக்கும்
பொழுது, எடை
கூடுகின்றது. எடையின் தன்மையானபின்,
தனக்குள் உயிருக்குள் பட்டு,
சிறுகச் சிறுகத் தணல் கூடும் பொழுது,
அந்த தணல்கள் கொதிகலனாக, இலேசாக மாறும்.
அப்பொழுது கலக்கும்
தன்மை வருகின்றது.
ஆனால், அதே சமயத்தில்
நெருப்பின் தன்மை, அழுத்தம் அதிகமாகும் பொழுது,
வெடித்து, மேலே சலித்து அடர்த்தியின் தன்மை கொண்டு வரும். வெப்பத்தின்
தன்மை ஆனபின், பாத்திரத்தோடு
ஒட்டிக் கொள்ளும். ஆனால், கலக்கும் உணர்வின் தன்மை,
இங்கே இருக்கும். அதனுடைய சமபலனை மாற்றிவிட்டு, எடைகூடிய சரக்கு
எதுவோ, இதிலே
குன்றிவிடும். அதில், சுவை ஊட்டும் தன்மையைக் குறைத்துவிடும்.
2. நமக்குத்
துன்பத்தை ஊட்டுபவர்கள் உடலில் துன்பத்தைத் தடைப்படுத்த வேண்டும்
உங்கள்
சிந்தனைக்கு, இதை
வெளிப்படுத்துகின்றேன். காலங்கள் இன்று குறுகியக் காலமாக இருக்கின்றது. மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்யும் காலங்கள், அதிகரித்துக்
கொண்டு வருகின்றது.
ஆகவே, நாம்
சிந்தனையின் நிலைகளை வலுப்படுத்த வேண்டுமென்றால்,
இந்த வாழ்க்கையில் குரு அருளைப் பெற்று, அருள்
ஒளியைக் கூட்டும் பருவத்தை, நாம் பெறவேண்டும்.
இதைக்
கூட்டி, தீமைகள் புகாத அந்த அழுத்தத்தை, நமக்குள் கூட்டவேண்டும். பகைமை உணர்வுகள் உங்களுக்குள் வராது, இந்த
அழுத்தத்தின் உண்மையின் உணர்வின் தன்மையை, அருள் ஞானத்தின் உணர்வுகளில்,
வலுப்பெறச் செய்யத்தான் இந்த உபதேசம்.
உபதேசத்தின்
உணர்வுகளைச் சிறிது
நேரம் கூட்டி, இந்த
ஞானத்தின் தன்மையைப் பதிவு செய்து, நினைவுகொள்ளும்
பொழுது, இதன்
உணர்வின் இயக்கமாக, நீங்கள் இயங்கி, தீமைகள் உங்களுக்குள் புகாது செய்யத்தான், இதைச்
செய்வது.
பிறருடைய
தீமைகள் இருந்தாலும், காலப் பருவம் பார்த்து, இந்த உணர்வுகளை ஊட்டும் பொழுது, நமக்குத் துன்பத்தை
ஊட்டிக் கொண்டிருக்கும், அவர்கள் உடலில், துன்பத்தைத் தடைப்படுத்த வேண்டும்.
நாம் போகும்
பாதையில், நம்
வீட்டிற்குள்ளேயே, எதிரியாகின்றது. நம் உடலுக்குள்ளேயும், எதிரி
உண்டு. உணர்ச்சியின் வேகம் அதிகமானால், சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.
அழுத்தம் அதிகமாகும் பொழுது, உண்மையின் உணர்வை விடாது, நமக்குள் உணர்வைக் கலவையாக்கி, சுவைமிக்க சொல்லை வெளிப்படுத்துவதை, தடைப்படுத்தும் இதுவும் எதிரிதான்.
இதுவெல்லாம், நம் சிந்தனைக்கு வரவேண்டும்.
ஆகவே, அருள்ஞானத்தை நமக்குள் கூட்டி, அந்தப் பேரருளின் உணர்வுகளை, உங்களுக்குள் பெருக்கி, குருவின் அருளும், அந்த துருவத்தின் உணர்வுகளில்,
உங்கள் நினைவுகள், அங்கே செல்ல வேண்டும்.
எவ்வகையிலும்
பகைமை என்று எண்ணினால், “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில், உயிருடன் தொடர்பு கொண்டு,
நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி, அந்தப் பேரருள் உணர்வுகளைக்
கவர்ந்து, நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களுக்கும், இணைக்க
வேண்டும். எமது அருளாசிகள்.
3. ஞானகுரு செயல்படுத்தும்
பரிபக்குவ நிலை
அழுக்குத்
தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது, முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமானபின், கலக்கத்தின்
தன்மை சிறிது தெளியும். இதைப் போன்று, உங்களுக்குள் எத்தனையோ உணர்வுகள், உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பின், அழுக்கு நீரில், அருள்ஞான நீரை விடும்பொழுது, உங்களுக்குள், மனம் தெளியும் நிலைகள் வருகின்றது.
அதனால்தான், யாம்
நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக, எடுத்துக் கொள்கின்றோம். யாம் சொல்வதெல்லாம், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் தன்மையை இணைத்து, இந்த உணர்வின் தன்மையை,
ஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து,
நினைவாற்றலை, ஒவ்வொரு உணர்வுகளும்,
நமக்குள் எப்படி இயங்குகின்றது? என்றும்,
அந்த நினைவுடன் இணைத்து,
அருள்ஞானியின் உணர்வைக் கலந்து,
உடலில் நீங்கள் பெற்ற,
ஒவ்வொரு உணர்வும் பெற, இணைக்கின்றேன்.
இந்தக் காலப் பருவம், அருள் ஒளி
வெளிப்படும் நேரம் (துருவ தியான நேரம்), நுகரும் ஈர்க்கும் சக்தி,
இதனுடைய உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது, உங்களுக்குள்
சேர்ந்த, சிந்தனையை
அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து, அதனை அடக்கும் அருள்ஞானியின் உணர்வை, உங்களுக்குள்
பெருக்கும் சூழ்நிலையை, உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).
உங்களுடைய
அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை), அளவுகோலாக வைத்து,
ஒவ்வொரு உணர்வுகளிலும்.
வாழ்க்கையில், எதிர்நிலை வருகின்றதென்றால்,
காலத்தை அளக்கும்.
இதற்கு என்ன செய்யவேண்டும்? என்ற சிந்தனை வரும்.
பருவம்
வரும் பொழுது, சொல்லுவோம், என்று
விலகிச் செல்லும்.
காலத்தை
விரயமாக்காது.
நாம்
உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று, அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால், சரி சரி
என்பார்கள். ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போய்விடும்.
இதுவெல்லாம், உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான், (யாம்) எதை எடுத்தோம்? எப்படிச் செய்தோம்? எதனுடைய உணர்வுகள்? என்று காட்டியது.
நீங்கள்
பிறருக்கு உபதேசிக்கும் பொழுது, எவ்வழியில் சொல்லுதல், வேண்டும்? இது போன்ற சந்தர்ப்பங்களில்,
வாழ்க்கையில், இந்த உபதேசங்களைக் கேட்ட நீங்கள், ஒவ்வொரு கால
நேரத்தையும், யாம் உபதேசித்த வழியில், பயன்படுத்துதல் வேண்டும்.
ஒரு
கம்ப்யூட்டரில், அழுத்தத்தின் தன்மை கொண்டு,
எலக்ட்ரானிக்கை
அழுத்தியபின்,
அந்த
உணர்வுகள், கால நேரம்
வரும் பொழுது,
அழுத்தத்தின் உணர்வுகள், தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.
இதைப்
போன்றுதான், உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும்பொழுது,
இதனுடைய அழுத்தம், தீமையை நீக்குகின்றது.
நல்லவைகளை, ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று,
தீமையை நீக்குகின்றது.
யாம்
உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களின் உணர்வின் தன்மை,
சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது, அந்த காலம்
வரும்போது, யாம்
உபதேசிப்பதை தள்ளிவிடுகின்றது. அதன் வழி, உங்களை இயக்குகின்றது.
ஆகவே, இத்தகைய
தியான, மற்றும்
உபதேசத்தைக் கேட்கக்கூடிய, நேரங்களில் வரும்போது, கால மணியை, அந்த அழுத்தத்தை, நமக்குள் பதிவு செய்து கொண்டு, அதனை, நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற
உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால், நினைவு வேறு எங்கும் போகாது, இந்த உணர்வின், (அருள்ஞான உணர்வின்)
அழுத்தமாகும்.
சீர்புடையதும், சீர்பற்றதும், இந்த
உணர்வுகளை தனக்குள் மாற்றி, ஒவ்வொன்றும் சொல்லும் பொழுது,
இதற்குள் மாற்றியமைத்து, நமக்குள்
பக்குவப்படும் நிலைகள் வரும்.
அந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே,
குருவின் தன்மை. எமது
அருளாசிகள்.