ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2013

ஒவ்வொரு நுண்ணிய நிலைகளையும் அறிய, குரு உணர்த்தும் அருள்வழி

1. நம் வாழ்க்கையில், நுண்ணிய நிலைகளை எப்படிக் கண்டுணர்வது?
ஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது, எது எதை, சந்தர்ப்பம் வரும்பொழுது, ந்தந்தக் காலத்தில் இணைத்தால், அது வலுப்பெறும் என்ற நிலையை, மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான்,தைக் காணுகின்றான்.

இதைப்போன்றுதான், ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால், அந்த உணர்வின் தன்மை, நினைவிற்கு கொண்டு வருகின்றோம். ஒருவர், திரும்பத் திரும்ப செய்கின்றார், ஆனால், அது முடியாது போகின்றது.
     
ஒரு இயந்திரம், ஒரு நூல் சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (bearing) போட்டிருப்போம். எந்த பக்கம் அழுத்தமாகின்றதோ, அங்கு வெப்பம் ஆகின்றது. நாம் அதை தொட்டுப் பார்த்தாலும், அது தெரியவில்லை.

மனிதனில் இது செயல்படும் பொழுது, என்ன செய்தாலும் ஆகவில்லை என்ற உணர்வுகளை  எடுத்து கொண்டு, அளவுகோல் பார்த்தால்,
நம் உணர்வுக்குத் தக்க,
சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.

     இதைப் போன்று, உணர்வின் அழுத்தத்திற்கொப்ப சரி என்று ஏற்றுக்கொள்ளும் பருவம், வருகின்றது. 

சிறிது சிந்தித்து,
இதனுடைய நிலைகளை,
எப்படியும் கண்டுணர வேண்டும்
என்ற உணர்வினைக் கூட்டினால்,
அந்தச் சிறு தவறைக் கண்டுகொள்ள முடிகின்றது.

அந்த பேரிங் இருக்கிறதில்,
எந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது?
எந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது?
என்று சிந்தனை வரும்.
இந்த பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால், சரியாக வரும் என்ற சிந்தனை வரும். 

மனிதனின் வாழ்க்கையில், 
நுண்ணிய நிலைகள் உண்டு.
இதைத் தெரிந்து கொண்டபின், வாழ்க்கையில், தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர்.  சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு, அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.

தியான வழிகளில் உள்ள அன்பர்கள், சில சந்தர்ப்பங்களில், எண்ண வலுவைக் கூட்டும் பொழுது, உண்மையின் நிலையையும், வாழ்க்கையில் எது வந்தது? என்றும், சிந்திக்க முடியும்.

"உணர்ச்சி வயப்படுவதில்லை'.
2. வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள்
இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும், அளவுகோலைக் காட்டி, அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர். பாட நிலையை மட்டும், படித்துவிட்டுச் செயல்படுத்துவதில்லை.

சோப்பு செய்ய, இன்னென்னவைகளைக் கலந்தால், சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவர். நான் எல்லாம் தெரிந்து கொள்வேன், என்று சரக்குகளை வாங்கி வந்து, அதில்,
எதை முதலில் சேர்ப்பது?
எதை இடையில் சேர்ப்பது? என்று இருக்கும்.

அப்படிக் கரைத்தாலும்,
அதனைக் காய்ச்சும் முறை, ஒன்று உண்டு.
அதில், விறகிலும் சில பக்குவம் உண்டு.
அதிலும், கேவன் விறகிலும், நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு, சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில், வெப்பத்தின் தன்மை குறைவு.

சோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால், அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை, பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, இணைத்து செயல்படும் நிலைகள் இல்லாது, கட்டி உறையாது.

இதெல்லாம், நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள்.

ஏனென்றால், இதைப்போல சந்தர்ப்பத்தை உருவாக்கி, வாழ்க்கையில் வரும் தன்மையை,
நீங்கள், திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை,
உங்களுக்குள் நினைவாக்கும் பொழுது,
உற்றுப் பார்த்தால், நினைவு வருகின்றது.
பிழைகளிலிருந்து, மீளச் செய்கின்றது.
அந்த மீளக்கூடிய சந்தர்ப்பம், ஊட்டும் நிலைகள் வருகின்றது.
3. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் (மனித) ஆயிரம் கண்கள் உண்டு
ஒருவருக்கு, அழுத்தமாக இது இப்படித்தான் என சொல்லப்படும் பொழுது அங்கு வெறுப்பின் தன்மை இருக்கும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போகிறது. அங்கே, அழுத்தம் அதிகமான பின், செயல் மாறுகின்றது.

நாம் அதிக நேரம் பேசிவிட்டு, உணவை உட்கொண்டால், உள்ளே போகின்ற மாதிரி இருக்கும். அந்த உணர்வின் தன்மை சுருங்கி சுருங்கி, அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த உணர்வின் தன்மை, அழுத்தம் அதிகமானபின், நம் உணவுக் குழாயே, சிறிது அழுத்தி இருக்கும். முதலில், தெரியாத வேகத்தில், பசி தீர்க்க வேண்டுமென்றால், சிறுகச் சிறுக அடைத்துவிடும்.

இப்படிச் சாப்பிட்டவுடன், தண்ணீர் குடித்தவுடன், மிகவும் தேங்கிப் போகும். இந்த மாதிரி நேரங்களில், உணர்வின் அழுத்தம் லேசான நிலைகளில், உராய்வின் அழுத்தம் வந்தால், உள்ளுக்குள் தண்ணீர் இழுத்துக் கொண்டுபோய், புரையோடி, மேல் நோக்கி வந்து, நாம் சுவாசிக்கும் உணர்வுடன் வந்துவிடுகின்றது.

அப்பொழுது, அந்த உணர்வின் சிதறல், வேகமாக மற்ற உறுப்புகளில் ஊடுருவி விடுகின்றது. இப்படி நம்மை அறியாமலேயே, சில பிழைகள் வந்துவிடுகின்றது. மனித வாழ்க்கையில், உடல் உறுப்புகளில் மாற்றமும், உணவுக் குழாய்ப் பகுதிகளில் அடைபடுவதும், சில நேரங்களில் தண்ணீர் குடித்தால், மிகவும் மெதுவாக போகும்.

அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் பொழுது, அந்த உணர்வுகள் அங்கு பதிவானபின், தண்ணீர் என்றாலே போகாது. சில பேர் அதிகம் சாப்பிடுவார்கள். தண்ணீர் குடிப்பது, மிகவும் நிதானமாகக் குடிப்பார்கள். சிலர் வேகமாகக் குடித்துவிடுவார்கள்.

இந்த மாதிரி, சலிப்பு சஞ்சலத்தின் தன்மை அதிகமாகி, புரையோடிவிட்டால், தண்ணீரைப் பார்க்கும் பொழுது, அப்பகுதி உணர்ச்சியை ஊட்டி, நமக்குள் அந்த உறுப்புகளை மாற்றிவிடும். இப்படியெல்லாம் சந்தர்ப்பத்தால், வாழ்க்கையில் உடல் உறுப்புகளில், சில மாற்றங்கள் ஏற்படுகின்றதுகுருநாதர், உணர்வின்  ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும், உணரும்படி செய்தார்.

இதைப் போன்று, நம் எண்ணங்களின் தன்மையும், நாம் செயலாக்கும் வலிமையும், நம்மை மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளையெல்லாம், உங்களுக்கு அனுபவரீதியில் கொடுத்துத்தான், எப்படிக் கண்ணில்லாத புழு எண்ணி, கண்ணின் தன்மையைப் பெற்று, உற்றுப் பார்த்து, உணர்வின் தன்மை, தன் அறிவின் வாழ்க்கையாக, பல கோடி சரீரங்களில், கண்டு கண்டு, இன்று நாம் எதனையுமே கூர்மையாக அறிந்திடும், உணர்வுகள் வந்துவிடுகின்றது.

இப்படிப் பெற்ற நாம்,  இந்த உணர்வின் தன்மை பெற்றபின்,
நம் ஒவ்வொரு உணர்ச்சிகளும், ஆயிரம் கண்கள் உடையது. எண்ணிலடங்காத, பல பல ஆயிரம் கண்கள் கொண்டது.

நம் உணர்வின் தன்மை, அறிவின் தன்மை, அறியும் தன்மை பெற்றது. இது மனிதனானபின், இதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தாது இருக்க வேண்டுமென்பதற்குத்தான், இதனை அடக்கி, மெய் உணர்வின் தன்மையைக் கொண்டு வந்தது. எமது அருளாசிகள்.