ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2013

ஆறாவது அறிவிற்குள் கலந்துள்ள தீமைகளை அகற்ற வேண்டும்

1. ரசிம்மா
கலியில் தப்புபவர்கள்தான் மகரிஷிகளின் துணை கொண்டு, தீமைகள் நமக்குள் அணுகாது, தீமையான உணர்வுகள் தம்மைத் தாக்காது பாதுகாத்துக் கொள்வதும்,  தீமையைக் கண்டுணர்ந்து நுகர்ந்தாலும்,  அது நமக்குள் ஜீவ அணுவாக மாறாது,  எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதுதான்,  நரசிம்மா என்பது.

நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ,  அந்தத் தீமையின் உணர்வுகள் நமது கண் நமக்குள் பதிவாக்கி விடுகின்றது  பதிவானபின், கண்ணின் காந்தப் புலன்றிவு,  அதன் உணர்வைக் கவர்ந்து, நம் ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது. ஆன்மாவாக மாறும் பொழுது,  இதை மடி என்று சொல்லுகின்றார்கள். அதே சமயம்,
நமது உயிர், 
சுவாசத்திற்கு நேராகத்தான் அமைந்துள்ளது.
நமது மூக்கு வாசல்படி,
வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்,
இரண்யனைப் பிளந்தான் என்று சொல்லுவார்கள்.
மடிமீது வைத்து, அவனுடைய தீமைகளைப் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள்..

நாம் உயர்ந்ததை எண்ணும் பொழுதுநமது உயிர்,  உயர்ந்த அணுக்களை உருவாக்குகின்றது. தீமையை எண்ணும் பொழுதுஅதன் நிலைகளை உருவாக்குகின்றது. அதன் நிலைகளில் செயலாக்குகின்றது.  
2. ஆறாவது அறிவிற்குள் கலந்துள்ள தீமைகளை அகற்ற வேண்டும்
நாம் உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோம்அந்த குணங்களைக் காப்பதில்லை. நான் நல்லது செய்கின்றேன் ஆனால்இவன் இப்படிச் செய்கின்றானேஎன்று இதில் இணைந்து கொள்கின்றேன். அவர்கள்,  அதிலிருந்து விடுபடும் எண்ணத்திற்கு நான் வருவதில்லை.

அவர்கள் எண்ணத்தை நம்முடன் கலக்கின்றோம். நல்ல மாவை வைத்துக் கொண்டுஅதில் துவர்ப்பு,  உப்பு அதிகமாகப் போட்டால் சுவை எப்படி இருக்கும்.

இதைப் போன்று,  நாம் பிறர் செய்யும் தவறுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது,  நம் ஆன்மாவில் இது கலக்கின்றது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை,  நமது உடல் மலமாக மாற்றுகின்றது. நமக்குள் நஞ்சினை நீக்கிடும் ஆற்றல்,  ஆறாவது அறிவாக வருகின்றது.  

இந்த ஆறாவது அறிவில்,  பிறரின் தீமையான உணர்வுகள் கலந்து விடுகின்றது. இதனுடன் கலக்கப்படும் பொழுது,  தீமையை அகற்றிடும் எண்ணம் இருந்தாலும்,  அவர்கள் தீமை செய்யும் உணர்வுகள்,  நம்மிடம் வந்தவுடன்,  தீமைகள் செய்யும் உணர்வுகளே நமக்குள் வருகின்றது.
                              
ஒரு குழம்பில் காரத்தைப் போட்டால், காரத்தின் உணர்ச்சியைத்தான் தூண்டும். விஷத்தைக் கலந்து விட்டால்,  விஷத்தின் செயலாக்கம்தான் வருகின்றது. ஆனால் தீமையை நீக்கி, மகிழச் செய்யும் வாகனமாக இருக்கின்றது ஆறாவது அறிவு.

நமது ஆறாவது அறிவின் செயலாக்கத்தை, மகிழ்வாகனா என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். நாம் பல தீமைகளை அறிந்து, ணர்ந்து,  விலகிச் சென்றாலும்,  நமக்குள்,  ஆறாவது அறிவிற்குள் கலந்த தீமைகளை நீக்க வேண்டும்.
3. பிறரைத் தொலைத்துவிட வேண்டும் என்று எண்ணினால், அந்த எண்ணம் நம்மைத் தொலைத்துவிடும்
கையில் மண்ணைப் பிசைந்த பின், கையைக் கழுவாமல் உணவை உட்கொண்டால், மண்ணுடைய நிலைகள்தான்  வரும். உப்பைக் கையில் எடுத்துவிட்டு, எந்தப் பொருளை எடுத்தாலும், உப்பின் கைப்புத் தான் வரும்.

ஆகையால் நாம் நுகர்ந்த உணர்வுகள்,  நமக்குள் இது கலந்துதான் நுகர வேண்டும். இரண்டும் கலந்து நுகரப்படும் பொழுது,  பிறர் செய்யும் தீமையின் உணர்வுகள் முன்னிலையில் வந்துவிட்டால்,  நமக்குள் இருக்கும் நல்ல உணர்வின் தன்மை,  தெளிவாக்குகின்றது.
தெளிவாக்கும் பொழுது, 
தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.
ஆனால் தவறைத் தெரிந்து கொள்கின்றோமே தவிர, 
தவறை நீக்கும் நிலைகள் நமக்கு இல்லை. 

தவறை எவ்வழியில் நீக்குகின்றோம்? ஒருவரிடம் சொல்லுகின்றோம். கேட்கவில்லை என்றால்,  இவனைத் தொலைத்தால்தான் சரியாக இருக்கும் என்று, அவன் உடலைத் தான் எண்ணுகின்றோம். 
அவனைத் தொலைத்துவிடலாம்.
அந்த தொலைத்துவிட வேண்டும் என்ற எண்ணம்,
அவனில் விளைந்தது,
நம்முள் நின்று,  நம்மைத் தொலைக்கின்றது.

இதைத் தடுக்க வேண்டுமல்லவா?  இதற்குத்தான், சாதரண மக்களும் புரிந்து கொள்வதற்காக,  இந்த விநாயகனைக் காட்டியது. நாம் தீமையை சுவாசிக்கும் பொழுது, தீமையை செயல்படுத்தும் வாகனமாக, நமது உடலில் செயல்படுகின்றது.

இதுதான் மூசிகவாகனா என்பது. அந்தத் தீமையான உணர்வுகள்,  நம் கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாக நம்மை இயக்கத் தொடங்குகின்றது,  இது தெளிவாக்கப்படுகின்றது.
4. உயிரிலே ஆக்ஞையிட வேண்டும்
இதை மாற்றுவதற்குத்தான்,  அரசைக் காட்டி (அரச மரம்),  மனித வாழ்க்கையில் தீமையை அகற்றிடும் உணர்வை,  உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைகொண்ட,  துருவ மகரிஷியைக் காட்டியது.

நாம் தீமையை,  எதை நுகர்ந்தாலும், ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் துருவ மகரிஷியை எண்ணி, நாம் அதை நுகர்ந்து, அதை உள் நின்று, வலுப் பெறச் செய்ய வேண்டும். 

உயிர் வழி அதை நுகர்ந்து, 
உடலுக்குள் செலுத்தி.
தீமைகளை அகற்ற வேண்டும்.
நம் சுவாசத்தின் மூலம்,  அதை எடுக்க முடியாது.

ஏனென்றால், தீமையின் உணர்வுகள் அதிகமாக இருக்கும் பொழுது, நம் உயிரில்பட்டு,  அந்த இயக்கமாகத்தான் இருக்கும். 

ஆகவே,மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணமே வராது. எண்ணினாலும், உடனே மறைந்து விடும். எல்லோரும் என்னால் எண்ண முடியவில்லையே என்று சொல்லுவார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்றால், நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி இருக்க வேண்டும்.

அதை நம் கண்களுக்கு கொண்டு வந்து, நினைவை, நம் உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும். 

செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை,  புருவ மத்தியில் செலுத்த வேண்டும். பின் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று, உயிர் வழி உள்ளுக்குள் செலுத்த வேண்டும். இதுதான் ஆக்ஞை என்பது.

    மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்,  இந்த உணர்வின் தன்மையை உள்ளுக்குள் கொண்டு போய், அந்த உணர்வை வலுப்பெறச் செய்து தீமையை இயக்கும் நிலையை நாம் இழக்க வேண்டும். நமது ஆன்மாவில்,  அந்தத் தீமையை இழந்திடல் வேண்டும்.