
உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டோம் என்றால் அந்தப் பொருளின் மணமே அதிலிருந்து வரும். அதைப் போன்று நம் உயிரிலே எந்தச் சத்தைப் போடுகின்றோமோ
அந்தச் சத்தின் மணமே வெளிப்படும்.
1.நமது உயிர்
நெருப்புக்குச் சமம்.
2.மனிதனான பின் இந்த
உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
3.உயர்ந்த உணர்வு வரும் போது அது நமக்குள்
அது திரும்பி வர வேண்டும்.
ஒருவர் வேதனைப்படுகிறார்
என்று உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த உணர்வு தான் நம் உடலுக்குள் பாய்ந்து அந்த வேதனையின் இயக்கமாக இங்கேயும் மாறுகின்றது.
அதே சமயத்தில் வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை எடுத்தோம் என்றால்… நம் வேதனை
நீங்கி ஒளி என்று அறிவாகும் தன்மையாக… நமக்குள்
நஞ்சு கலக்காது நஞ்சு வளராது தடுத்துக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.
மனிதனில் இப்படி
வளர்ந்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ
நட்சத்திரமாக ஆனது. அதிலிருந்து
வரக்கூடிய உணர்வை நீங்கள் எடுத்துப்
பழகுவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்.
1.”ஏராளமாக…” அங்கிருந்து விளைந்து வருகின்றது.
2.எடுத்துப் பழகினால்
உங்களுக்கு நல்லதாகும்.
வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி… தீமைகளை அடக்கி
நமக்குள் மகிழ்ந்து வாழும் சக்தியாக என்றும் ஏகாந்த நிலையாகப் பெறச் செய்யும். ஏகாதசி என்றால் எதுவுமே நம்மைத் தாக்காத நிலை பெறலாம். ஏகாதசி விரதம் என்றும் சொல்வார்கள்.
நாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாம் பார்த்த குடும்பம் எல்லாம்
பேரருள் பேரொளி பெற வேண்டும். இருளை அகற்றிப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும்
பொழுது
1.எல்லோருடைய உணர்வு
நமக்குள் இருக்கின்றது.
2.அவர்கள் பகைமையை நாம் எடுப்பதில்லை.
3.நமக்குள் இருக்கும்
அந்த அணுக்களுக்கு அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே இருக்கும்.
நோய் என்று வரும் பொழுது எப்படி
டாக்டர்கள் இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில்
கலக்கச் செய்கின்றார்களோ இதைப் போன்றே உயிர் வழி கவர்ந்து நம் உடல் உறுப்புகளில் இணைக்கப்படும் போது அந்த
அணுக்களை நாம் நன்மை செய்யக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.
எப்படி இன்ஜெக்ஷன்
செய்கின்றார்களோ அதைப் போன்று கண்ணின் நினைவைப் புருவ
மத்திக்குக் கொண்டு வந்தால் “அது தான்
முக்கண்…!”
1.நாம் புறத்தால்
பார்க்கின்றோம் அதையே… உயிருடன் சேர்த்து எண்ணப்படும் பொழுது உயிர் வழி
நாம் இயக்க முடியும்.
2.அதற்காகத்தான் துருவ
நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வை இயக்கப்பட்டு எளிதில் பெறுவதற்கு இப்படிக் கொடுப்பது.
இதில் ஒன்றும் சிரமம்
இல்லை. எனக்கு அந்த நினைவு வருகின்றது இந்த நினைவு வருகிறது என்று எதையும் பற்றி நீங்கள்
எண்ண வேண்டியதில்லை.
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலே
போதுமானது. இந்த உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும். உடலில்
வரும் சிரமங்களைப் போக்க முடியும்.
ஆனால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடல் அழியக் கூடியது தான்.
1.உயிர் அழிவதில்லை…! அழியா உயிருடன் ஒன்றி அழியா உணர்வு
பெற்ற அந்த மகரிஷியின் உணர்வுகளை எடுத்து
2.வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தப் பேர்ருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்தால்
3.உடலின் ஆசைகளை
விடுத்து ஒளி என்ற உணர்வின் தன்மை இணைத்து பிறவி இல்லா நிலை
அடையும் சக்தி பெறுகின்றோம்.