ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2013

உலக மாற்றத்தில் இருந்து தப்பிக்க, ஞானகுரு காட்டும் அருள்வழி

1, சூரியனுக்குள் ஏற்படும் எரிமைலகள்
இன்று சூரியனில் எரிமலைகள் அதிகமாக உருவாக்கப்பட்டு, கரும் புகைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. இன்று பெரும் பகுதியான நிலையில், சிலர் உடல்களில் கரும் புள்ளி போல் வரும். இது சூரியனில் இருந்து வரக்கூடியது தான்.

ஐரோப்பா நாடுகளில் பார்த்தால், இந்த கரும்புள்ளிகள் அதிகமாக வரும் ஏனென்றால், எந்தப் பகுதியில் இது ஆகியதோ, அங்கு இன்றும் மனித உடல்களில் கரும் புள்ளிகள் உருவாவதை நீங்கள் பார்கலாம்.

இதே போல, விஷத்தன்மைகள் பரவுவதில் இருந்து, நாம் மீளுதல் வேண்டும். .சூரியனின் இயக்கமும், இன்றைக்கு மனிதனால் இந்தச் சூரியக் குடும்பமே அழியும் தன்மை வருகின்றது.

ஆக இதைப் போல, இந்த விஞ்ஞான அறிவுகள் அதிகமாகப் பரவ, பரவ நமது பூமி கூடுமான வரையிலும், சூரியனின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்ந்து செல்லும் சந்தர்ப்பம் வருகின்றது.
2. பூமி உறைபனியாக மாறி, கடல்கள் பெருகும் நிலை
அப்படி நகர்ந்து செல்லும் இந்த சந்தர்ப்பம் வந்தால், நமது பூமியில்றையும் தன்மை, அதிகமாகச் சேர்ந்து விடும். உறையும் தன்மை அதிகமாகி விட்டால், இப்போது இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம், பனிப் பாறைகளாக மாறும்.

ஆக பனிப்பாறைகள் உருகி, நீரின் தன்மை அடைகின்றது. இது பரவப் பரவ, நிலங்களும் குறைந்து வருகின்றது. ஆனால், விஞ்ஞான அறிவால் இதன் உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது, நமது பூமி சூரியனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, நகர்ந்து செல்கின்றது.

இப்படி நகர்ந்து செல்லும் இந்த நேரத்திலும், ஒசோன் திரை கிழிக்கப்பட்டு, இன்று துருவப் பகுதியில் உறையும் பனிகள் கரையும் தன்மை அதிகமாகின்றது. அப்படிக் கரையும் தன்மைகள் அதிகரிக்கும் போது, கடலின் தன்மை பெருகுகின்றது.
3. முதன் முதலில், அகஸ்தியன் இந்த பூமியைச் சமப்படுத்தினான்
முதன் முதலில் ஒரு சமயம், இந்த பூமியினுடைய மாற்றங்கள் ஏற்படும் போது, தன்னுடைய உணர்வின் தன்மையால், பூமியின் அச்சின் தன்மையை மாற்றி அமைத்தவன், முதல் மனிதன் அகஸ்தியன்தான்.

அந்த அச்சின் தன்மையை இப்படி மாற்றி அமைத்தபின்,
துருவத்தைத் திருப்பப்படும் போது,
அந்த வகையில் வளரப்படும் போது,
இந்தப் பக்கம் நீண்டு வந்த இந்தப் பாறைகள் கரைந்து,
ஆக சில மாற்றங்களை ஏற்படுத்தி,
சமப்படுத்தி வைத்தான் அகஸ்தியன்.
இல்லாமல் போனால், இந்த பூமியே குடை சாய்ந்து இருக்கும்.

குடை சாய்ந்து விட்டால், எல்லாம் தலைகீழாக மாறும் ஆகையினால் அவனால் திசை திருப்பப்பட்டது நமது பூமியின் முதல் மனிதன் அகஸ்தியன், தான் கண்டு உண்ர்ந்தபின் இதை மாற்றினான்.

இப்போது, விஞ்ஞான அறிவால் ஒரு பக்கம் முழுவதும் அணுக் கதிர் இயக்கங்களை வெடிக்கச் செய்வதால், அந்த வெடிக்கச் செய்ததை சூரியனுடைய கதிரியக்கங்கள் நெருங்காது போனால், ஒரு பக்கம் குளிரின் தன்மை அதிகமாகி, இதைப்போல பூமியின் தன்மை குடை சாயும் தன்மை, சீக்கிரம் வரும்.

ஏனென்றால், எந்தெந்தப் பக்கங்கள் வெடிக்கச் செய்கின்றனோ, அதை எல்லாம் இதைப் போல மாற்றும் தன்மைகளும் உண்டு. இப்படி, விஷத்தன்மைகள் அதிகமாக மாறும், மாறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் பிரபஞ்சத்திலும் சரி, நமது பூமிக்குள்ளும் சரி, விஷத்தன்மைகள் அதிகமாகக் கலந்து வருகின்றது
4. துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்மைக் காக்கும்
திலிருந்து, நாம் நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இதை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை, அவசியம் நாம் எடுத்துத்தான் ஆக வேண்டும். நாளைக்கு, ஒரு ஐந்து நிமிடமாவது, எடுக்க வேண்டும்

எப்போது நமக்கு, சங்கடம், சலிப்பு, வெறுப்பு, வேதனை வருகிறதோ, அப்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து, அதன் உணர்வுடன் இணைந்திட வேண்டும்.

இப்போது மானோ, புலியோ மற்ற உயிரினங்களோ, மற்றதைப் பார்க்கும் போது, வீரிய உணர்வுகளை நுகர்ந்தபின், அந்த உடலுக்குள் இதனுடைய மாற்றங்கள் வருகின்றது.

அதாவது, இந்த உணர்வுகள் அணுவுக்குள் அணுவாக மாறி, இந்த அணுவிற்குள், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம் என்ற நிலையில் ஒரு உணர்வுக்குள், ஓர் உணர்வு இயக்கப்பட்டு, இந்த உணர்வின் பிரணவங்கள் இயக்கச் சக்தியாக மாற்றி, இந்த உணர்வுக்கொப்ப இந்த அணுக்களின் மாற்றமாகி, பரிணாம வளர்ச்சி அடையச் செய்கின்றது.

நாம் அப்படி, பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவர்கள் தான். ஆனால், பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த நாம், மனிதனாக இருக்கக் கூடியவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

அகஸ்தியனும், பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான்.
மின் கதிரியக்கங்களின் உணர்வுகளை,
அகஸ்தியன் தனக்குள் நுகர்ந்து,
உடல் பெரும் உணர்வுகளை மாற்றி,
யிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி,
ஒளியின் சரீரமாகி,
நின்று நிலை கொண்டிருப்பவன் துருவ நட்சத்திரம்.
மனிதனில் வளர்ச்சி பெற்றவன் அவன்.

ஒவ்வொரு நேரத்திலும்,நாம் அந்த உணர்வை எடுத்து, வெறுப்போ, வேதனையோ, சலிப்போ, பகைமையோ, போன்ற உணர்வுகளை எடுத்து, தவறின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்வதை, தடுத்து நிறுத்த வேண்டும்.

காரம், புளிப்பு, என்று தனித்தனித் தன்மையாக இருக்கும் போது, உணர்ச்சிகளாக ஊட்டுகின்றது. அதன் வழியே செயலாக்குகின்றது. அவை அனைத்தும் வந்தால், அதை ஏற்று, ஆறாவது அறிவு கொண்ட மனிதன் இவை அனைத்தையும் கலவையாக்கி, சுவையாக மாற்றுகின்றான். அந்த சுவையாக மாற்றும் தன்மையை, நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே, இதைப்போல நாம் நமது வாழ்கையில், எப்போதெல்லாம் பகைமை உணர்வு வருகிறதோ, உங்களுக்குள் அதன் உணர்ச்சியின் வேகங்கள் வரும் நிலையை, அதை அடக்குவதற்குத்தான், உங்களுக்கு இப்போது உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்வது. இதை நினைவு கொண்டு தான், நீங்கள் எடுக்க வேண்டும்.

ஆக நினைவு கொண்டு எடுத்து, உங்கள் எண்ணம் கொண்டு உங்களைக் காக்க வேண்டும். உங்களைக் காக்க, உங்கள் எண்ணம் தான் உதவும்.

இப்போது திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின், அந்த உணர்ச்சியின் எண்ணம் வரும். அப்போது அந்த உணர்ச்சியினை ண்ணும் போது, அவனை வெறுக்கும் தன்மை வருகிறது. அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் போது, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி, உங்களுக்குள் தடைகள் வருகின்றது.

ஆகவே, இத்தகைய தடைகள் வருவதைத் தடுக்க, அந்த உணர்வின் தன்மையை நாம் அடக்க, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து, அப்போதெல்லாம் இந்த உணர்வை நீங்கள் எடுத்தால், தீமைகளை மாற்றிமைக்க முடியும்.
5. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு, நாம் செல்லும் நிலை
ஆக, என்னுடைய ஜெபமே, என்னுடைய தியானமே, நாம் யார் யாரைக் கேட்டறிந்தோமோ, அவர்களுக்கெல்லாம் அவர்கள் ண்ணும் போதெல்லாம், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், என்ற உணர்வின் வலுவைக் கூட்டி கொண்டே இருகின்றோம்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்தால் தான், இந்த நாட்டுக்கு லாபம் இந்த உடல்களில் இதன் வழியில் வெளியே சென்றவர்களுக்கும் நல்ல நிலை. ஆக இதன் வழியில், நாம் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் உருவாக்குவது.

ஏனென்றால், நாளை வரும் எதிர்காலம் விஷத்தன்மையாக மாறுகின்றது. அதை நாம் இப்போது கழித்து, அதை வடித்து, நம் உடலில் இந்த உணர்வினைப் பெருக்கினால், எந்த நிமிஷம் ஆனாலும், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்று விடலாம்.

இல்லையென்றால் இந்த பூமி மாற்றமாகி, துரித நிலை ஆகி விட்டால் கொஞ்சம் நகர்ந்தால், ஐஸ் பாறையாக மாறும். ஐஸ் பாறையாக மாறி விட்டால், விஞ்ஞான அறிவைக் கொண்டு சிலரும் தப்பலாம்.

ஆனாலும், இங்கே அதீதமான நிலைகள் பனிப் பாறைகள் மூடி, உள்ளே சென்று விட்டால் யார் காப்பாற்றுவது? அந்த நிலை சீக்கிரம் வரத்தான் செய்யும்.

அதற்குள் நாம் இங்கே இருந்து, பூமியை விட்டு நாம் வளர்த்த இந்த உடலின் தன்மை கொண்டு,
தப்பிச் சென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி,
நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் போது
அங்கே சென்று, பழகும் தன்மை வர வேண்டும்.

எந்த நிலையிலும் சரி, இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிரின் உணர்வு வந்து, ஒளியாகும் தன்மை வரும் போது, ஒளியாக மற்றும் தன்மை பெற வேண்டும். அதற்குத் தான், இந்த உபதேசமே யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அது அல்லாதபடி, சொத்தைச் சம்பாதிக்க வேண்டும். இதைச் செய்தேன், என் பிள்ளை இப்படி இருக்கிறானே? என்று, நம் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால், தவறின் உணர்வு தான் நமக்குள் வளர்கின்றது.

அப்போது அவரின் தவறை நீக்கி, அருளை வளர்க்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நமக்குள் எடுத்துக் கொண்டால், அவன் செய்யும் தவறின் உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை அடக்கி, அவனுக்குள் நல்ல உணர்வு வரவேண்டும், சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும், என்று இந்த உணர்வின் தன்மையை அவன் உடலிலே பாய்ச்சி, அவனை மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால், அவன் செய்யும் தவறின் உணர்வு, வீரித் தன்மை பெற்றது. இப்படிச் செய்கின்றானே என்று பாசத்தால் நுகரப்படும் போது, நம்மிடம் உள்ள நல்ல குணங்களை, வீழ்த்தி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும் என்பதற்குத்தான், இவ்வளவு பெரிய சக்தியைக் கொடுப்பது. எமது அருளாசிகள்.