Sunday, January 20, 2013

தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்

Inline image 1   Inline image 2
(பக்கம் 6-9)
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், எப்படி வளர்ந்தோம்? இந்த மனிதனுக்குப் பின், நாம் எங்கே செல்ல வேண்டும்? என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், இன்று விஞ்ஞான உலகம். நாம் எத்தனை கோடி உடல்களைக் கடந்து நாம் மனிதனாக வந்திருந்தாலும், ஒரு விஷத்தன்மையான காற்று நம்மைத் தாக்கினால்.விஷம் சூழ்ந்தால், விஷத்தன்மை தாக்கிய நாம் எங்கே செல்வோம் என்றால், விஷத்தின் தன்மை கொண்ட பாம்பினங்களுக்கு, நம்மை அழைத்துச் சென்றுவிடும், நம் உயிர்.

இதைப் போலத்தான், இன்று போர் மூளும் அபாயம் வருகின்றது. யாம் எச்சரிக்கை செய்கின்றோம். இன்று அணுகுண்டுகளைப் போட்டாலும், நம் இந்தியாதான் முதலில் பாதிக்கப்படும்.

நாம் வணங்கி வரும் முருகனும், இராமனும், வெங்கடாசலபதியும், அணுகுண்டு போடும் பொழுது, நம்மைக் காக்கப் போவதில்லை. நம்மை உருவாக்கிய, உயிர் என்ற கடவுள் தான் இருக்கும்.

விஷம் தோய்ந்த அணுக்களான பிறகு, இதோடு சேர்த்து, விஷப்பூச்சியாகத்தான் பிறக்க நேரிடும், அல்லது அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால், சூரியனிலிருந்து வரக்கூடிய கக்திரியக்கத்தை, அது தடைப்படுத்தும் பொழுது,, பூமி அந்தப் பக்கம் குளிர்கின்றது, உறைபனியாக மாறுகின்றது.
Inline image 4
உறைபனி அதிகமாகும் பக்கம், பூமி எடை கூடி, குடை சாய நேருகின்றது. இப்படி பூமி திரும்பினால், நிலங்களை கடல்கொள்ளும். நாம் அனைவரும் கடலுக்குள் தான் இருப்போம்.அவர்கள் கடவுளும் காக்க மாட்டார்கள். நம் கடவுளும் காக்க மாட்டார்கள்.

ஆண்டவனைக் காக்க போர் செய்தாலும், இந்த விஷம் தோய்ந்துவிட்டால், நினைவு இழந்துவிடுகின்றது. தப்புவது யாருமில்லை.

விஞ்ஞான அறிவு கொண்டு, கொழி முட்டையை ஐஸ் பெட்டியில் வைத்து, உயிரின் இயக்கத்தைத் தடைப்படுத்தி, குளிர்ச்சியில் வைத்து விடுகிறார்கள். அதே போல, நம் கண்களைத் தோண்டி எடுத்து, அது கெடாதவாறு, பாதுகாப்பாக குளிர்ச்சியில் வைத்துவிடுகிறார்கள்.

இரத்தத்தை உருவாக்கிய அணுக்கள் இன்னொரு உடலில் இரத்தத்தைச் செலுத்தியவுடனே, உஷ்ணமானபின் அந்த அணுக்கள் ஜீவன் பெறத் தோடங்குகின்றது.

நமது பூமி புரண்டால், பல நகரங்கள் உள்ளுக்குள் செல்லும். பண்டைய காலங்களில் இவ்வாறு உள்ளுக்குள் சென்றுள்ளது. பூமிக்குள் சென்ற மரங்கள் மக்கி, நிலக்கரியாக மாறுகின்றது.
இதைப் போல ஆகிவிட்டால்,
நமது உயிர் கடலுக்கடியில் போனபின்,
அந்த உப்புத் தண்ணீரைச் சேர்த்து,
உயிரின் துடிப்பு அதற்குள் ஆகி,
நம்மைக் கடல் வாழ் இனமாக மாற்றிவிடும்.

பூமியில், ஆரம்பத்தில் கடல்வாழ் தாவர இனங்கள் தான் முதலில் தோன்றியது. அதிலே விழுந்த உயிரினங்கள் மீன் இனங்களாக மாறி, அதில் சிக்கும் கரு முட்டைகள் மேகங்களில் கலந்து, மழை நீரில் கலந்து தரைவாழ் இனங்களாக மாறி, தாவர இனங்களை உட்கொண்டு, ஒன்றை ஒன்று உணவாக உட்கொண்டு, பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக உருவாக்கியது.

மனிதனானபின், இன்று விஞ்ஞான அறிவால், தன் நாட்டைக் காக்க, தன் மதத்தைக் காக்க, தன் இனத்தைக் காக்க, மற்ற நாட்டையும், மதத்தையும், மற்ற இனத்தையும் அழிக்கும் நிலைகள், மனிதனுக்குள் வளரும் நிலைகளில், இன்று எல்லோருமே, அணுகுண்டைப் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

இப்படி வெடித்தால், கடல் நீர் பனிப்பாறைகளாக மாறி, நமது பூமியும் புரண்டவுடனே, நாமெல்லாம் உள்ளுக்குள்ளே போய்விடுவோம்.

பிறகு அதே இடத்தில் அதே உயிர், அதற்குத்தக்க சந்தர்ப்பத்தில், இந்த உடல் எந்தெந்த வேதனைகள், எந்தெந்த உணர்ச்சிகளை எடுத்ததோ, அதற்குத்தக்க பொறிகளை ஏற்படுத்தி, நண்டோ மீனோ, அல்லது உணர்வுக்குத் தக்க பல வகையான கடல்வாழ் இனங்களில் ஒன்றாக, மாறிவிடும்.

இன்று நமக்கு அதிலிருந்து மீட்டிடும் சக்தி இருந்தும்,
இந்த உடல் இச்சைக்காக நாம் செயல்படும் தன்மைகள்,
இந்த உடலையே காக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது
என்பதனை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை ஒரு நாளில், யாம் தெரிந்து கொள்ளவில்லை. 30 வருடம் காட்டுக்குள்ளும், நாட்டுக்குள்ளும் சென்று உணர்வுகளை அறிந்தோம்.

குருநாதர் சொன்னபடி, என்னைக் கடலுக்குள் மீன் மாதிரி மிதக்கச் செய்து, இராமேஸ்வரம் கடலில்தான் முதலில் மிதக்கச் செய்தார். பின் கோகர்ணம் கடலில், நடுக்கடலுக்குப் போகச் செய்தார்.
Inline image 5
அங்கே பெரிய அலைகள் வருகின்றது. அந்தக் கடலுக்குப் போவதற்கு முன், மலை ஒன்று உண்டு. அதில் காளி சிலை ஒன்று உண்டு. அங்கு எட்டிப் பார்த்தால், அலைகள் நம்மை இழுக்கும். கம்பியைப் பிடிக்கவில்லை என்றால், கடலுக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

குருநாதர், அலைகளில் உள்ள காந்தப் புலனைக் காட்டுகின்றார். அதே மாதிரி, கடல் அலைகளில் எப்படி நெருப்பு உண்டாகின்றது? என்றும் காட்டுகின்றார் குருநாதர். அனுபவித்துச் சொல்கின்றோம்.
Inline image 6
பல கஷ்டங்கள் பட்டுத் தெரிந்து கொண்டபின், உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள், நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குகின்றது. அவர்களுக்கு இது பயன்படட்டும்” என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

(பக்கம் 9-11)
குரு காட்டிய அருள்வழியில், “ஒவ்வொரு உயிரும் கடவுள், அவன் வீற்றிருக்கும் உடல் கோவில்”. உணர்வுகள் இயங்கும் பொழுது குணங்கள்.

அது தெய்வங்களாக இருந்து, தீமைகளை நீக்கி, நல்லவைகள் செயல்படும் மனிதர்களாக ஆனபின், தீமைகளை அகற்றி நல்லவைகள் உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

தீமைகளை அகற்றிவிட்டால் விஷமற்ற நிலைகளில் “ஆனந்தம்” என்ற நிலைகள் வரும். அப்படி வரும்பொழுது, “ஏகாந்த நிலை” என்ற பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெற்றது, இந்த மனித உடல்.
Inline image 5
ஆகவே, மனிதர்களை அமைதிப்படுத்தி, சாந்தப்படுத்தி, இந்த உணர்வை எடுத்தால், பல மனிதர்களில் இதனை விளையச் செய்தால், இந்த உணர்வுகள் அலைகளாகப் படரும். அதிலிருந்து உயர்ந்த சக்தியை நீ பெற முடியும் என்று, குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

ஊருக்குள், தெருவுக்குள் இரண்டு ரவுடி சத்தம் போட்டால், அங்கு அமைதி கெடுகின்றது. அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது. அவனை எண்ணி, அந்த உணர்வைப் பதிவு செய்தால், நமக்குப் பயம் வருகின்றது. நமக்குள் நோய் என்ற நிலைகளும் வருகின்றது. தொழிலும் சீராகச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்று, எல்லாவற்றையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான, அந்தப் பேரருளை அனைவரும் பெறக்கூடிய “சந்தர்ப்பத்தை ஏற்படுத்து” என்று கூறுகின்றார்.

அதைத்தான், வருகின்றவர்களுக்கு அவர்கள் உடலில் விளைந்த தீமைகளையும், நோய்களையும் நீக்க, அந்தப் பேரருள் உணர்வைப் பதிவு செய்து, அதை வளர்த்துக் கொண்டால், தீமைகளை நீக்க முடியும் என்று உதாரணத்திற்குக் காட்டுகின்றோம். அதை யாரும் செய்வதில்லை.

இங்கு தபோவனத்திற்கு, ஒருவர் நடக்க முடியாமல் வந்தார். இவரை நடக்க வைத்தால், அடுத்தவர்களுக்கு உற்சாகமாகும். அவரும் அதைச் செய்வார், அடுத்தவர்களுக்கும் இதைச் செய்வார் என்று யாம் செய்தோம்.

ஒரு உடலில் வேதனை இருக்கும் பொழுது,
அதைச் சொல்லும் பொழுது, எல்லோருக்கும் வேதனை.
அந்த வேதனையை எண்ணும் பொழுது, வித்தாகின்றது.
ஆக, இதை வளர்க்கும் சந்தர்ப்பம்தான் வருகின்றது.

அதைப் போல வேதனையிலிருந்து மீட்டி, அந்த உணர்வை உடலில் பாய்ச்சி, ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்தி,
இதை நீ அடுத்தவர்களுக்குச் சொல்
உன் சொல் அங்கே நல்லதாக்கும்.
இந்த உணர்வின் சொல்லால், நீ இதைச் செய்” என்று மற்றவர்களுக்குச் சொன்னால், இன்று உன்னில் விளைந்தது அங்கு பதிவாகி,அதை அவர்கள் எண்ணினால், அவர்கள் நோயும் போகும். என்ற நிலைக்காகத் தான் யாம் செய்தோம்.

நோயின் தன்மை அடுத்தவர்கள் கேட்கும் பொழுது, அவர்களில் நோயைத்தான் உருவாக்க முடியும். உன்னுடன் அன்பாக, பண்பாக, பாசமாக, உன்னிடத்தில் அணுகினால், நண்பன் என்ற நிலைகளில் நீ சொல்லும் பொழுது, அவர்கள் ஆசைப்படுகின்றார்கள்,“இச்சை”. அவர் உணர்வை நுகர்ந்து, உடலில் சேர்க்கப்படும் பொழுது, “கிரியை”. அதன் வழிப்படி ஞானங்களாக வேதனை வரும், “ஞானசக்தி”. இதுதான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி.

இதைப் போல, துயர் நீக்கும் உணர்வின் தன்மையை இச்சைப்படச் செய்து, ஈஸ்வரா என்று உயிரை எண்ணு. உயிருடன் ஒன்றி உணர்வின் ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணு. அந்த உணர்வின் தன்மை பதிவாகும் என்று ஏக்கத்தை ஊட்டி, இதைப் பதிவு செய்து, அந்த வேதனையில் இருக்கும் பொழுது, ஆசை வரும்.

அப்படி ஆசை வரும் பொழுது, உயிருடன் ஒன்றி உணர்வின் ஒளியான, அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வார்கள், என்ற எண்ணத்தில் மூன்று வருடம் நடக்க முடியாதவரை நடக்கச் செய்தது. நடந்தவுடன், நான் இதை ஊரில் உள்ளவரிடம் எல்லாம் சொல்லப் போகிறேன் என்று சொன்னார்.

பிறகு ஒரு வாரம் கழித்து, திருப்பதி வெங்கடாசலபதிக்கு, பாத யாத்திரை சென்று, காணிக்கை செலுத்தியதாகச் சொன்னார். தபோவனத்திற்கு, சீதா மரம் ஒன்றும், தென்னையும் கொடுத்தார். அவர் எடுத்துக் கொண்ட உணர்வு அவ்வளவுதான்.

யாம் எண்ணியது, துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்ததனால் நல்லதாகியது என்று, இவர் அடுத்தவரிடம் போய்ச் சொன்னால், அவருக்கும் நல்லதாகும், என்று எண்ணிச் செய்தோம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ஆக, சமுதாயத்தில் நாம் எதை எண்ணுகின்றோமோ, அதைத்தான் நாம் கொண்டு போகும் நிலை இருக்கின்றது.

Inline image 6
எமது ஆசை உங்கள் உடலான கோவில் பரிசுத்தமாக வேண்டும். அதில் வீற்றிருக்கும் உயிருக்கு, சந்தோசத்தை ஊட்ட வேண்டும்.

அவன் அருளால், உங்களுக்குள் அருள் வளரவேண்டும். அவன் என்றும் அழியாதவன். இதைத்தான் நமது குருநாதர் எனக்கு உணர்த்தி அதைச் செய்யும்படி சொன்னார்.
(பக்கம் 11-14)
தீயில் குதித்தால் உடல் கருகுகின்றது, ஆனால் உயிர் வேகாது. உடலில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சாகாக்கலை. இதிலே எந்த அளவிற்கு உணர்வு இருக்கிறதோ, அந்தக் கலை பிரகாரம் உயிர் உடலை மாற்றும்.

விஷத்தை அதிகமாகச் சேர்த்தால், பாம்பாக உடலை உயிர் மாற்றும். இரக்கமற்றுத் தாக்கும் உணர்வை வளர்த்தால், அந்தக் கலை பிரகாரம் புலியாக உடலை உயிர் மாற்றும். பிறரை ஏமாற்றி வாழ்ந்து வந்தால், நரியாகப் பிறக்க வைக்கும்.

உயிருடன் எதை நாம் இணைக்கின்றோமோ, அதற்குரிய “தீர்ப்பை (JUDGEMENT)” உயிர் கொடுத்தேவிடும்.

சிவ தத்துவத்தில், இதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரனை வைத்தது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று வைத்தது.
நந்தீஸ்வரன் என்றால்,
சுவாசித்ததை உயிர் என்ற ஈசன் உருவாக்கும்.
நம் உடலுக்குள் போனவுடன், அதே குணத்தை உருவாக்கும்.
Inline image 6
கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால், உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது, கோபமான உணர்வு அதிகமாகி, அந்தக் கணக்கின்படி, நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால், சாப்பாடு அவர்களுக்கு யாராவது கொண்டு வந்தார்கள் என்றால், “வள்” என்று கத்தச் சொல்லும். உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ, அது போல நம்மை இயக்கும்.

நாம் ஒவ்வொரு உடல்களிலும், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், கடைசியில் மனிதனாக உருவாக்கியது, இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான்.

ஆனால், தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆனாலோ, அந்தக் கணக்கு கூடினால், உயிர் என்ற ஈசன் இந்த உடலை விட்டுச் சென்றபின், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப தீர்ப்பு.
நீ வேதனையை எடுத்ததனால், அங்கு சென்று பிறந்து பழகு,
நீ கஷ்டத்தை அனுபவி.
கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய், கஷ்டத்தை நீ அனுபவி,
என்று உயிர் உருவாக்கிவிடும்.
     
நாம் நினைக்கலாம். கோர்ட்டில் ஏறிப் போய், பொய்சாட்சி சொல்லலாம் என்று. உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது, என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால்தான் சிவதத்துவத்தில், நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று, இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கின்படி, பிறருடைய கஷ்டங்களையும், வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் பிற தோஷங்களாக நமக்குள் வந்துவிடுகின்றது. பிற தோஷத்தை எப்படிப் போக்குவது? என்றுதான் சிவன் ஆலயத்தில் காட்டப்படுகின்றது.

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்றால், 4 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று, விளக்கு பூஜை வைத்து, அர்ச்சனை செய்து, விரதம் இருந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்தபின், நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.

அதாவது, நான் எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பத்தில் நோயும், கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கின்றான். நீ போய் ஈசனிடம் சொல் என்று, பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக, அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

நமக்குள், அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று, நந்தி நமக்குள் சென்று, அவன் எப்படி தீமைகளை நீக்கினானோ, அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு  நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்? என்பதற்காக காலை 4 மணிக்கு இதை எடுத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று, உடலை உருவாக்கிய அணுக்களுக்கு, இப்படி சாப்பாடு கொடுக்க வேண்டும்.
Inline image 7
ஒருவர் மேல் அன்பாக இருக்கின்றோம். அவர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால், நம் உடலில் தோஷம் வந்துவிடுகின்றது. நம் உடலின் அணுக்களில் பட்டபின் வேதனைதான் படுகின்றோம்.

ஆக, நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம். பல கோடி சரீரங்களில் தீமைகளை நீக்கி, நீக்கி, அந்த வினைகளுக்கு நாயகனாக, தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது என்பதை, சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

எல்லா உயிரினங்களும் விஷத்தைத் தன் உடலாக்கி, வலுவாக இருக்கின்றன. மனிதனோ, விஷத்தினை நஞ்சாகப் பிரித்துவிட்டு, நல்ல உணர்வை வலுவாக்கி, நஞ்சை மலமாக்கும் திறன் பெற்றவன்.

நஞ்சென்று தெரிந்து கொண்டபின்,
நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது மனித உடல்.
அதனால்தான் “அங்குசபாசவா”என்று காட்டப்பட்டது.
தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வந்தபின், தீமையை நீக்கிடும் சக்தி பெற்றது மனித உடல்.
Inline image 5
இதையெல்லாம் உருவாக்கியது நமது உயிர். நம் உடலில் உள்ள கணங்களுக்கு எல்லாம் ஈசா, கணேசா என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன், இந்த உயிரை மதித்து நடப்பதற்குவினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்று, இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனானபின், எத்தனையோ உயிரினங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ இயந்திரங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ தாவர இனங்களைப் புதிது புதிதாக உருவாக்குகின்றான்.

எந்த உயிர் மனிதனாக உருவாக்கியதோ அது முழுமுதல் கடவுள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் இதைச் சொல்லியுள்ளான்.
என்று மனிதனை உருவாக்கியதோ,
அது முழுமையான கடவுள்.

(பக்கம் 14-16)
சூரியன் தனது இயக்கத்தால்விஷத்தின் தன்மையைதனது பாதரசத்தால் தாக்கி,வெப்பம்காந்தம் என்ற நிலைகளை உருவாக்கிகடைசி நிலைகளில் உள்ள விஷத்தைத்தனக்குள் கவர்ந்துஅந்த விஷம் ஒரு இயக்க அணுவாக மாறிஅது எதிலே போய் இணைகின்றதோஅந்த உணர்வை அது இயக்கும். 

27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களை அமைத்துஅதிலே வருவதைத் தன் உணவாக உட்கொண்டாலும்அவை சூரியன் அருகிலே வரப்படும்போதுதனது பாதரசத்தால் மோதுவதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

ஆனாலும் சூரியன் கவரும்போதுபூமி இடைமறித்தால்பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வருவது மோதிமின்னலாகிகடலிலே பட்டால்யுரேனியமாக மாறுகின்றது. 
Inline image 4
மரத்தில் பட்டால் கருகுகின்றது. பூமியின் பரப்பில் பட்டால்ஊடுருவி நடு மையம் அடைகின்றது.

இவ்வாறு, 27 நட்சத்திரங்களும் கலந்துகொதிகலனாகிஇயக்கச்சக்தி வருகின்றது. இந்தக் கலவைகள்பலவிதமான வித்தியாசமான நிலைகள் வரப்படும்போதுஉணர்வுக்கொப்ப பாறைகளும்மண்களும் மற்றும் பலவிதமான நிலைகள் மாற்றமாகிக் கொண்டேயுள்ளது.

இதையெல்லாம் பார்ப்பதற்குஇரண்டு வருடம்மின்னல் அதிகம் உள்ள இடங்களுக்கு குருநாதர் கூட்டிச் சென்று, சாப்பாடு இல்லாமல் பார்க்கச் சொன்னார். ஒரு நிமிடம் மாறிவிட்டால்பார்க்க முடியாது.
  Inline image 7
இப்படிகடலில் மின்னல் அலைகளில் தாக்கப்படும்போதுமணலாக உருவாவதை,விஞ்ஞானிகள் யுரேனியமாக மாற்றிகதிரியக்கப் பொறிகளாக மாற்றிஅணுகுண்டுகளாக வெடிக்கச் செய்துஇது வெடித்த பின்,
அதே இயக்க அணு தனக்குள் எடுத்துபூமியில் பரவியிருந்தாலும், 
அதிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் பிரபஞ்சத்தில் படர்ந்து,
அருகில் இருக்கும் புதனுக்குச் சென்றுஉலோகங்களாக மாறி,
புதனில் வெளிப்பட்டுசூரியனில் பாதரசமாக மாறுவதை, 
விழித்திருந்தே பார்க்கச் செய்தார்.

பிரபஞ்சத்தில் நம் பூமி ஒன்றில்தான்தாவர இனங்களின் வளர்ச்சி உள்ளது. தாவர இனங்களின் மணத்தை உயிரணு நுகர்ந்துஇயக்கச் சக்தியாக மாறுகின்றது. தாவர இனத்தின் சத்து உயிரிலே மோதிஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதுதான் பிரணவம்.

மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை இருப்பதினால்அது உயிரில் மோதும்போது பிரணவம். அங்கு விஷத்தின் ஆற்றலே வரும்வளர்ச்சியும் குன்றி இருக்கும். 

நம் பூமியில் மட்டும்தான்இதன் உணர்வுகள் வளர்ச்சியாகிமனிதனாக வளரச் செய்கின்றது. இதைத் தெளிவாக தெரிந்துகொள்தல் வேண்டும்.

ஆக, அணுகுண்டுகளை வெடித்து இங்கு பரப்பச் செய்யும்போதுஇதன் துணை கொண்ட கோள்களிலும், இது சேர்கின்றது. நமது பூமியில் கதிரியக்கம் எங்கெல்லாம் அதிகமாகின்றதோ,அங்கெல்லாம் உணர்வுகள் கரைகின்றது.
கரைந்த உணர்வுகள்பூமி சுற்றப்படும்போது,
அது பூமிக்குள் போகும் பக்கமெல்லாம்,
மோதல் ஏற்படுகின்றது.

எப்படி கடல் அமைதியாக இருப்பினும்அதில் உள்ள பாறைகள் மோதும்போது,சப்தங்கள் வருகின்றதோ,  அதைப்போல கூழாக பூமிக்கு அடியில் மோதும்போதுபாறைகளில் உள்ள இடைச் சந்தில் மோதிவேகமாக ஓடும்போது,  அதிர்வு வருகின்றது. ஆகவேஇது மோதலில் வெப்பம் அதிகமாகும் பொழுது பூமி பிளக்கின்றது.

இதே மனிதன் லேசர் கதிரியக்கங்களை உருவாக்கினான். எப்படி மின்னல் ஊடுருவி ஓடுகின்றதோஅந்த லேசர் இயக்கத்தை தனக்குள் எடுத்துமின்னலைப் போல லேசரை உருவாக்கிவிட்டான்

மனிதனால்  இப்படி ஏற்படுத்தப்பட்ட உணர்வுகள் அனைத்தும், சூரியனையே சாடுகின்றதுசூரியனே அழியும்  நிலைகள் உருவாகிவிட்டது. அதற்குப் பின், உணர்வுகள் சிறுத்துவிடும். 

அதற்குமுன்இதை எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான்நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழிகள்.அதைத்தான் இப்பொழுது, யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்.
Inline image 8

(பக்கம்  20,21-24)
இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள், எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ, அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகி, பூமி திரும்பப் போகின்றது.

அது உறைபனியாகி விட்டால், சூரியனின் இயக்கம் இல்லை என்றால், பூமி நகர்ந்து செல்லும் பொழுது குளிர்ச்சி அதிகமாகி, இந்த உணர்வுகள் உறையும் பருவம் வருகின்றது. அதிலிருந்து தப்ப முடியுமா என்றால் முடியாது?

இன்று உள்ளது நாளை இல்லை. என்றும் நிலையானது உயிர். தீயிலே குதித்தாலும் உயிர் வேகாது. உடலில் உள்ள உணர்வின் தன்மை, உடலில் உள்ள அணுக்களை,
உயிரைப் போல உருவாக்கிவிட்டால்
என்றும் அழியாது, இதுதான் வேகாநிலை.
Inline image 5               
மனிதனான பின்அன்பால்பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது. 

நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும்இதற்கும் போர் நடக்கின்றது. இதைத்தான் சாஸ்திரங்களில்பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள்.

சீதாராமனோவிஷ்ணு தனுசை எடுத்துபரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி), பரசுராமன்மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு, எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும் என்ற ஆசை வருகின்றது.

ஆனால், நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை. நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ, அதன் வழிதான் செல்லுகின்றோம். மனிதனானவன் ஒரு குழம்பு வைக்கவேண்டுமென்றால்மிளகாய்உப்புபுளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துசுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப்போலவேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்து தெரிந்துகொண்டாலும்,அதை மாற்றி அமைக்கும் சக்திநமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தைஉங்களுக்கு ஏற்படுத்துவதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.
இதன் மூலம்உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
இந்த உயிரின் இயக்கமும்மனிதனான நிலையும்
உங்களால் அறிய முடிகின்றது.
                                     
கோபிப்பது நாமல்ல;
வேதனைப்படுவது நாமல்ல;
வெறுப்படைவதும நாமல்ல;
தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல,
தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல,
நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால்அந்த பொருளின் மணம் தான்நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல, நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது.

நமது எண்ணம் கொண்டுவேதனைப்படுவோரை எண்ணினால்கோபப்படுவோரை எண்ணினால்அது வாலி”. நமது நல்ல குணங்களை அது அடக்கிநமக்குள் வலிமையானதாக மாறிநம்மைஅதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால்நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று, ஒளியின் உடல் பெற்றஅந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்நாங்கள் பெற வேண்டும்ங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இது வலுவானபின்,
நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும், பெறவேண்டும்,
தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்,
தெய்வீக அன்பைப் பெறவேண்டும்,
தெய்வீக அருளைப் பெறவேண்டும்,
தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெறவேண்டும்,
மலரைப் போல மணம் பெறவெண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

(பக்கம்  24-26)
வேதனை, வெறுப்பு, கோபம், குரோதம், சங்கடம், சலிப்பு இவை எல்லாம் வரும் பொழுது, அரக்க உணர்வுகள் நம் உடலுக்குள் தசைப்பிரியனாகின்றது.
இந்த உடலை வளர்க்கத்தான் விரும்புவோம்.
பிறர் கஷ்டத்தை எண்ண மாட்டோம்.
சீதா என்ற சந்தோஷத்தை நமக்குள் வரவழைக்க மாட்டோம்.
மற்றவர்களுக்கு சந்தோஷத்தை உருவாக்க மாட்டோம்.

இதைத்தான் சீதாவைச் சிறைப்பிடித்தான், இராவணன் என்று காட்டப்படது. நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள், அரக்க உணர்வுகள் வரும் பொழுது, சந்தோஷம் இழந்து, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று இராவணன் சொல்கின்றான்.

உங்கள் குடும்பத்தில், நீங்கள் எடுத்துக் கொண்ட ஆசை வரப்படும் பொழுது, அது நடைபெறவில்லை என்றால், எவ்வளவு கோபமும் குரோதமும் வருகின்றது?

அதிகக் கோபமானால், இதே தசைப்பிரியன், மற்ற நல்ல அணுக்களைக் கொன்று தின்றபின், வளமாக வாழும் இந்த உடலில் எவ்வளவு நரக வேதனைப்படுகின்றீர்கள்? என்பதை உணர்ந்து பார்த்தால் தெரியும். இதைத் தான் இராமாயணத்தில் கூறுகின்றார்கள்.

அதாவது, இந்திரலோகத்தைச் சிறைப்பிடித்தான் இராவணன் என்று சொல்வது. இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள், அசுர உணர்வால் அடக்கப்படும் பொழுது, அசுர உணர்வு கொண்டு, கொன்று சாப்பிடும் மிருக உணர்வே வருகின்றது.

ஆனாலும், இராவணனும் விஷ்ணுவை நோக்கித் தவமிருக்கின்றான்.அவனுடைய கடுமையான யாகததில் சிக்கிக் கொண்டால், இந்திரலோகமும் பாழாகிவிடுமே என்று இதையும் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

அதை அடக்கும் நிலைக்காகத் தான், கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று காட்டப்பட்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரமாகநாராயணன்,வாசற்படியில்மடிமீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.
Inline image 5
சூரியனான நாராயணன்,  27  நட்சத்திரங்களும் வெளிப்படுத்தும் பால்வெளி மண்டலங்களிலிருந்து தான் கவர்வதைதனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப்பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம். 

ஆனால் மனிதனோவேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போதுவேதனையைப் படரவைக்கின்றது. நமது அந்த சந்தர்ப்பம்உடல்களில் உள்ள உணர்வுகளைபலவீனமடையச் செய்கின்றது.

பலகோடி உடல்களில் தீமையை நீக்கிய"துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும்" அந்த சந்தர்ப்பத்தைஏற்படுத்த வேண்டும்.
அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி,
நமது கண்களின் நினைவிற்கு கொண்டு வரவேண்டும்.
பின் புருவ மத்திக்கு,
கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும். 
நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக, 
கண் வழி கவர்ந்துஇதை இணைக்கின்றோம். 
இது வலிமையான பின்உணர்வின் பிராணயாமம்.

அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இது தான் முருகுமாற்றி அமைக்கும் சக்தி.

ஆகவே, தீமைகளை நீக்கிய அருள் உணர்வை, உயிரிலே இணைத்தபின்,தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது, உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்த நாளங்களிலே கலந்துஎன் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

ஒரு நிமிடம் வலுவானபின்,  அந்த சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போதுஉடலைச் சுற்றி இருக்கும் தீமைகள்நம்மைவிட்டு அகலும். 

எப்படி துணியில் அழுக்குப்பட்டால், சோப்பைப் போட்டுநுரையை ஏற்றிஅழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ, அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்திஅதை வலுவாக்கிதீமைகளைநம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுஅகன்று செல்லச் செய்கின்றோம்.

அதற்குப்பின், ஒரு நோயாளியைப் பார்த்திருந்தால்துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றுஉடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால்அவரும் நலம் பெறுவார்.

ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுவைக்கொப்ப எண்ணங்கள்சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன்சுக்ரீவனின் மந்திரி. 

சுக்ரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்)நமக்குள் வலு பெற்றுமற்றவர் பெறவேண்டும் என்று சொல்லும்போது,  அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்)  வாயுவாகச் சென்றுமற்றவர்களையும் பெறச் செய்யும்.

மற்றவர்களின் வேதனையை நுகர்ந்தால், அது வாலி. நம் நல்ல குணங்களை அடக்குகின்றது. உடலுக்குள் சென்றால், இராவணன். நல்ல குணங்களைக் கொல்லுகின்றது.

ஆகவே, வாலியை உள்ளுக்குள் செல்ல விடாமல் இராமன் மூடிவிடுகின்றான். நமது உயிரின் துணை கொண்டு, நமக்கு மேல் இருக்கின்ற, துருவ நட்சத்திரத்தை எண்ணி மூடிப் பழக வேண்டும்.
Inline image 7
மூடிப் பழகிவிட்டால், நாம் நுகர்ந்த உணர்வின் செயலாக்கம் குறைந்துவிடும் என்பதற்காக இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

ஆகவே, நமது உடலுக்குள் தீமை புகாது தடுத்து நிறுத்தி,
நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, 
நமது சொல் வெளிப்பட்டு, அவரது செவிகளில் படுகின்றது.
அவருடைய கண் நம்மைப் பார்த்து, உணர்வை நுகர்கின்றது.
உயிரிலே பட்டு வாயுவாக மாறுகின்றது.
அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே இணைகின்றது.
Inline image 6
ஆகவே, மற்றவர்களும் தீமைகளிலிருந்து விடுபடும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுக்ரீவனின் மந்திரி என்று இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.  
(பக்கம்  27-30)
மனிதனுக்காக உருவாக்கப்பட்ட கடவுள்கள் எங்கே போனார்கள்? அவன் நம்முள்தான் இருக்கின்றான். அதை நம் ஆறாவது அறிவால் அறிந்து, அவனிடம் எதை வேண்டுகின்றோமோ, அந்தக் கணக்குத்தான் கூடும்.

உலகில் நடக்கும் அசம்பாவிதங்களை உற்றுப் பார்த்தால், அதைத் துடைக்கவில்லை என்றால், நமக்குள் அது வந்தே தீரும். ஆகவே எல்லாம் சந்தர்ப்பம்தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், சந்தர்ப்பம்தான். மனிதனானபின், இந்த உடலைக் காக்கும் உணர்வு வரும் பொழுது, இந்த உலகில்
தன் மதத்தைக் காக்க வேண்டும்,
தன் குலத்தைக் காக்க வேண்டும்,
தன் நாட்டைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வந்து,
அசுர உணர்வுகள் வந்துவிடுகின்றது. இந்த உலகமே அழிந்திடும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது.

அதே சமயத்தில், உணர்வின் தன்மை ஒளியாக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டால், உயிருடன் ஒன்றி, என்றும் நிலையான பிறவியில்லா நிலை அடைய முடியும்.

எல்லாமே சந்தர்ப்பத்தில் உருவானதுதான். செடி கொடியானாலும், மிருகமானாலும், மனிதனானாலும், எது வலிமையோ அதன்வழி வளர்ந்து வந்ததுதான்.

இதைப் போல, சந்தர்ப்பத்தால் வலிமை பெற்று, ஒளியின் உடல் பெற்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றோம் என்றால், அந்த சந்தர்ப்பம் தீமைகளை நீக்கும்.
சந்தர்ப்பம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
எது வலிமையோ, அதன்வழி மாற்றி கொள்ளும்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது, சங்கடமோ, சலிப்போ, வேதனையோ, வெறுப்போ வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்குள் பதிவாகியுள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி, தாய் தந்தை அருளால் (ஏனென்றால் நம்மைக் காத்தது அவர்கள்தான்), அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது, அதைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அது நமது உடலில் வலிமை பெறுகின்றது.

குடும்பத்தில் எத்தகைய சிக்கல் வந்தாலும், இந்த முறைப்படி, அன்னை தந்தை அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். எளிதில் பெறமுடியும். அந்த சிக்கலை நீக்கும் ஞானம் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் – உயிருடன் ஒன்றி, என்றும் ஏகாந்த நிலைகளை வளர்க்கும் நிலை
சிவன் இராத்திரி – உடல் பிறந்த நாள்
மகா சிவன் இராத்திரி – மனித உடல் பெற்ற நாள்.
விஜயதசமி – நம் உயிர் பூமிக்குள் வந்து பிறந்த நாள், பத்தாவது நிலைகள் அடையக்கூடியது எப்படி? என்ற நிலையும் விஜயதசமியில் தெளிவாகக் காட்டப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி – மனிதனானபின், இயற்கையில் விளைந்ததை மாற்றி, பல உணர்வுகள் சேர்த்து வேகவைத்து, சுவையாக்கி, அதை உணவாக்கி, மகிழ்ச்சியூட்டி, மகிழக்கூடிய நிலையாக வாழும் நாள்.
தீபாவளி – கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள். 

நமது கண் கொண்டு பிறருடைய கஷ்டங்கள், நஷ்டங்கள், கோபங்கள், வெறுப்புகள், தீமைகள் இவை அனைத்தும் பார்த்து, நமது உடலிலே நுகர்ந்தபின், நமக்குள் அந்த அசுர குணங்கள் விளைந்து நமக்குள் நோயாகி, நாம் சதா வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இதே கண் வழிகாட்டினாலும், அவன் உணர்வுகள் அதிகமாக்கப்படும் பொழுது, அதைத் துடைக்கத் தவறினால் பரிணாம வளர்ச்சியில் எது வலுவோ அதுதான் இயக்கச் செய்யும்.

நமக்குள் இருக்கக் கூடிய 100 குணங்களையும், மனிதனாக உருவாகக் காரணமானது என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள். நமக்குள் உருவான அந்த குணங்கள், நல்லது செய்யும் என்று 100 குணங்களுக்கும் ஸ்தல புராணங்களை வைத்து, அதை எப்படிப் பெறவேண்டும் என்று நிலைப்படுத்திக் காட்டினார்கள்.
Inline image 3
கோவிலில் கல் சிலையை வைத்து, அதற்கு வைரக் கிரீடம், தங்க ஆபரணங்கள், பட்டாடைகள், மலர் மாலைகள் எல்லாம் போட்டு, நல்ல அமுது படைத்து, திரையைப் போட்டு மூடிவிடுகின்றனர்.
இதுவெல்லாம், சாதாரண மக்களும்
அறிய முடியாததை அறியச் செய்யும்வழி.

ஒரு நோயாளியைப் பார்த்தால் துவைதம். அவன் உடலிருந்து வரக்கூடிய மணமோ அத்வைதம். அதை நுகர்ந்தபின், அந்த நோயாளியின் உணர்ச்சிகளை உண்டாக்குகின்றது. இது விசிஷ்டாத்வைதம். அது உடலுக்குள் சென்றால் துவைதம்.

அந்த நோயாளியின் உடலில் உள்ள நோய்களை அறிந்தாலும், அதை இயக்கி நம் உடலாக மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற தீமைகளை நீக்க, ஒவ்வொரு பொருளின் செயலாக்கங்களை நாம் அறிகின்றோம்.

கோவில்களிலே துவைதம், அதை வைத்து ஆபரணங்களாக அமைத்து, அதை உற்றுப் பார்த்தபின், அதன்வழி எதைப் பெறவேண்டும் என்று மக்களுக்கு எடுத்துக் காட்டி,
அந்த முறையில் எடுத்தால்,
தெய்வீகப் பண்பைப் பெறமுடியும் என்று காட்டுகின்றனர்.
நட்பை வளர்க்க முடியும் என்று காட்டுகின்றனர்,
பகைமையை நீக்க முடியும் என்று காட்டுகின்றனர்,
பகைமையற்ற வாழ்க்கை வாழமுடியும்
என்று காட்டுகின்றனர்.
           
ஆக, இந்த உடலில் ஒன்றுபட்டு வாழும் தன்மை வருகின்றது. இந்த உடலுக்குள் பகைமை, வேதனைப்பட்டோர், வெறுப்படைந்தோர் உணர்வுகள் நமக்குள் ஆனபின், உடலுக்குள் பகைமையும், தீமையும் நமக்குள் விளைகின்றது. தீமையற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்றால், இந்தத் தெய்வீகப் பண்புகளை எப்படிப் பெறவேண்டுமென்று ஆலயப் பண்புகள் தெளிவாகக் கூறுகின்றது.

(பக்கம்  33-35)
கோவிலில் நாம் எதை எண்ண வேண்டும் என்று, நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். தெய்வச்சிலையை அங்கு வைத்து,
இந்தத் தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்,
தெய்வீக சக்தி பெறவேண்டும்,
தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறவேண்டும்,
வைரத்தைப் போன்ற சொல் ஜொலிக்க வேண்டும்,
செயல் ஜொலிக்க வேண்டும், வார்த்தை ஜொலிக்க வேண்டும்,
மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்.
இப்படி எல்லோரும் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோவில்.
Inline image 5
இது (கோவிலில் பார்ப்பது) “துவைதம்”. நாம் எண்ணிப் பெறுவது “அத்வைதம்”.அப்படி எண்ணும் பொழுது, அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குவது“விசிஷ்டாத்வைதம்”.

அந்த உணர்வின் தன்மை, தீமையை நீக்கும் சக்தியாக உடலாகின்றது” என்பதுதான் கோவிலின் தத்துவம். இதுவே ஞானிகள் காட்டிய நெறிகள்.

அந்த ஞானிகள் காட்டிய நெறிப்படி கோவில் என்பது, நம் உடலென்ற கோவிலைச் சுத்தப்படுத்த, புறத்தால் காட்டி, அகத்துக்குள் அருளைப் பெருக்கி, இருளை அகற்றும் ஞானக் கோவில், அது ஒவ்வொன்றும் நம்மை அறியாது சேரும் தீயவினகளை நீக்கும் அருள்ஞானக் கோவில். ஆகவே, கோவிலை நாம் மதித்து நடத்தல் வேண்டும். பிறருடைய கஷ்டத்தையோ, வேதனையையோ, சொல்லக் கூடிய இடமல்ல கோவில்.

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினான் அகஸ்தியன். அதைப் போல, மனிதனுக்குள் உணர்வின் இயக்கமாக வந்த நிலையை, மனிதரில் ஒளியாக மாற்றிய அருள் உணர்வை நாம் கலந்து, இதைத் தணித்து, உணர்வின் தன்மையை ஒன்றாக்கி, பிறவியில்லா நிலை அடையச் செய்யக் கூடிய ஆலயம் அது.

நமக்குள் அறியாது சேர்ந்த, தீய வினைகளால் ஏற்பட்ட நோய்களை நீக்கும் நிலையாக, ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள். உலகிலேயே இல்லாத நிலைகளை, நம் நாட்டில் அமைத்தார்கள்.
வானவியல், புவியியல், தாவரஇயல், உயிரியலில்
நாம் எப்படி வளரவேண்டுமென்ற தத்துவத்தைக் கூறிய நாடு,
மகரிஷிகள் பிறந்த நாடு.
Inline image 6
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று இருளை நீக்கி, ஒளி என்ற நிலைகள் பெற்று பகைமையில்லாத நிலைகளில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார், துருவ மகரிஷி..

அந்த நிலையைப் பெறுவதற்காகத்தான், ஆலயப்பண்புகளில் “ஏகாதசி விரதம்” என்று வைத்தார்கள். கடைசியாக வைகுண்ட ஏகாதசி என்று, எல்லா கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு என்று, வடக்கு வாயிலை வைத்திருப்பார்கள்.
Inline image 7
அந்த அருளைப் பெற்று, ஏகாதசி அன்று ஒன்றுபட்டு இருந்தால், வடக்குவாயில் வழி, துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று, அந்த நிலை அடையலாம் என்று தெளிவாக ஆலயப் பண்புகளில் கூறியிருக்கின்றனர்.

இது போன்று, நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான்நமது உடல். இதைத்தான் இராமேஸ்வரம்” என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோஅதன் வழிப்படிஇந்த உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம். 

ஸ்தலபுராணத்தை உருவாக்கிஇதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்றதுருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்வதற்குஇராமேஸ்வரத்தை அமைத்தார்கள். அங்கு,அதிகாலை 4.00  மணியில் இருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்தைப்பார்க்கலாம் என்பதற்காக கோவிலை அமைத்தார்கள்.
Inline image 8
அதன் உணர்வை ஒரு மண்டலம் (48 நாட்கள்) வளர்த்துக் கொண்டபின்நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோஉடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோவிண் செலுத்திதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும்சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு. அதன் துணைகொண்டு, “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள்சப்தரிஷி மண்டலத்தில் கலந்துஉடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்துபெருவீடு பெருநிலை அடைந்துஅழியா ஒளி சரீரம் பெறவேண்டும்” என்று, பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் இடம் அது.

சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம். இந்த மனித உடலில்மனதைக் குவித்தல் வேண்டும். அதாவதுமனதில் எல்லா குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைத் தான்இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாகஇராமாயணத்தில் காட்டினார்கள். இராமேஸ்வரத்தில்மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் உண்டு.

27 நட்சத்திரங்களின் சத்தைசூரியன்  எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ அதே போன்று27 நட்சத்திரங்களின் சத்தை சூரியன் கவர்ந்துஇயக்க அணுவாக மாற்றியதைஜீவ அணுவாக்கிஇந்த  உடலை உருவாக்கியது உயிர்.

மனிதனான பின், 27 நட்சத்திரத்தையும் சேர்த்துமுழுமை அடையும் பக்குவத்தைத்தான் இராமேஸ்வரத்தில் காட்டினார்கள். இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எது எது உணர்வுகள் ஊற்றெடுத்துநமக்குள் ஒன்றாக்குகின்றது என்று, இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது. நம் மனதைக் குவிக்கும் இடம் இராமேஸ்வரம்.

அங்கு நம் மூதாதையர்களை எண்ணி, “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த மூதாதையர்கள்சப்தரிஷி மண்டலத்தில் கலந்துஉடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழவேண்டும்” ன்று அவர்களை
விண்செலுத்தும் இடம் அது.
மனிதன் ஒருவன் தான்அதைப் பெறமுடியும்.
கடைசி முடிவு. 

     அணுக்களாகச் சேர்த்துசூரியனாகிபிரபஞ்சமாகிபிரபஞ்சத்தில் உயிரணுவாகிஉயிரணு தோன்றிய பின்ஒளியின் உடலாவதுதான்இறுதி நிலை. ஆகையால்முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால்அவர்கள் பிறவி இல்லா நிலை அடைகின்றனர். 

அவர்கள் முன் சென்றால்அதை நாம் அனைவரும் எளிதில் பெற்றுநம் ஆன்மாவைப்புனிதப்படுத்திஎளிதில் நாம் எல்லோரும்அங்கு (சப்தரிஷி மண்டலத்திற்கு) செல்லலாம்.
(பக்கம் 38-40)
சூரியன் உமிழ்த்தி உதைத்துத் தள்ளிய உணர்வுகள் சூரியனின் சுழற்சி வட்டத்தில் சுற்றும் பொழுது, துகள்களாக மாறுகின்றது. அந்தத் துகள்கள் சந்தர்ப்பத்தால் எதை எதை நுகர்கின்றதோ, அதன் தன்மைக்கொப்ப வளர்ந்து, இருபத்தியேழு நட்சத்திரங்களாகின்றது.
Inline image 5
சூரியன் ஆனபின், அது சுழலும் வேகத்தால் ஏற்படும் நாதம் “சோ”. அதன் சுழற்சியால், அருகில் வருவதைக் கவர்ந்து, அதனுடன் மோதி விஷத்தினைப் பிரித்து, வெப்பத்தைத் தன்னுடன் இணைக்கும் பொழுது, “கம்”.

இவ்வாறு சிதறிப் போகும் துகள்கள், சூரியனின் ஈர்ப்பில் கோள்களாக மாறுகின்றது.இதன் வளர்ச்சியில் வந்த வியாழன் கோள் பெரிதாகி, சூரியனைப் போன்று சுழற்சி பெறுகின்றது.

அதனுடைய சுழற்சியின் தன்மை வரும் பொழுது, அதனுடைய இயக்கச் சக்தியால்,வியாழன் இருபத்தியேழு உபகோள்களை அமைத்துக் கொள்கின்றது.

உபகோள்களிலிருந்து வருவதைத் தனக்குச் சாதகமாக மாற்றி, வியாழன் எடுத்துக் கொண்டால், எந்த அணுக்கள் எதனுடன் சேருகின்றதோ, அதைத் தன் இரையாக மாற்றி அது உருவாக்குகின்றது.

இதைப் போன்று, பல கோள்கள் உருவாகி, அது தன் உபகோள்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகின்றது. அந்த சூரியனின் வளர்ச்சியில் பிரபஞ்சம் முழுமை அடைகின்றது.

அது முழுமை அடைந்தபின், 27 நட்சத்திரங்களில் இருந்து வருவதுவியாழன் கோளில் சிக்காது, சூரியன் கவர்ந்து வரும் பொழுது, ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது மின்னலாகின்றது.

அந்த மின் கதிர்களை, வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

அதிலிருந்து பிரிந்து செல்லும் விஷத்தை, கேதுக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

மோதிய கருகிய உணர்ச்சிகளை இராகுக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

மோதலால் ஏற்படும் சப்தத்தை, செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது.

ஆவியாக வருவதை சனிக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

சனிக் கோள் ஐஸ் பாறையாக மாற்றுகின்றது. அது வெளியில் வரப்படும் பொழுது, எந்தெந்தப் பொருள்களில் படுகின்றதோ, அவைகளை இணைக்கின்றது.
நீருக்குள் பொருள்கள் எப்படி இணைகின்றதோ,
அதைப் போன்று, சனிக் கோளில் இருந்து வரும் நீராவி,
அணுக்களை இணைக்கின்றது.

27 நட்சத்திரங்களிலிருந்து வருவதை, முழுமையாக வியாழன் கோள் எடுத்துக் கொள்கின்றது. வியாழன் கோளில் வெளிப்படும் ஆவியின் தன்மை, இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வருவதை இணைத்து, புதுப் புது அணுக்களாக மாற்றுகின்றது.

உதாராணமாக, கார்த்திகை நட்சத்திரமும், ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து ஆவியாக மாறி, வியாழனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்தால், இரண்டும் இணைந்து வாழும் சக்தி பெறுகின்றது. ஆகவே, வியாழனுக்கு குரு என்று பெயர் வைக்கப்பட்டது.

சூரியன் அருகிலே இருக்கும் புதன் கோள், பல வகையான உணர்வுகள் வெளிப்படுவதை உலோகங்களாக மாற்றுகின்றது.

இவை அனைத்தும் சூரியன் அருகில் சென்றவுடன், அதன் உடலில் உருவாகிய பாதரசத்தால் மோதி, விஷத்தைப் பிரித்தபின், உருவாக்கப்பட்ட காந்தம், கடைசி நுனியில் இருக்கும் விஷத்தைக் கவர்ந்து கொள்கின்றது. இவ்வாறு, வெப்பம், காந்தம், விஷம் மூன்றும் கலந்து இயக்க அணுவாகின்றது.

அந்தக் காந்தம் எதைக் கவர்கின்றதோ, அந்த உணர்வுக்கொப்ப அணுவின் பொறி மாறும். அந்த விஷத்தின் உணர்ச்சிகள் மாறும். இப்படி உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் இவைகள், மற்றவைகளுடன் சேர்ந்து எதை வளர்க்கின்றதோ, அதற்குத்தக்க உருவங்கள் மாறி, குணங்கள் மாறி, பொறிகள் மாறுகின்றது. இவ்வாறுதான் பிரபஞ்சம் உருவாகியது.
Inline image 4
(பக்கம் 50-54)
வேதங்கள் என்ற முறையில் எது எது எதனில் மோதுகின்றதோ,அந்த நாதங்கள் வரும். வெறுப்பு, வேதனை சலிப்பு, சங்கடம் என்ற நிலைகளை நாம் எடுத்தால், அதற்குத்தக்க
சூரியனிலிருந்து வரக்கூடிய இயக்க அணு எடுத்துக் கொண்டதை
நாம் நுகர்ந்தால், உயிரிலே பட்டு மோதி,
உணர்ச்சிக்கொப்ப (அதுதான் சங்கு)
அந்த உணர்ச்சிகள் (சக்கரம்) நம்மை இயக்குகின்றது.

அதனால், நம் உயிரை சங்கு சக்கரதாரி என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அணுவின் இயக்கங்கள் நம்முள் எவ்வாறு இயக்குகின்றது. அதற்கேற்ப உயிரில் பட்டு, உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிக்கேற்ற உமிழ்நீராக மாறும்.

உதாரணமாக, ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வை வெப்பம், காந்தம், விஷம் என்ற நிலையில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்றது. கோபமான உணர்ச்சிகளை நாம் உற்றுப்பார்த்து, அதை நமக்குள் நுகர்ந்தால் காரமான சுவையாக, காரத்தின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

ஆனால், அது வாலி வலிமை மிக்கது. காரம் என்ற நிலையும், அந்தக் காரம் என்ற நிலையை இணைத்தால் இதனுடைய செயல்கள் அடிமைப்படுத்திவிடும், மாற்றிவிடும், மாறிவிடும். இவ்வளவு பெரிய தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து, நம் வாழ்க்கை எவ்வாறு நடத்த வேண்டுமென்று காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

அந்தக் கோபமான உணர்வை நுகரப்படப் போகும் பொழுது, நம் உயிரிலே பட்டபிறகு சப்தங்கள் வருகின்றது. உணர்ச்சிகள் இந்த சப்தமாகி, இதே உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றன.
அந்த உணர்வுதான் சப்தம்.
உணர்ச்சிகள் இயக்குகின்றது,
“சக்கரம்” இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் கார உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது, என்ன செய்கின்றது? கோபமாகின்றது.

ஒருவர் வேதனையான உணர்வுடன் பேசுகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம், நுகர்கின்றோம் – வாலி அந்த வேதனையான உணர்வுகள் நம் சாந்தமான குணத்தை அழிக்கின்றது. ஆக, நமக்குள் சிந்தனையற்ற நிலைகள் ஏற்பட்டு, நாம் சோர்ந்து விடுகின்றோம்.

இதுபோல நுகர்ந்தால் என்ன ஆகின்றது? சங்கு - சக்கரம் நமது உயிரின் தெளிவான நிலைகள் கொண்டு
நாம் எப்படி இயக்குகின்றோம்?
எது இயக்குகின்றது?
நாம் எங்கிருந்து வந்தோம்?
என்ற நிலையில் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு.

கார்த்திகேயா – வெளிச்சத்தில் நாம் பொருளை அறிவது போல, உயிரின் இயக்கத்தை அறிந்துகொண்டு, நாம் ஆறாவது அறிவைக் கொண்டு சீராகப் பயன்படுத்தத் தவறினால், நமது வாழ்க்கை தேய்பிறைதான்.

எத்தனையோ கோடி இன்னல்பட்டு வந்தோம். இன்று, கோபம், வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வந்தால், நாம் அதன் நிலைக்கே செல்கின்றோம். நாம் நுகர்ந்த கோபப்பட்ட உணர்வின் உணர்ச்சிகள், நம் சிறு குடலில் தாக்கப்பட்டு அந்த உணர்வு வருகின்றது.

அதாவது இயக்க அணுவாக அங்கே இருந்ததைக் கவர்ந்து, உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி, அந்தக் கோப உணர்வுகளின் உணர்ச்சிகளாக மாறி, நம்மில் கலக்கின்றது. நம் ஆகாரத்துடன் உமிழ்நீராகச் சேர்க்கப்படும் பொழுது, நமது சிறுகுடலில் உள்ள அணுக்கள் தாங்காது படபடவென்றாகின்றன.

நாம் மிளகாயை வாயில் போட்டவுடன், “ஆ” என்று அலறுகின்றோம், அது விரிவடைகின்றது. அதே விரிவடையக்கூடிய அணுக்கள் சரியாக இயக்காததனால், கார உணர்ச்சிகள் ஆகாரத்துடன் கலந்து பெருங்குடலிலே இழுக்கப்படும் பொழுது, அது இழுத்து நசுக்கும்.

அவ்வாறு இழுத்து நசுக்கப்படும் பொழுது, கார உணர்ச்சியானால், “ஆ” என்று வாய் திறந்துவிடும். படபடவென்றாகும்.

வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு பேர் குரோதமாகச் சண்டை போடுவதைப் பார்த்தால் வயிறு வலிக்கின்றது, பேதியாகின்றது என்று ஆகிவிடுகின்றது. யாரும் தவறு செய்யவில்லை என்றாலும், அது தாக்கக்கூடிய சந்தர்ப்பம்.

ஆனால், பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இதெல்லாம் நமக்குள் உணர்ந்துவிடுகின்றது. பார்த்த இந்த உணர்வுகள் கருவிழி ருக்மணி, நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றிவிடுகின்றது. இது வித்தாக மாறிய பின்னால், உயிரிலே பட்டு உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இப்பொழுது நாம் கண்ணிலே பார்த்தோம். கண்ணிலே பார்த்தவுடன், “இதுபோலப் பேசியவன் போகின்றான் பார்”, என்ற உணர்வுகள் தோன்றும். இதே உணர்வுகள் பதிவு செய்தவனப் பார்த்தாலும், அன்றைக்கும் வயிற்றில் இலேசாகக் குழப்பம் செய்துவிடும். நாம் தவறு செய்யவில்லை. பதிவு செய்த நிலைகள் நம்மைச் செயல்படுத்திவிடுகின்றது.

இவ்வாறு பலவிதமான உணர்வுகள் நம் உடலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபடியும், யாராவது நண்பர்கள் அவரைப்பற்றிப் பேசினால், மறுபடியும் செயல்படுத்திவிடுகின்றது.

இன்றைக்கு விஞ்ஞான அறிவால், பலவித ஒளி அலைகளை பலவிதமான நிலையங்களில் ஒலிபரப்புச் செய்கின்றார்கள். அதே அலைவரிசையில் வைத்தால், வானொலி, தொலைக்காட்சிகளில் என்னென்ன காட்சிகள் நிகழ்ச்சிகள் என்று பார்க்க முடிகின்றது .இதே போன்றுதான், 
தெருவிலே சண்டை போட்டவர்களை எண்ணினால்,
அவர்களின் உணர்வை திடீரென்று எண்ணினோம் என்றால், 
அந்தக் காரமான உணர்ச்சிகள் இங்கே வந்துவிடுகின்றது.
“இவ்வாறு பேசினேன்”, என்று கொஞ்சம் சேர்வடைந்தால் போதும்.
இந்த உணர்வுகள் பையன் சொன்னபடி வரவில்லை என்றாலும், கோபம் வரும். அதே சமயம் சாமான் வாங்கினால், மறந்துவிட்டு விட்டேன் என்றாலும் கோபம் வரும்.

இவ்வாறு உணர்வு வந்துவிட்டதென்றால், பொருள்கள் இருந்தாலும் கூட, இந்தக் கோபமான உணர்வுகள் காய்கறி நறுக்கும் பொழுது கையில் நறுக்கிவிடும். குழம்பில் இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவோம். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் பார்க்கலாம்.

இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் யாருமே தவறு செய்வதில்லை. நம் பதிவின் நிலை எது வருகின்றதோ, அதன்வழி வாழ்க்கையாக நம்மை வழி நடத்திச் செல்கின்றது நமது உயிர். இதையெல்லாம், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
Inline image 4
“தீமையிலிருந்து விடுபடவேண்டும்” – “சாமி சொன்னார்” என்று, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று, இதை நீங்கள் நினைவில் எடுத்தீர்கள் என்றால், உங்களுக்குள் தீமைகள் புகாது சுத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் முடியும். எமது அருளாசிகள்.

(பக்கம் 55-57)
இன்றைக்கு நாம் மனிதனாக இருக்கின்றோம். சாப்பாட்டிற்கு இல்லை என்றால், அடுத்தாற்போல் அடித்துச் சாப்பிடும் நிலை வந்துவிடும். விஞ்ஞான உலகில் பல விஷயம் நடக்கின்றது.
                            
இப்படி மனிதனை அடித்துக் கொல்வதெல்லாம், ஆப்பிரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதைப் போன்ற நிலைகளை நம் உடல் சேர்த்து, சேர்த்து, தீவிரவாதமாகி, உடலுக்குள் நல்ல குணங்களைக் கொன்று கொண்டே உள்ளது.
அங்கே அவன் கொல்கின்றான்.
நாம் கேட்கின்றோம். நாம் கேட்டவுடனே,
நம்மையறியாமலே நமக்குக் கோபம் வருகின்றது.
இதையெல்லாம் யார் தடுப்பது?

அதற்குண்டான சந்தர்ப்பத்தையும், சக்தியையும், இப்பொழுது ஏற்படுத்தித் தருகின்றோம். இந்த உபதேசங்களைப் பதிவு செய்யும் நினைவு, உங்களிடம் வேண்டும். இதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தீர்கள் என்றால், உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால், “இவ்வாறு செய்யலாமா?” என்றால் அந்த உணர்வு வரும். அப்புறம் மருத்துவரிடம் பொருள் செலவாகும். நாம் செய்த இந்தக் காரியமெல்லாம் போய்விடும். அடுத்தவர்களிடத்தில் வெறுப்பாகப் போய்விடும். தொழில் செய்யும் இடங்களில், தொழிலும் பாழாகிப் போய்விடும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் இதைக் கேட்கும் பொழுது, உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிக் கேட்டுணரும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்களையெல்லாம் நீக்கக் கூடிய ஒரு காற்று புகுகின்றது. தீமைகள் அகலுகின்றது. கேட்கும் பொழுது அமைதி கிடைக்கின்றது. அடுத்து, இதை வளர்த்து வருவதற்கு, நீங்கள் தியானத்தை வலுப்படுத்த வேண்டும்.

அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம், அதை மாற்றுகின்றோம், இதை மாற்றுகின்றோம் என்ற நிலைகளில் எதுவுமில்லை.

ஆனால், இதைப் பயன்படுத்தக் கூடிய பக்குவப்படுத்தைத்தான், உங்களுக்குக் கொடுக்கின்றோம். நமது வாழ்க்கையில் உடலுக்குப்பின், மனிதனானபின், பத்தாவது நிலையை அடைய வேண்டும், அதாவது ஏகாதசி விரதம்.

தியானவழிப்படி, காலையிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும், எங்கள் குழந்தைகள் நல் வழியில் நடக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் அன்பும் பண்பும் வளர்ந்திட வேண்டும். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும், என்ற இந்த உணர்வை எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும். குழம்பு பலவிதமாக உள்ளது. எடுத்துப் போட்டீர்கள் என்றால், ருசி வந்துவிடுகின்றது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.

காரம் என்ற நிலைகளில் அடிமையாகிவிட்டால், இராவணன் – சீதாவைச் சிறைப்படித்தான். அந்தக் கோபமான உணர்ச்சிகள் அதுதான் “தசப்பிரியன்” நம் நல்ல உணர்வுகளைக் கவர்ந்து, நம் நல்ல குணங்கள் காணாமலே போய்விடும். இப்படிப்பட்ட நிலைகள் வரக்கூடாது என்றுதான் இராமாயணமே எழுதியுள்ளார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால், இதை உங்களிடம் பதிவு செய்வதெல்லாம், “ரிகார்ட்”. ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடுகிறார்கள். மீண்டும் தட்டியவுடனே என்ன செய்கின்றது? இயங்குகின்றது. அதே போன்று, நீங்கள் ஆசிரியரிடம் படிக்கின்றீர்கள். படிப்பதை, சரியாக ஒழுங்காகப் படிக்கின்றீர்கள். திரும்பவும் எண்ணும் பொழுது சீராக வருகின்றது.

ஆனால், படிக்கும் பொழுது கவனம் சிதறியிருந்தால் அது ஞாபகம் வராது. இப்பொழுது யாம் உங்களிடம் பதிவு செய்துதான் பேசுகின்றோம்.
அதை எடுக்கின்றதும், வளர்ப்பதுவும்,
தீமையை நீக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.

ஏனென்றால், நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான்உங்கள் உயிர் உருவாக்கும். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ, அதை கண்வழி பதிவாக்குகின்றீர்கள். அதை எண்ணியவுடன் கண் என்ன செய்யும்? துருவ நட்சத்திரத்தை,
Inline image 7
கண் வழி பதிவாக்கி எண்ணுகின்றீர்கள் என்றால்,
அதைக் காற்றிலிருந்து எடுத்து
உங்கள் ஆன்மாவாக மாற்றும்.
அப்படி ஆன்மாவாக மாறி சுவாசிக்கும் இந்த உணர்வுகள்,
உங்கள் உடலுக்குள் செல்லும்.
ஆக, உணர்வுகள் உணர்ச்சிகளாகி,
சக்திவாய்ந்த நிலையில் செயல்படும்.
அதாவது தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால், செம்பும் பித்தளையும் ஆவியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்திருந்தாலும் சரி, தீமை என்ற நிலைகளிலிருந்தாலும் சரி, தீமை என்ற உணர்வுகளை எடுத்து இருந்தாலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று இதை எடுத்துவிட்டோம் என்றால், இதன் வீரியத்தைத் தணித்து, நல்ல அணுக்களாக உருவாக்கி, நல்ல சுத்தமான இரத்தமாக மாற்றிக் கொண்டுவர முடியும். இப்படி வளர்த்துக் கொண்டால், இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
(பக்கம் 73-76)
தங்கத்தில் எப்படி திரவகத்தை ஊற்றி சுத்தப்படுத்துகின்றார்களோஅதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நமக்குள் பெறவேண்டும், என்று நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாந்தமும், ஞானமும், விவேகமும்
நாம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு நாம் செய்தோம் என்றால்நமது உயிரிலே போய் இணைந்துநமக்குள் நல்ல சக்தி ஜீரணித்துநல்ல சத்து கிடைக்கும்.
       
தொலைகாட்சிப் பெட்டியில் எந்த அலைவரிசை வைக்கின்றோமோஅது தான் வரும். அதே போல்நம்முள் எந்த சக்தியை எடுக்கின்றோமோஅது தான் வரும். அது சரியாக வரவில்லை என்றால்அது சரியாக வராது.
அது சரியாக வரவில்லை என்றால்,
அதைச் சரிப்படுத்திசரியாக நல்ல சக்தியை,
நாம் எடுக்க வேண்டும்.  
மனிதனுடைய வாழ்க்கையில் தெளிந்துதெரிந்துஎப்படி வாழவேண்டும் என்பதற்குத்தான்ஞானிகள் கோவிலை வைத்தார்கள்.

நாள் பூராவும்நாம் எடுக்கும் உணர்வுகள்,  அந்த அத்தனை அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்பெறுவது - ஏகாதசி விரதம்”. 

பகைமையை நீக்கிபத்தாவது  நிலை அடைந்தது துருவ நட்சத்திரம்.
நாம் வயலில் பலவித குப்பைகளைப் போடுகின்றோம்.
அந்த வித்து என்ன செய்கின்றது.
மற்ற செடி கொடிகளுடன் சேர்த்து, நல்ல வித்தாக விளைகின்றது.

இதுபோன்றுஇவை எல்லாவற்றையும் கருக்கியது துருவ நட்சத்திரம். இதற்கு முன்னால் தெரிந்தோதெரியாமலோ சேர்த்தது விஷம்தான்அதை எல்லாம் கருக்கிநம்மை ஒளியாக மாற்றுகின்றது.

காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக உள்ளது. காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவராக அவதாரமாகநல்ல சக்தியை நீங்கள் பெற வேண்டும். அந்த நல்ல சக்திகளை நீங்கள் பெற்று, வளர்த்துக் கொள்ளக்கூடியது தான்.

எலெக்ட்ரிக்-எலக்ட்ரானிக்” ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடிய  ஒரு ரோபோட்” தயார் செய்கின்றனர். ஒருவது மனது எந்த நிலையில் இருக்கின்றதோஅவரைப் பார்த்தவுடனேஇவன் தவறு செய்பவன் என்று தன் எஜமானனுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

அதே போன்று உடல் உறுப்புகளுக்குஎலெக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்,உங்கள் உடல் உறுப்புகளுக்கு சக்தி ஏற்றுகின்றேன் அதை வளர்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் நிலைவளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நல்லது. அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலமாகப் பெறுகின்றோம்.

எனக்கு குருநாதர்என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் சக்தி கொடுத்தார். அதே போன்றுஉங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்சக்தி கொடுத்தது, நீங்கள் அதை ஓங்கிப் பெற வேண்டும்.  நீங்கள் அதை எண்ணுகின்றீர்கள். உங்கள் உடலில் அது சேரட்டும்.

இதே போன்றுகாலையில் சக்தியைக் கூட்டிக் கொண்டுஎது எது நல்லதோஅதை நினைத்தீர்கள் என்றால்நல்ல சிந்தனை வரும்தீமையை நீக்கச் சொல்லும்வாழ்க்கை உயரும். இதே போல் கேட்டுக் கொண்டீர்களேயானால்இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளியைச் சேர்க்கப்படும்போது,
அவன் அப்படிச் செய்தான்,
இவன் இப்படிச் செய்தான்
என்பதைப் பற்றற்றதாக மாற்றுகின்றீர்கள்.

ந்த துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிஇதைப் பற்றற்றதாக மாற்றிநீங்கள் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். விஜய தசமி – பத்தாவது நிலை அடைந்ததை வைத்துபிறவி இல்லா நிலையை அடைய வேண்டும்.
(பக்கம் 76-78)
இராமாயணத்தில் சொல்கின்றார்கள். “கல்யாண ராமா” என்கிறபோது மணலைக் குவிக்கவேண்டும். நாம் மனதைக் குவிக்கவேண்டும். எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம்.

கடைசியில் நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கின்றான்? மணலைக் குவித்து பூஜித்தான். மனதைக் குவிக்க வேண்டிய, ஒன்றாகச் சேர்த்துக் குவிக்க வேண்டிய இடம் கோவில் எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்றால், நாம் மனதைக் குவித்துப் பழக வேண்டும்.
Inline image 5
மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்? இரண்டும் சேர்த்து சண்டை போட்டுக் கொள்ளும். 

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை இங்கே குவித்து, அதைப் பற்றுடன் பற்றி, எவ்வாறு தங்கத்திலே திராவகத்தை ஊற்றினால், தங்கம் மங்காதிருக்கின்றதோ, அதைப் போன்று மனம் மங்காதிருக்கும் நிலை, கோவிலுக்குப் போனால் கிடைக்கின்றது.

இதே போன்று உங்கள் உடலைக் கோவிலாக நினைத்து, ஒரு பத்து நிமிடம் தியானியுங்கள். தியானம் செய்தவுடன் என் கணவருக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும், என்று மனைவி எண்ண வேண்டும்.

வெளியே எங்கு சென்றாலும், என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும். அவர் பார்வை தீமைகளை நீக்கும் சக்தி பெற வேண்டும். அவரைப் பார்ப்போர் குடும்பங்கள் எல்லாம் நல்லதாக வேண்டும். அவர் பண்பும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய சக்தியும் பெற வேண்டும்.இவ்வாறு கணவர் வெளியே போகும் பொழுதெல்லாம், மனைவி எண்ண வேண்டும்.

அதே போன்று, மனைவி வெளியே செல்லும் பொழுதெல்லாம், என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும், மனைவியின் பார்வை எனக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று கணவன் எண்ணிச் செல்ல வேண்டும்.

மனைவி என்ன நல்ல வழி காட்டுவது? என்று எண்ண வேண்டாம். கணவர் தான் வசிஷ்டர். நாம் எடுத்துக் கொண்ட உணர்வு பிரம்ம குருவாகி, அருந்ததியாக இணைந்து, வாழ்ந்தவர்கள்.

இதற்குத்தான் இராமாயணம். இராமாயணத்தில் நடக்கிற இதைத்தான் கோவிலில் வைத்திருக்கிறார்கள். ஆகவே, நாம் அருளைப் பெருக்குவோம் இந்த விஞ்ஞான உலகில் அஞ்ஞானத்தை அகற்றுவோம், மெய் உணர்வைப் பெறுவோம், இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லா நிலையை அடைவோம். குடும்பத்தில் பண்பும் பாசமும், தெய்வீக உணர்வாக மலருவோம். அந்தச் சக்தி பெறத் தியானிப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்கிற பொழுது, உங்கள் உயிரை ஈசனாக மதித்து, உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் உங்கள் உயிரே குரு. ஆகவே, உங்கள் உயிரான குருவை மதித்து, உயிரான ஈசனை மதித்து, நாம் எண்ணக் கூடிய எண்ணங்கள் எல்லாம், நம் உடல் ஓர் ஆலயம். நம் உயிரிலே பட்டால், அரங்கநாதன், நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நாதங்களுக்கொப்ப நம்மை ஆளுகின்றது.

கோபக்காரனைப் பார்த்து, இந்த அரங்கத்தில் நாதங்களானால், அதுதான் நம்மை ஆளும் ஆண்டாள். வேதனையின் அந்த நாதங்கள் உயிரிலே பட்டால் அது அரங்கநாதனாக மாறிவிடும். அப்பொழுது, அந்த உணர்வின் தன்மை ஆண்டாள். அதுதான் நம்மை ஆளும்.

ஆகவே, நாம் இப்பொழுது, துருவ நட்சத்திரத்தின்   நாதங்களை இந்த அரங்கத்திற்குள் எழுப்பினால், அந்தச் சக்தி நம்மை ஆளும்.

அதுதான் வசிஷ்டர் பிரம்மகுரு. பிரம்மகுருவின் மனைவி அருந்ததி. நாம் எதை எண்ணுகின்றோமோ, அது பிரம்மமாகின்றது, அந்தச் சக்தியாக நாம் மாறுகின்றோம். பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

உங்களுக்காக, யாம் சொல்ல வேண்டியது இது. உணர்ச்சியைத் தூண்டி, காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை, உங்களை எடுக்க வைப்பதுதான் எமது கடமையாக இருக்கின்றது. அதனாலேயே செய்கின்றேன். இதை நீங்கள் பெற்று, உங்கள் வாழ்க்கையை அருள் ஞான வாழ்க்கையாக உயர்த்திக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.
Inline image 4