ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2013

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

1. “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மகரிஷி, பேரண்டத்தின் உண்மை நிலைகளை, அதாவது, ஆதிசக்தியின் ஆற்றல்கள் கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாகி, சூரிய குடும்பத்திற்குள் கோள்களாகி, கோள்கள் நட்சத்திரமாகி, பிரபஞ்சமாகி, அந்த பிரபஞ்சத்திற்குள் தோன்றிய கோள்களுக்கு, தாவர இனச் சத்தாகி, நம் பூமிக்குள் தாவர இன சத்தை, ஒரு உயிரணு, அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து, புழுவின் தன்மை அடைந்து, புழுவிலிருந்து மனிதன் வரை தோன்றியது.

ஆக, இவ்வாறு தோன்றியது அனைத்தும்  ஆரம்பக் காலங்களிலிருந்து,  சந்தர்ப்பத்தின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொன்றும் உருபெறுகின்றது. 

ஒன்றுக்கு ஒன்று சந்தர்ப்பத்தால் மோதும் நிகழ்ச்சிகளில்தான், ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி, ஒன்றின் சக்தி ஒன்றுக்குள் பெருகி, ஒன்றின் நிலைகள் வளர்ந்தது.

அவ்வாறு வளர்ந்து வந்த அந்த சக்தி, பூமிக்குள் வந்த உயிரணு, புழுவிலிருந்து மனிதனாக பல உயிரினங்களின் தோற்றமாக ஆனாலும், அதிலே, முன்னனியிலே மனிதனாக உருவாக்கிய அவருடைய சந்தர்ப்பம், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் அறிந்துணர்ந்து எடுக்கும் ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்றார், அகஸ்திய மாமகரிஷி.

தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை, மனித உடலான பின், மனித உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்துமே ஒளியாக மாற்றினான்.

அதாவது, விண்ணின் ஆற்றல் எவ்வாறு தனக்குள் பெற்றதோ சூரியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலை தனக்குள் ஒளியாகப் பெற்றதோ ஒளி சரீரமாக மனிதனாகி, ஒரு உயிரணு, அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகப் பெற்றபின், தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான் அகஸ்தியன்.

தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளை,
இந்த உலகம், இந்த பூமி, இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது?
எவ்வாறு ஒளியானது?, வெளியானது?
என்று வெளிப்படுத்திய ஒலி அலைகள், நம் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதும், அதே சமயம் அந்த உயிரின் ஆத்மா, ஒளி சரீரமாக நின்று, துருவ நட்சத்திரமாக நின்று, வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் அலைகளைத்தான், தென்னாடுடைய சிவனே போற்றி என்று உணர்த்தப்பட்டது.

ஆக, தென்னாட்டுக்குள் இந்த மனித உடலான சிவத்துக்குள், பேரண்டத்தின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய, அந்த உணர்வின் தன்மையை,
அகஸ்திய மாமகரிஷி காட்டிய வழிப்படி,
அவர் அருள் நெறிப்படி, அவர் வழிகளிலே சென்று,
அவர்கள் வெளிப்படுத்தி உபதேசித்து உணர்த்திய
அந்த அருள் சக்தியை,
எந்நாட்டவரும் நுகர முடியும்.

அப்படி அதை நுகர்ந்து, தாம் சுவாசிக்கும் போது, அந்த சுவாசித்த உணர்வின் சக்தி, அவர்களுக்குள் இறையாகி, இந்த இறையின் சக்தியின் உணர்வின் ஆற்றலை, பேரண்டத்தின் உண்மையைப் பெறும் பாக்கியமாக, அது பெறமுடியும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்கள், அதன் உட்பொருளே இதுதான்.
2.  சிவன் ஏன் அகஸ்தியனை தெற்கே அனுப்பினான்?
ஆக தென்னாட்டிலே தோன்றிய காரணம், தென்னாட்டிலே வெப்பம் அதிகம்.  அந்த உணர்வின் தன்மையிலே, தான் வளர்ந்து, இந்த பூமிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் உணர்வின் ஆற்றல், தென்னாட்டிலே தோன்றியது,  என்று காட்டுவதற்குத் தான் அதை உணர்த்தினார்கள்.

எந்நாட்டவரும் அவர்கள் எடுக்கப்படும் பொழுது, அது இறையாக அமைந்து, உணர்வின் சக்தியாக வளர்க்கப்படுகிறது. அந்த நிலைகளுக்கு அனைவரும் செல்லலாம். அந்த உணர்வை, தென்னாட்டிலே உள்ள நாம் அனைவரும் பெறத் தகுதி பெற்றவர்கள்தான்.

ஆக, தென்னாடான இந்நாட்டில் அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஆற்றல் படர்ந்து கொண்டிருப்பதும், அவர் வாழ்ந்த காலத்தில்,  இந்நாட்டில் அவருடைய பாத அலைகள், அவர் உடலின் உணர்வலைகள் படர்ந்துள்ளது.

ஆங்காங்கு, எங்கெங்கெல்லாம் அவர் சென்று தங்கி, மெய்யுணர்வின் தன்மையை தான் பெறவேண்டுமென்று இந்த பூமி முழுவதற்கும் சென்றவர்தான். இந்த பூமிக்குள் அனைத்து இடங்களிலும், தென்துருவம் வடதுருவம் அனைத்தும் சென்று வந்தவர்தான்.

அதிலே தென்னாட்டிலே தோன்றிய இந்த மனிதன் தான், தனக்குள் உணரும் ஆற்றலைப் பெருக்கி, அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர் உணர்வின் ஆற்றலை பரப்பினார்.
 
ஆரம்பத்தில், இந்த பூமியின் தன்மை,  பிரபஞ்சத்திலிருந்து தான் ஈர்க்கும் அனைத்து சக்திகளும், வடதுருவத்தில் குவியப்படும்போது, அது குவிந்து, பூமியின் தன்மை சிவ சக்தியாக, பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் என்று
இரண்டும் இணைந்து சக்தியாக,
பல உணர்வின் சக்தி, ஒன்று சேர்த்து
ஒரு சிவமாக இருக்கக் கூடிய அந்த நிலையைத் தான்
கல்யாணமாகும் போது, தெற்கே அகஸ்தியரை
சிவன் அனுப்பினான் என்று
தெற்கே தோன்றிய, அந்த அணுவின்  வெப்ப அணுக்கள் தான், இந்த பூமிக்குள் வெப்பமாகி - வடதுருவத்துக்குள் பூமிக்குள்  வெப்பத்தை அதிகமாகக் கூட்டி வளர்ந்து, அந்த அணுவின் தன்மை, அந்த வடதுருவத்தின் தன்மையை நீராக மாற்றியது.
அதே போன்று, அந்த தென் பகுதியிலே தோன்றிய அந்த அணுவான அந்த சக்தி, அது உயிரணுவாகத் தோன்றி, அது வளர்ச்சி பெறும் தகுதியைப் பெற்றபின், நீர் சக்தி இந்த பூமிக்கு முக்கியமாக அமைந்தது.

அதைப் போன்று, அகஸ்திய மாமகரிஷி பேரண்டத்தின் உணர்வின் சக்தியைத் தமக்குள் வளர்த்து இந்த பூமியின் அனைத்து இடங்களிலும் மனிதன் என்ற உணர்வின் ஆற்றலை, அதாவது, மெய் ஒளியாகப் பெறும் ஞானத்தின் ஒளிச் சுடராக, இந்த பூமி முழுவதற்கும் படரச் செய்துள்ளார்.

இந்த பூமிக்குள் மனித உருவின் நிலையும், மனிதனுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கும் தன்மையை, அது வெளிப்படுத்தி, அந்த உணர்வின் அலைகள் இருப்பதனால்தான், இன்று பூமிக்குள் மற்ற மனிதர்கள் சிந்தித்து, அதனதன் வழிகளில் செல்லப்படும் நிலைகள்  ஏற்படுகின்றது..
3. கஸ்தியனுடைய உருவத்தை ஏன் சிறிதாகக் காட்டினார்கள் ஞானிகள்?
அகஸ்தியமாமகரிஷி
ஆதிமுதல், ஆதி மனிதனாக,
ஆற்றல்மிக்க மனிதனாக,
ஆதிசக்தியாக,
ஆதிசக்தியின் உணர்வாக வளர்ந்தவர்.

ஒரு அணுவுக்குள் இயக்கும், உணர்வின் ஆற்றலின் தன்மையை வெளிபடுத்திய, அந்த உணர்வின் ஆற்றலைத்தான்   அகஸ்தியன்  என்றது.

அதனால்தான்,  அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை
மிகக் குறுகிய உடலாகப் போட்டு, 
உடல் குறுகி இருந்தாலும், 
உணர்வின் ஆற்றல்,
பேரண்டத்தில் எட்டித் தாவும் நிலைகள். 

ஒரு அணுவின் தன்மை சிறியதாக இருந்தாலும், யானை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது சுவாசிக்கும் உணர்வின் அணு சிறியது தான்.  ஆனால், சுவாசித்த உணர்வின் அணுவின் தன்மை, பெரிய யானையின் உடலையும், அது இயக்குகின்றது.

இதை  போலத்தான், அகஸ்தியருடைய ஆற்றல், அவருடைய எண்ணத்தின் அலைகள். அவருடைய உடலின் தன்மைகள் குறுகியிருந்தாலும், பேரண்டத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்கி, ஒளியின் சரீரமாக, அதைப் பெருக்கிய நிலைகள் கொண்டுதான், அன்று அந்த அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை அமைத்து, பின்னால் வந்த ஞானியர்கள் அதை உணர்த்திச் சென்றார்கள்.

ஆகவே, நாம் அனைவரும், அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோம். எமது அருளாசிகள்.