ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2025

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்


மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை அவர்கள் உபயோகித்தாலும் அதிக போதை வேண்டும் என்பதற்காக நல்ல பாம்பை வைத்து அதன் நாக்கை நீட்டச் சொல்லி நாக்கிலே கொட்டச் செய்து இதைப் போன்று விஷத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு.
 
இங்கே குரங்கை நாம் வணங்குகின்றோம். ஆனால் சில நாடுகளில் உயிருடன் இருக்கும் குரங்கை அதன் மேலே இருக்கும் ஓட்டைத் தட்டி விட்டு மூளையைக் குழப்பி சில பொடிகளைப் அதற்குள் போட்டு ஸ்ட்ராவை வைத்துச் சர்பத் சாப்பிடுவது போன்று உறிஞ்சிச் சாப்பிடுகிறார்கள்…”
 
மனிதனாகப் பிறந்தும் மிருக உணர்வு கொண்டு இப்படி இருக்கும் நிலைகள் உண்டு.
 
ஜப்பானை எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவில் அவர்கள் வளர்ந்தவர்கள் தான். அங்கே கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயில் போட்டு வறுத்து ரசித்துச் சாப்பிடுபவரும் உண்டு…”
 
இது போன்ற உணவுகளை உட்கொள்வோர் எல்லாம் உடலுக்குப் பின் எங்கே செல்வார்கள்…?
 
அவர்கள் வணங்கும் ஆண்டவனை எந்த மதத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஆண்டவனுக்காகச் சில உயிர்களைப் பலி கொடுத்து அவைகளை எங்களுக்காகப் படைத்தான் என்ற நிலையில்…
1.உனக்கு (ஆண்டவனுக்கு) அதைக் கொடுத்துவிட்டு உன் பெயரைச் சொல்லி நான் உட்கொள்கிறேன் என்று சாப்பிடுகின்றார்கள்.
2.ஆனால் அப்படிச் சாப்பிட்ட உணர்வு கொண்டு அந்த மணம் இவர்கள் உடலில் சேருகின்றது.
 
மிருகங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மையைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட உயிரினங்களை உட்கொள்ளும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவிவிடும்.
 
அந்த மிருகங்கள் செய்யும் கொடூரத் தன்மையை அது மற்ற விஷமானவற்றை எப்படி உட்கொள்கின்றதோ இதைப் போன்ற உர்வின் சத்து உடலுக்குள் வரும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அதே உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ச்சியாகி
2.அந்த விஷத்தின் தன்மை கொண்ட செயலை உருவாக்கி அதையே ரசித்து உட்கொள்ளும் நிலை வருகின்றது.
 
இதைப் போன்ற இரக்கமற்ற நிலைகள் கொண்டு எந்தெந்தக் கடவுள்களை மதத்தின் அடிப்படையில் வணங்கினாலும் அதைப் போல எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் சேர்ந்து விஷமான உயிரினங்களை உட்கொண்டோர் அனைவரும் உடலை விட்டுச் சென்ற பின் அது போன்ற உயிரினமாகத் தான் பிறப்பார்கள்.
 
விஷப் பூச்சிகள் விஷத்தைக் கொட்டித் தன் உணவை உட்கொண்டு அதனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றதோ இதைப் போன்று மனித வாழ்க்கையில் பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு ரசித்து அதைச் சுவாசிப்போம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நல்ல உணர்வுகள் அனைத்தையும் அழிந்துவிடும்.
 
விஷத்தின் ஈர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில் மனிதனில் விளைய வைத்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி அது மணமாகச் சேரும்.
 
உயிராத்மாவில் எந்த மத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ உடலை விட்டுப் பிரிந்த பின்… அந்த மணத்தின் நிலைகள் கொண்டு இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தாலும்
1.அதற்கு ஒத்த விஷ ஜந்துக்களின் உயிரும் இந்த உயிரின் தன்மையும் அந்த உணர்வுகள் ஓங்கி வளரப்படும் பொழுது
2.அதனுடைய ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலின் தன்மையை அதனுடைய சத்தைக் கவர்ந்து கருவாகி முட்டையாகி
3.முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாக இது உருவாக்கி மனிதனைப் பாம்பாக ஆக்கிவிடும்.
 
ஆகவே… எத்தகைய நிலைகளைச் செய்தாலும் மற்றவர்களிடம் மறைத்து விடலாம். ஆனால்
1.உடலுக்குள் உயிராக இருக்கும் ஈசனிடம் எதை நாம் எடுக்கின்றோமோ அதை நமக்குள் விளைய வைத்து
2.அந்த உணர்வின் மணத்தைத் தாங்கி அதையே அடுத்த உடலாக்கி அப்படிப்பட்ட நிலையாக உருவாக்கிவிடும் உயிர்.
 
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்… நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விஷங்களை நீக்கி வந்த நிலையில்… மனித உடலில் விஷத்தை முழுமையாக அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.
 
விண்ணிலே படர்ந்து வரும் விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அதை அடக்கி நிலையா ஒளிச் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
திலிருந்து இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றது அது நிறைந்து கொண்டே இருக்கின்றது.
2.ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் அதை நுகர்ந்தால் நாமும் அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை அடையலாம்.