1. கை கால் முடமான நிலையில்,
குருநாதர் ஆஸ்பத்திரியில் செய்த செயல்கள்
அந்த சமயத்தில், இங்கு பழனியில் கங்கா பைண்டிங் அச்சாபீஸில் உட்கார்ந்து இருந்த குருநாதர், தெலுங்கு ராஜ்ஜியம் என்னமோ பண்ணிவிட்டான், அவன்தான் எனக்குக்
கை கால் வராமல் பண்ணிவிட்டான் என்று சொல்லிக் கொண்டு, ரோடு
பூராம் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றார்.
இப்படிச் செய்தவுடன், உடனே நீ புறப்பட்டு வர வேண்டும்
என்று என்னிடம் சொல்லிவிட்டார், குருநாதர்.
இந்த டெலிபோனில் வேலை
பார்க்கும் நடராஜன் என்ன செய்தான், கை, கால் வராமல் பண்ணிவிட்டான், அதனால்,
எங்கேயோ கொண்டு போங்கள் என்று சொல்லிவிட்டான்.
ஏனென்றால், நான் தான் ஐவர் மலைக்கு குருநாதரைக்
கூட்டிக் கொண்டு போயிருந்தேன் சில அற்புதங்களைப் பார்த்தவுடன், எல்லாம் அவருக்குத் தானே காட்டினார் குருநாதர், எனக்கு
ஒன்றும் காட்டவில்லையே, இவரை நான் எதற்குப் பார்க்கவேண்டும் என்று,
இது இந்த நடராஜனுடைய இந்த எண்ணம்.
இங்கு திண்ணையில்
படுக்க வேண்டாம் என்று சொல்லவும், இராமசாமி என்ன செய்தான். குருநாதரை, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.
எவ்வளவு கூட்டம்
இருந்தாலும், நீ உடனடியாக அங்கிருந்து
வர வேண்டும் என்று என்னைச் சொல்லி விட்டார். ஆனால், இங்கு
ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நம் குருநாதர் சும்மா இல்லை.
அங்கு ஒவ்வொரு பெட்டில் இருப்பவர்களையும், இழுத்து இழுத்துப்
போட்டுக் கொண்டிருந்தார். கடைசியில்,
அவரைக் கொண்டுபோய், அங்கு சவக்கிடங்கு பக்கத்தில் போட்டு
விட்டார்கள்.
அப்பொழுது, நான் அங்கு போகவும் டாக்டர்
என்ன சொல்கின்றார்? எப்படியாவது, நீங்கள்
இவரை வெளியே எடுத்துக் கொண்டு போங்கள், இங்கு பெட்டில் இருக்கின்றவர்களை
எல்லாம், இழுத்து இழுத்துப் போடுகிறார் என்கிறார்.
ஆக சாவுக் கிடங்கு
பக்கத்தில் போட்டவுடன் அங்கு போனாலும் இதே போல, கட்டிலில் தீயை வைக்கின்றார். பிறகு, நான்
குருநாதரைச் சந்தித்தவுடன், “அங்கு
இருக்கும் தட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு வாடா, தீயை வைத்துக் கொளுத்துடா” என்றார்.
“சாமி, தீயை வைத்துக் கொளுத்தினால், எல்லாம் என்ன ஆகும்?” என்றேன் நான்.
“நான் சொல்வதைச் செய்கிறேன்
என்றாய் அல்லவா, கொளுத்து என்கிறார்”, குருநாதர்.
அப்படி, கொளுத்தகூடிய நிலை வரும் பொழுது, நான் மறுத்துக் கொண்டே இருந்தேன்.
இந்த நிலையில், அங்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஒருவருக்கு
எலும்புக்குள் ஏவல் செய்து, அந்தக் கால் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக, எலும்புகள் துண்டு துண்டாக வந்து
கொண்டிருந்தது.
தனியாக அவரை வைத்து, அவருக்குப் பாய்சன் எல்லாம்
போட்டு, என்னென்னமோ செய்த பின்பு, எலும்பெல்லாம்
கருகி, அப்படியே அழுகிக் கொண்டிருக்கின்றது. அதை டாக்டரினால் சரி செய்ய முடியவில்லை.
குருநாதர்
என்னிடம், “நீ
இதைச் செய்ய வேண்டியதுதானடா” என்கிறார்.
செய்கிறேன் என்று, நானும் குருநாதர் சொன்ன முறைப்படி, சில நிலைகளைச் செய்தவுடன், அந்தக் கறுப்பு இரத்தம்
நின்று, நல்ல இரத்தம் வந்தது.
உடனே, “டாக்டரைக் கூப்பிடுடா, அவனை அழைத்து பான்டேஜ் போட்டுக் கட்டுடா.., சரியாகிப்
போகும்” என்றார் குருநாதர்..
அப்பொழுது, நான் சென்று இப்படி நல்ல
இரத்தம் வருகிறது என்று டாக்டரிடம் சொன்னவுடன், அவருக்கு
மிகவும் குஷியாகிவிட்டது.
இது என்னால்
முடியாதது, இப்பொழுது சரி ஆகிவிட்டது
என்றார், டாக்டர்.
அதில் இருந்து
வந்தது ஒரு தாயத்து. அவர் உடலில் எலும்புக்கு நடுவில் இதை வைத்து, ஏவல் பண்ணி வைத்திருக்கிறார்கள்.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்,
அவன் சொத்தைப்
பறிப்பதற்கு, அவன் மேல் இருக்கும்
பொறாமையில் ஏவல் செய்துவிட்டார்கள். இந்த நிலையில் சொத்தையும்
இழந்தான், இப்பொழுது அனாதையாக நிற்கிறான். யாரும் அவனைக்
கவனிக்கவில்லை என்று சொல்லி, இவனை எல்லாம் யார் காப்பாற்றுவது? என்று கேட்டார் குருநாதர்.
இப்படி, அவருக்கு நன்றாக ஆனவுடன் டாக்டருக்கும்
ஒரே சந்தோஷம். இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது, என்ன
செய்கின்றார் குருநாதர்?
குருநாதர் என்னிடம், அந்த தட்டியெல்லாம் எடுத்துக்
கொண்டு வாடா என்றார். தட்டியை எல்லாம் போட்டு, இங்கு கொளுத்தச் சொல்கிறார். தீயை வைத்துக் கொளுத்தச் சொன்னால், அங்கிருப்பவர்கள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள்?
உடனே டாக்டர், “நாயுடு,
நீ இந்த மாதிரி எல்லாம் இங்கே செய்யக்கூடாது, உங்கள் குருநாதரை
உடனே இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்கிறார்.
ஆனால், குருநாதர் என்ன சொல்கின்றார்?
“ஏன்டா, என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காகவா இதைச்
சொல்கிறேன்” என்றார்.
2. ஓடாத ஆட்டோவை ஓட வைத்தார் குருநாதர்
அப்பொழுது, பாட்ஷா என்ற ஆட்டோ
ஓட்டுபவரிடம் சென்றேன். அவர் எனக்கு நண்பர், அவரிடம் கொஞ்சம் ஆட்டோ கொண்டாப்பா. குருநாதரை,
பாப்பம்பட்டியில் ரைஸ்மில் வைத்திருக்கும் ராமசாமியின் தோட்டத்தில், கொண்டு போய் வைத்துக் கொள்கிறேன் என்றேன்.
ஆட்டோ ரிப்பேராக
இருக்கின்றது என்றார் அவர்.
சரி செய்தால்தான், எடுக்க முடியும்.
கொஞ்சம் காசு கொடுத்தால், சரி செய்யலாம் என்கிறார்.
என்னிடம் ஒரு
காசும் இல்லை, நீ பாப்பம்பட்டி வரை கொண்டு
வந்து விட்டால், நான் அங்கு வந்து காசு வாங்கித் தருகிறேன்
என்றேன்.
இப்படி, ரிப்பேர் செய்துதான் எடுத்து
வர முடியும் என்று, சொல்லிக் கொண்டிருந்த அவருக்கு, திடீரென்று ஒரு அசரீரி போல் வந்தது.
“அட, ஆட்டோ ஓடும்” என்று நான் அவனிடம் சொன்னேன்.
ஓடும்.., ஓடும்.., ஓடும்.., என்று விசித்திரமாக சப்தம் வருகின்றது..
அவன் காதிலேயே “ஓடும் ஓடும் ஓடும்” என்று கேட்டவுடன், சரி நான் ஓட்டித்தான்
பார்க்கிறேன் என்று சொல்லி, பெட்ரோல் வாங்கிப் போட்டவுடன்,
ஆட்டோவும் ஸ்டார்ட் ஆகியது.
நானும் அவனுமாகச் சேர்ந்து, குருநாதரை ஆஸ்பத்திரியில்
இருந்து தூக்கிக் கொண்டு, ஆட்டோவில் ராமசாமியின் தோட்டதுக்கு
வந்தோம். அவரது தோட்டம், ஒரு பத்து
ஏக்கர் இருக்கும் வெறும் கரும்புத் தோட்டம். அந்தத்
தோட்டத்திற்குள் குருநாதரைப் படுக்கச் சொல்லி வைத்தவுடன்,
குருநாதர் என்ன செய்கிறார்?
3. கரும்புக் காட்டில் தீ வைத்தார்
குருநாதர்
அந்தக் கரும்பு ஆலையில்
வைத்திருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து, ஒளித்து வைத்துக் கொண்டு, “திருடன்., திருடன்”, எல்லாவற்றையும்
எடுத்து வைத்துக் கொண்டான். பூராவற்றையும் திருடிவிட்டான்
என்று பேசுகிறார், குருநாதர்.
நான் எங்கே
திருடினேன்? ஏதாவது மறந்தால் போல இங்கு
வைத்திருப்பேன் என்று நான் சொன்னேன்.
குருநாதர், “இல்லை, இவன்தான் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான் என்கிறார்.
இப்படிச் செய்து
கொண்டிருக்கும் பொழுது,
திடீரென்று என்ன ஆகிவிட்டது? அந்தக் கரும்புச் சோகை எல்லாம்
தீ பிடித்தது. இந்த மாதிரி ஆனவுடன், குருநாதர், தீயை வைத்துவிட்டான், தீயை வைத்துவிட்டான் என்று என்னைச் சொல்கின்றார்.
பார்த்தோம் என்றால், பத்து ஏக்கரும் பொசுங்கிப்
போகும் என்ற நிலையில் ஆகிவிட்டது. “இவன்தான்
எல்லாவற்றிற்கும் காரணம்” என்கிறார், குருநாதர்.
என்ன இது? வம்பாகப் போய்விட்டது. சும்மா இருக்கும் போது இப்படி எல்லாம் சொன்னவுடன்,
சுற்றி எல்லாம் நெருப்பாகிப் போனது, வேறு வழி இல்லை.
இவன்தான்
செய்கிறான், இவன்தான் எரிக்கிறான், இவன்தான் என்று என்னைச் சொல்கிறார்.
என்னடா இது, இப்படி வம்பான நிலையாகப் போய்விட்டது? எனக்கு எப்படி எரிகின்றது என்றே தெரியவில்லை, என்கிறேன்.
அப்பொழுது, அங்கு இருந்தவர்கள் எல்லாம் கூட்டமாகக் கூடி விட்டார்கள்..
குருநாதர் என்னைப்
பார்த்து, “நீ
இதை அவிடா” என்றார். “அவிடா” என்று சொன்னவுடன் குருநாதர் என்னை அழைத்து, காதில்
ஓதுகிறார். ஓதியவுடன், இதை அவித்து விடுடா என்று சத்தமாகச்
சொன்னவுடன், எல்லாம் அப்படியே, “கப்” என்று அடங்கி விடுகிறது.
அவன்தான் வைத்தான், அவன்தான் தீயை வைத்திருக்கிறான்
என்று சொல்கிறார். எல்லாம், இவன் செய்த வேலைதான் என்கிறார்,
குருநாதர்
4. இந்தக் கல்யாணம் நடக்காது,
என்று சொன்னார் குருநாதர்
இப்படி இருக்கவும், நான் குருநாதரை ஐவர் மலைக்குக்
கொண்டு போகலாம் என்று சொன்னேன். அங்கு ஒரு முருகன் கோவில்
இருக்கிறது. அருகில், இராமலிங்க அடிகள்
மண்டபத்திற்குப் பக்கத்தில் ரூம் இருக்கின்றது. அங்கு
இருங்கள் என்றார், ராமசாமி. சாப்பாடெல்லாம் கொடுக்கிறேன்
என்று சொல்லி, கூட இரண்டு பேரையும் அனுப்பி வைத்தார்.
ஐவர் மலையில் ஏறும்
போது, என்னால் எப்படிடா ஏற முடியும்? நான் கை, கால் வராமல் இருக்கிறேன். நான் எப்படிடா ஏறுவேன்? என்று கேட்கின்றார், குருநாதர்.
குருநாதர் எம்மிடம்
கையை வைடா என்றார். கையைக்
கீழே வைத்தவுடன், கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு, எழுந்திரிடா என்கிறார்.
எப்படி சாமி இந்தக்
கையில்? என்று கேட்டேன்.
நான்தான்
சொல்கிறேன் அல்லவா? எழுந்திரிடா.., உனக்கு சக்தி கொடுத்திருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு, கையில் உட்கார்ந்து “தை.. தை.. தை…” என்று குதிக்கின்றார்.
மேலே, மலையில் ஏறச் சொல்கிறார்.
கொஞ்ச தூரம் சென்றதும், நான் “சாமி., கை வலிக்கின்றது” என்றேன்.
சொன்னவுடன் கீழே இறக்கி
விடு என்று, சொன்னார்.
கூட இரண்டு பேர் வந்தவர்களிடம் தூக்கச் சொல்கின்றார். ஆனால்,
அவர்களால் குருநாதரைத் தூக்கவும் முடியவில்லை, மேலே ஏறவும் முடியவில்லை..
ஏன்டா?, அவன் ஒரு கையில் தூக்கினான். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து, என்னைத் தூக்க
முடியாதா? என்று, வழியில் ஒரே கலாட்டா பண்ணுகின்றார் குருநாதர்..
அப்புறம் ஒரு வழியாக
மேலே ஏறிப் போகவும்,
படி மேலே ஏறினால், “அந்தப் படியில் போகாதே, நீ என்னைக் கீழே உருட்டிவிடுவாய்,. இந்த வழியில் போடா” என்கிறார், குருநாதர்.
பெரிய வம்பு பண்ணி, எல்லாம் மேலே ஏறிப் போனோம். மேலே
போனவுடன், அங்கு ஒரு கல்யாணக் கூட்டம் வந்தது. குருநாதர் அவர்களிடம், இந்தக் கல்யாணம் நடக்காது என்று, அங்கேயும் பெரிய
தகராறு செய்கிறார்.
அவர்கள் எல்லோரும்
சேர்ந்து, குருநாதரை உதைக்க
வருகிறார்கள்.
உடனே நான், “ஐயா, அவர் ஏதோ சொல்கிறார், நீங்கள் குற்றமாக நினைக்காதீர்கள்” என்றேன், நான்.
அதற்கு குருநாதர், ஏன் யாருடா? என்னடா தெரியாமல் சொன்னது? என்று சொல்லி, “மீண்டும் இந்தக் கல்யாணம் நடக்காது” என்கிறார்.
ஏனென்றால், ஏற்கனவே பெண்ணைக் கூப்பிட்டு
வரும் இடத்தில், தகராறு. அங்கே, சொந்த மாமன்காரன் விடமாட்டேன் என்கிறான் அவர்கள் வந்தார்கள் என்றால், வெட்டி விடுவேன் என்று சொல்கிறான்.
ஆக, இந்த அளவில் அங்கு தகராறு நடக்கின்றது.
இதைச் சொல்கிறார். இந்தக் கல்யாணம் நடக்காது.
இவர்கள், அது எப்படிக் கல்யாணம் நடக்காது?
மாப்பிள்ளை எல்லாம் வந்தாகிவிட்டது, பொண்ணு எப்படி
வராமல் போகும், அது வந்து கொண்டிருக்கின்றது என்கின்றார்கள்.
ஆனால், குருநாதர் சொன்ன மாதிரியே
நடந்தவுடன், அவர்களுக்கு என்ன ஆனது? இது பெரிய சமாச்சாரம்.
அங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம்,
அப்படியே சொல்கிறார். அவரைப் பைத்தியமாகத்தான் நினைத்தோம் என்று, அடிக்க வந்தவர்களெல்லாம் குருநாதர் காலில் விழுந்து, கும்பிட ஆரம்பித்தார்கள்.
5. “என்னைக் காப்பாற்றுடா”
என்கிறார் குருநாதர்
அங்கு மேலே போனவுடன், படுத்து கொண்டோம். எனக்குப் பயமாக இருக்கிறது நீ என் பக்கதில் படுத்துக்கொள் என்றார்,
குருநாதர். இரவு பனிரெண்டு மணி இருக்கும். கை, கால் வராமல் முடமாக இருந்தவர், எழுந்து நடக்கிறார். சாதாரணமாக நடக்கின்றார்.
நடந்து போய், அங்கு ஒரு பிள்ளையார் கோவில்
இருக்கும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை, நான்
முழித்துப் பார்த்து கொண்டே இருந்தேன்.
அங்கே போனவுடன், “தெலுங்கு
ராஜ்ஜியம் இங்கே வாடா., என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து, இங்கே வைத்துவிட்டான். வந்து தூக்குடா என்கிறார்.
இரவு நேரத்தில் அங்கே
போய் என்ன செய்வது?
சருக்கலான பாறை. அப்பொழுதுதான் காலையில் விடிகின்றது. அந்த நேரம். அங்கே பார்த்தால், சருக்கலான இடத்தில்
கோயிலில் சென்று உட்கார்ந்திருக்கிறார்.
அந்த இடத்தில் இருந்துகொண்டு
என்னைக் காப்பாற்றுடா., என்னைக்
காப்பாற்றுடா, என்கிறார். அங்கே சென்றால், சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார்.
இன்னும் அந்த
வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது. நான் எப்படி சாமி வர முடியும்? என்று கேட்டேன்.
பின், வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு, இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
ஆனால், அதைப் பிடித்துக் கொண்டு, கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக்
காப்பாற்றுடா, துண்டு, வேஷ்டி எல்லாம்,
என்னைக் காப்பாற்றாது என்கிறார், குருநாதர்.
நான் உள்ளே சென்றவுடன்,
சாமி, வேஷ்டியையும் பிடித்துக்
கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும், பிடிக்க முடியவில்லை. அப்பொழுது, நான் ஒரு பக்கம்
இருந்தாலும், என்னை வழுக்கிவிட்டு,
இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..
குருநாதர், “என்னை
காப்பாற்றுடா” என்கிறார்.
சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற
வேண்டும். கீழே விழுந்தால், நொறுங்கித்
தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும்
என்றேன். இது நடந்த நிகழ்ச்சி.
6. ஏறு சிங், இறங்கு சிங் பார்த்திருக்கிறாயாடா? என்று கேட்டார் குருநாதர்
அப்பொழுதுதான், காலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அப்பொழுது அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர், “ஏறு சிங்., இறங்கு சிங்., என்று நீ பார்த்திருக்கிறாயாடா” என்றார்?
சாமி, இப்பொழுது நான் இறங்கு சிங்கில்
கீழே போய்க் கொண்டு இருக்கிறேன். செத்த பிற்பாடு, உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும். அதிலே
வேண்டுமென்றால், போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.
ஏன்டா நான்
சொல்கிறேன், நீ எதிர்த்துப் பேசுகின்றாயா? என்றார், குருநாதர்.
பார்த்தால், அந்த இடத்தில் வைத்து, குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக
நிலைகளையும், மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.
“இப்பொழுது, நீ இந்த உலகத்தைப் பாருடா” என்கிறார்.
எங்க சாமி பார்ப்பது? இன்னும் கொஞ்ச நேரத்தில் போய், எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது என்றேன், நான்.
நீ உலகத்தைப்
பாருடா என்றால்,
எங்கடா நீ அடங்கிவிடும்? என்று சொல்கின்றாய் என்று இப்படி
வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.
அப்படியே, பாறையில் நெஞ்சோடு தேய்த்து
இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால், அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும்
கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் போலத் தெரிகின்றது.
“நீ இதைப் பார், உலகம்
எப்படி இருக்கிறது என்பதைப் பார்”, என்று என்னென்னமோ
அதிசயங்களை எல்லாம், காட்டுகின்றார் குருநாதர்.
நான், “சாமி
இன்னும் கொஞ்சம் நேரத்தில், நீங்கள் சொல்வது எல்லாவற்றையும்
போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும், கொஞ்சம்
அமைதியாக இருங்கள்” என்றேன்.
7. ஐவர் மலையில் வைத்துத்தான் முழுமையான
சக்தியைக் கொடுத்தார் குருநாதர்
அதற்குப்பின், எத்தனையோ உணர்வுகளை
ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார். இந்த மரண நிலைகளில் வைத்துத்தான், கொடுக்கிறார்.
முழுமையான சக்தியை, அங்கே இருந்துதான் எனக்குக் கொடுக்கின்றார். இதே ஐவர்
மலையில் வைத்துத்தான் கொடுத்தார், நமது குருநாதர்.
அந்த நேரத்தில், காலையில் அங்கு யாரும் இருக்க
மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன
செய்தார்?
சிவ தாண்டவம் ஆடுகிறார், ஒரு
பெரு விரலில் நின்று கொண்டு, அப்படியே “கிறு கிறு கிறு” என்று பம்பரம் போல் சுற்றி,
அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார். எல்லா வேலைகளையும் செய்கின்றார்,
குருநாதர்.
அப்பொழுது, எல்லா உணர்ச்சிகளையும்
செய்யப்பட்டு, இந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடுதான், நீ பல
உண்மைகளை அறிவாய், பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து, மரண
வாயிலில் வைத்துத்தான், இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.
இந்த உலகம் எப்படி
இருக்கிறது என்று, நீ
அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்? இங்கு யாராவது தப்பு
செய்தால் கூட, என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை.
ஆனால், அதைச் செய்தால் இந்தச் சக்தி
விரயம் ஆகும். ஆக, அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு
செல்லாமல், உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும், என்று
சொன்னார் குருநாதர்.
இப்படித்தான் ஏதேதோ
செய்யும்படி, பல நிலைகளைச் செய்து, “அது சொல்வதற்கில்லை”. இப்படி
எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார், குருநாதர்.
நமது அகண்ட
அண்டமும், பேரண்டமும்
இந்த உணர்வின் தன்மை
எப்படி இயங்குகிறது?
என்ற சில
உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.
நமது பிரபஞ்சமும், 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம்
இயங்குகிறது என்பதை, நேரடியாகப் பார்த்தால்
எப்படி இருக்கும்?
அந்த மரண வாயிலில் வைத்துத்தான்,
இந்த அற்புதங்களை,
பார்க்காத காட்சிகளை எல்லாம்
காட்டுகிறார், குருநாதர்.
பின் அந்த
உணர்வின் தன்மை கொண்டு, ஏறு
சிங், இறங்கு சிங் என்று சொல்லி, இந்த ஆட்டங்களைக் காட்டி, அப்புறம்
என்னை எழுப்பிவிடுகிறார், குருநாதர்.
அப்பொழுது, அந்த இடத்தில், மற்றவர்கள்
பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால், இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.
மற்றவர்கள் அவரைப்
பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக்
கொடுத்து, இங்கு நடனம் ஆடுகிறார்.
குருநாதர் ரசமணி
செய்வார். தங்கத்தைச் செய்வார்,
இந்தச் சரக்குகளைச் செய்தால், அது சரியாகும், அவரிடம்
தங்கத்தைப் பேணிக் காக்கலாம் என்ற வகையில், குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள்
ஏராளமானோர். ஆனால், இதிலிருந்து ஒடுங்கப்பட்டு, தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான், அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
அப்புறம்தான், அங்கிருந்து புறப்பட்டு, இன்றைக்கு வரையிலும் அவர் சொன்ன உண்மையின் நிலைகளைச் செய்கிறேன். அவர்
இருக்கும் பொழுதே பல காடுகள், பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். ஆகவே, இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து, இந்த ஐவர்மலையில் தான்.
ஆகையினால், அந்த உண்மையின் உணர்வு வந்தபின்,
குருநாதர் என்ன செய்வார்? சில இடங்களில், சில மரங்களை, கற்களை எடுத்து, இப்படிச் சொன்னால் அது தூக்கி மேலே
போகும், அந்தப் பக்கம் தூக்கி வீசுவது. இந்த மாதிரி உணர்வுகளையும் குருநாதர் காட்டுவார்.
அப்பொழுது, எனக்கு என்ன செய்கின்றது?
இந்தச் சக்தி வரும்போது, எனக்கு ஒரு திமிர் ஏற்படுகிறது.
ஒரு மரத்தைத் தூக்கி வீசும் பொழுது, நம்மால் எதை
வேண்டுமானாலும் செய்யமுடியும்.
ஓர் எதிரி
இருந்தால், அவனை வீழ்த்தக்கூடிய
சக்தி நமக்கு இருக்கிறது என்று, இப்படித்தான் எனக்குச் சிந்தனை
வருகிறது. அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று, அந்தந்த
சமயங்களிலெல்லாம், குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும்
உபதேசித்தார்.
ஆக இன்று வரையிலும், எம்மை குருநாதர்
எப்படிக் கொண்டு வந்தாரோ, அதே போல மற்றவர்களையும்
கொண்டு வர வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன்.
ஆக இத்தனை பெரிய
சிரமங்களைக் கடந்து, இந்த உலகம் எப்படி இருக்கிறது என்ற நிலையும். இந்த உடலுக்குப்பின்
எப்படி என்ற நிலையும்,
பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்? என்ற உண்மைகளை, எனக்கு உணர்த்தினார் குருநாதர்.
அப்பொழுது அந்த நிலையில், எது எது உன்னைச் சந்திக்கும்?
அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்? அல்லது
ஆசையின் நிலைகள்
உனக்குள் திரும்பும் போது,
உன்னை எதிரி என்ற
நிலையில்,
உன்னைத் தாக்கும்
உணர்ச்சி வரும்.
அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின்
உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு, உனது நல்ல குணங்களைக் கொல்லும். அவனையும் காக்க
முடியாது.
இப்படிக் கடுமையான
சோதனைகள். போகும் பக்கம் எல்லாம்
எதிர்ப்புகள் வரும். நாய் கூட கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.
இப்படித்தான், இருபது வருடம் அனுபவம் பெற்று,
இன்றைக்கு இந்த உலகம் எப்படி இருக்கிறது என்ற நிலையை, காடு மேடெல்லாம் சென்று நான் அறிந்தேன்.
உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.
நிறையச் சொல்லப் போனால், ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட
அவஸ்தைகள், இன்னதென்று சொல்ல முடியாது.
8. நீங்கள் அனைவரும், அகஸ்தியனைப் போன்று அருள்ஞானிகளாக உருவாக வேண்டும்
ஆகையால், இதைப் பேணிக்காத்து
எல்லோருக்கும் இந்த உன்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக்
கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.
ஆக, அதே சமயத்தில்
என்னுடைய ஆசை, நீங்கள் அனைவரும் என்னைப்போல் பெரும் ஞானிகளாக மாறவேண்டும்.
பிறருடைய தீமைகளைப்
போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர, இந்த உடலின் இச்சைக்கு மாறிவிடாது
உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் என்னுடைய முழுமையான தியானம்.
நீங்கள் முழுமை பெற்றால்தான்
இதைச் செயல்படுத்த முடியும். ஏனென்றால், அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.
ஆகையால், இப்பொழுது உபதேசித்த
உணர்வுகளை, நாம் மற்றவர்களுக்கு எப்படி உங்களை இயக்குகின்றது? அதில் இருந்து
நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தைக் கூறி, அந்தப்
பதிவின் நிலைகளை அவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அந்தப் பதிவின் நிலைகள்
அவர்களுக்குள் வளர்ந்து,
அந்த எண்ணத்தால்
தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
தீமை செய்தவர்கள்
திருத்திக்கொள்வதும்,
நன்மை செய்யும்
உணர்வு உள்ள மக்களாக
அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்
என்பதற்குத் தான், யாம் இதைச் சொல்வது.
அந்த முழுமையின்
தன்மைகளை, நாம் எல்லோரும் அடைதல்
வேண்டும். இதுதான் நமது லட்சியமே. ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது, செல்வத்தை நாம் தேடிப் போகவேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும்.
செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால், அதனுடைய ஆசையின் நிலைகள்
உடல் பற்று தான் வரும்.
ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள்வழியில்,
நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று. உலகைக் காக்கும் அருள்ஞானிகளாக வளரவேண்டும் என்று நான்
பிரார்த்திக்கின்றேன். எமது அருளாசிகள்.