ஒன்றும்
அறியாத வான்மீகி உடலில், அவர் செய்த எத்தனையோ தவறான உணர்வுகள் அங்கே கலந்திருந்தது.
வான்மீகி என்ற வேடனாக இருந்த அந்த மனிதன், தான் வேட்டையாடச் செல்லும் பொழுது, தன் பசியைப் போக்க, (அவன் செய்த தவறுகள் -- எத்தனையோ உணர்வுகள்) ஒன்றை அடித்து
ஒன்றைக் கொன்று, அதை விழுங்கும் நிலை தான் அவனிடத்தில் இருந்தது.
பிறரிடத்தில்
பொருளிருக்கின்றது என்றால், அதையும் அடித்து, தனக்கு வசப்படுத்தி, மற்றவர்களின் இரக்கங்களைப் பார்க்க முடியாத ஒரு மனிதன் தான், வான்மீகி.
அப்பேர்ப்பட்ட
அந்த வேடன், காட்டுக்குள்
செல்லும் பொழுது, இரு பட்சிகள் இரை தேடி வருகின்றது. அப்படி அந்த இரு
பட்சிகளும் இரை தேடி, உணவு புசித்துவிட்டு, மகிழ்ந்து தான் கூடிக் குலாவி மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது, இந்த வேடன், அவன் தன் பசியைப் போக்க, அம்பை எய்து உடன் வந்த ஒரு பட்சியை, வீழ்த்திவிடுகின்றான்.
அந்த
பட்சியை வீழ்த்தியவுடன், அது கீழே விழுந்து துடிக்கின்றது. அதனுடன் இருந்த மற்றொரு
பட்சி, இதைப்
பார்த்து அந்த பாசத்தாலே, துடித்து, அது வேதனைப்பட்டு துடிக்கின்றது.
ஆனால், இது
துடிப்பதை அது நுகர்ந்து, இந்த உணர்வை சுவாசித்து, இதன் உடல் உணர்வுகள் அனைத்தும் துடிக்கின்றது. தன்
பாசத்தால், அது
துடித்து, அந்த
பட்சியின் நிலைகள் சுழன்று, சுழன்று கதறுகின்றது.
ஆனாலும், இந்த வேடனோ
அந்த மற்றோரு பட்சியையும் அடித்து, தனது பசியை ஆற்றிக் கொள்ளலாம் என்று அம்பை எய்கின்றான்.
அம்பை எய்தாலும், அந்த மற்றொரு பட்சி இவனையும் பார்க்கின்றது, பாசத்தால்
அடிபட்டு துடிக்கும் பட்சியையும் பார்க்கின்றது,
துடிக்கின்றது.
இவ்வாறு
துடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அந்த வேடன் குறி வைத்து அந்தப் பட்சியையும் தாக்க எண்ணுகின்றான். ஆனால், இவன் குறி வைப்பதை, தன்னுடன் வந்த, இனப் பாச உணர்வுடன், ஏங்கி இவனை பார்க்கின்றது.
பட்சி தன் ஏக்க உணர்வின் தன்மையால், அது பார்க்க,
அதன் உணர்வின் ஒளிகள்
அதன் கண்களிலிருந்து வெளிப்படும்,
இந்த உணர்வின் ஆற்றல்கள்,
வேடனுடைய நிலைகளில், இவன் குறி வைக்கும் போதெல்லாம் அதன் அலைகள், இவனுடைய ஈர்ப்பிற்குள் வருகின்றது.
இப்படிப் பல முறைகள் இவன் தொடர்ந்து செயல்பட,
அது தன்
பாசத்தால் ஏங்கிய, அந்த உணர்வின் சக்தியை, அது வெளிப்படுத்த,
இவனுடைய
புலனறிவு, அந்த உணர்வின் சக்தியை, அது வெளிப்படுத்த,
இவனுடைய
புலனறிவு, அந்த
உணர்வின் சக்தியை ஈர்க்க,
இவனுக்குள் மறைந்திருக்கக் கூடிய நிலைகள்
தன் இனமான பட்சியின் தன்மை கொண்டு,
தான் எவ்வாறு இருந்ததோ, அந்த உணர்வின்
சக்தியை
இந்த உணர்வு இவனுக்குள் தட்டியெழுப்ப,
இவன் அம்பு எய்யும் பொழுது,
இந்த பாசமான ஏக்கம் வந்தவுடன்
அந்த பட்சியைக் குறி வைத்து அம்பை எய்யும்,
அவனுடைய, அந்தக் குறியின்
நிலைகள் தவறுகின்றது.
அதை அவனால் வீழ்த்த முடியவில்லை.
ஆக இவனுடைய ஏக்கம், அது எவ்வாறு ஏங்குகின்றதோ, அந்த உணர்வின் ஆற்றல், இவனுக்குள் மறைந்திருந்த பாசத்தின் நிலையை, அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகின்றது.
அப்பொழுதுதான், தன் எண்ணத்தால், தனக்குள் இருக்கக்கூடிய அந்த உணர்வுகள் கிளர்ந்தெழுந்து, வானை நோக்கி ஏகுகின்றான்.
அப்படி வானை
நோக்கி ஏகும் பொழுது, சூரியனின் காந்த அலைகள் பூமியை நோக்கி வரும்போது, இவனுடைய
உணர்வுகளுடன் மோதியவுடன், இவனுக்குள் மறைந்த பாசத்தின் உணர்வின் எண்ண அலைகள், அது
தனக்குள் தூண்டப்படுகின்றது.
அப்படித் தூண்டி எழுந்த, அந்த
உணர்வின் தன்மை கொண்டு, புலனறிவிலே அவன் விண்ணை நோக்கிப் பார்க்கும்போது,
அனைத்துமே பாசத்தால் வளர்த்து,
எதையுமே தீயது அல்ல என்றும்,
தீயதைத் தனக்குள் ஒளியாக மாற்றி
ஆற்றல் பெற்ற, அந்த உணர்வின் சத்தான நிலைகள்,
மெய்யுணர்வைக் காட்டி, உணர்த்திச் சென்ற
அந்த அலையின் தொடரை
இன்று “அகஸ்திய மாமகரிஷி” என்று சொல்லுகின்றோம். அந்த அகஸ்திய
மாமகரிஷி, மூச்சால், பேச்சால் வெளிப்படுத்திய அவருடைய
உணர்வின் அலைகள், அந்த வேடனுடைய உடலில் சிக்குகின்றது.
அந்த
மூச்சின் உணர்வின் சக்தி, அவனுக்குள் சிக்கும்போதுதான்,
அந்த உணர்வின் தொடர் கொண்டு, சப்தரிஷி
மண்டலங்களின் சக்தியைப் பெற்றான். சப்தரிஷி மண்ட;லங்களின் ஒளி காந்த சக்தி என்பது, பேரண்டத்தின்
சக்தியைத் தனக்குள் ஈர்த்து, ஒளியாக
உணர்வின் ஆற்றல்களை அங்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த அணுதான் “நாரதன்”
என்பது.
அந்த
அகஸ்திய மாமகரிஷி, பூமியிலே வாழ்ந்த காலங்களில்,
மெய் உணர்வின் சக்தியைத் தனக்குள் வளர்த்து, ஒவ்வொரு உணர்வின் ஆற்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றதென்று
வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றல்கள், நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
அகஸ்தியர், எப்பாசத்தால் எல்லோரும் பெற வேண்டுமென்று, தன் உணர்வின் ஆற்றலைப்
பரப்பினாரோ,
அந்த
பரப்பிய ஆசை தான்
அந்த வேடான “வான்மீகி” தன் உணர்வின் ஆற்றலால் ஏங்கும்போது,
அந்த பட்சி
தன் பாசத்தின் நிலைகள் கொண்டு
அந்த
உணர்வின் புலனறிவைப் பாய்ச்சும்
போது
அவன்
கூர்ந்து பார்த்து தாக்கப்படும்போது
அந்த
பாசத்தின் உணர்வுகள்,
இவனுடைய
உடலிலே தூண்டி,
இந்த
கிளச்சியின் நிலைகள் கொண்டு
அந்த பாச
ஏக்கத்தாலே, தான் செய்த
தவறை மறந்து,
சூரியனை
விண்ணை நோக்கி பார்க்கும்போதுதான், சூரியனின் ஒளி காந்த
சக்தி இங்கே கூடுகின்றது.
இவனுக்குள்
கூடியிருந்த, அந்த பாசமான
நிலைகள், மெய்ஞானிகள், பாசத்துடன்
ஒவ்வொருவரும் நலம் பெறவேண்டும், அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வளம் பெறவேண்டுமென்ற, உணர்வை
வளர்த்துக் கொண்டவர்கள்.
அத்தகைய பாச
உணர்வின் சக்தியின் தன்மைதான், இவன் ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அந்த ஈர்ப்பின் நிலைகள்
ஆற்றல் மிக்கதாகப் பெற்று, தான் செய்த தவறின் நிலைகளெல்லம் மாற்றி, தன்னை
அறிந்து, மெய்ஞானிகள்
கண்ட பேருண்மைகளை அறியும் நிலை அடைந்தான், வான்மீகி மாமகரிஷி.
ஆக மூடனாகவும், ஈவு இரக்கமற்றவனாகவும் இருந்த அந்த வான்மீகிதான்,
அந்த பட்சியின் பாச உணர்வு
மூலமாக,
அகஸ்தியன் வெளிப்படுத்திய
பேரண்டத்தின்
ஆற்றல்மிக்க சக்திகளைக் கவர்ந்து,
தானும் அகஸ்தியனைப் போன்று மெய்ஞானியாகி,
இராமாயண காவியத்தையே எழுதினான்.
நாமும் அந்த
வான்மீகி மகரிஷிகளின் அருள்
சக்திகளைப் பெறுவோம். அந்த மகரிஷிகள் சென்ற பாதையிலே சென்று, அகஸ்தியனைப் போன்று, உலகைக்
காக்கும் மெய்ஞானிகளாவோம், எமது அருளாசிகள்.