
பழனியம்பதியின் தத்துவம்
மாமகரிஷி போகன் இந்தப்
பிரபஞ்சத்தின் நிலையில் மனிதனாக உருப்பெற்ற நிலையைக் கருவாக
உருவாக்கினான்.
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய பாதரசத்தை அவன் கவர்ந்து 27 நட்சத்திரங்கள்
உமிழ்த்தும் சக்தி வைரக்கல்களாக உருப்பெற்றதை எடுத்து நவக்கோளின் பாசாணக் கற்களையும் பூமியில் விளைந்ததைத் தனித்துப் பிரித்து எடுத்து “அனைத்தையும் ஒன்று சேர்த்து” ஒரு சிலையாக மனிதனைப் போன்று உருவாக்கினான்.
புழுவிலிருந்து நாம் மனிதனாக உருவாகும் வரையிலும் எந்தெந்தத்
தாவர இனத்தை உணவாக எடுத்து வளர்த்துத் தன்னை அது காத்திட்டதோ
1.தீமையை அகற்றிடும்
நிலையாக வளர்ச்சி பெற்ற அந்தத் தாவர இனங்களை எல்லாம்
2.முருகன் சிலைக்குள்
அதையும் சாரணையாக ஏற்றினார் அந்த மாமகரிஷி.
இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உணர்வின் சத்து
உயிரணுவாகித் தோன்றி மனிதன் வரை வளர்ச்சி பெற்ற நிலையில்
தீமைகளை நீக்கிடும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வாழ்ந்தாலும் நம்மை அறியாது
புகுந்த தீமைகளை அகற்றிட அருள் ஞானி அவன் கண்டுணர்ந்த
நிலைகளை வெளிப்படுத்தினான்.
ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்து… அவன் அமைத்த ஆலயம்
என்று இந்த உடலை மதித்து… அந்த ஆலயத்தில் தீமைகள் புகுந்தால்
அதை அகற்றிடும் சக்தியாக முருகன் சிலையை உருவாக்கி
1.எண்ணிலடங்காத தாவர இனச் சத்துக்களை அதற்குள் சாரணையாக்கி
2.மனிதனின் ஆறாவது
அறிவில் புகுந்த தீமைகளை அகற்றிட… சிலையாக அவன் வடித்து வைத்தான்.
அக்காலங்களில் அந்தச் சிலை மீது சொட்டு சொட்டாக நீரை விழும்படி செய்திருப்பார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ்
என்று அதற்குள் இது எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது அந்த நீரின் தன்மை ஆவிகளாக
வெளிப்படும்.
2.நம் உடலில் வெப்பத்தால் எப்படி வியர்க்கின்றதோ அதைப் போன்று அந்த முருகன்
சிலையிலிருந்து “உயர்ந்த மணங்கள்” வெளிப்படும்.
3.அதை நுகரப்படும் போது தீமைகளை அகற்றிடும்
சக்தியாக அது நமக்குள் வரும்.
கீழிருந்து நாம் படியேறி
அங்கே மேலே செல்லப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம்மைக் காத்திடும் நிலையாக… போகன் தனக்குள் விளைய வைத்த உணர்வினைப்
பெறும் நிலையாக விண்ணை நோக்கி ஏகி… அந்த
நினைவினைப் பற்று கொண்டு வெளியில் இருந்து வரும் தீமைகளுக்கோ நஞ்சுகளுக்கோ இடம் கொடுக்காது
விண்ணிலிருந்து வரும் உணர்வின் சத்தைப் பெறும்படி செய்தான் போகன் பழனியம்பதியில்.
அதே சமயத்தில் இடைமறித்துச் சோர்வடையப்படும் நேரத்தில் தீமைகள்
வரும் போது அதை அகற்றிட இடும்பன் என்றும் அங்கே வைத்தார்.
தொழில் செய்யும் பொழுது
வலுக் கொண்டு செயல்பட்டாலும் சோர்வடையும்
சமயத்தில் இடைமறித்துத் தீமைகள்
நமக்குள் வந்து விடுகிறது என்ற நிலையை உணர்த்துவதற்காக இடும்பனை வைத்துக் காட்டியுள்ளான்.
நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு வருகின்றதோ அப்போது
அமர்ந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… போக மாமகரிஷியின் அருள்
சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஏங்கி அவன் ஊட்டிய
உணர்வை உடலுக்குள் வலு சேர்த்து ஆறாவது அறிவைக் காத்திட்ட அந்த அருள் ஞானியின்
உணர்வைப் பெற வேண்டும்.
1.அறிவின் தன்மையாக
இருக்கும் “முருகு” மாற்றி அமைக்கும் அந்தச் சக்தியை
2.ஒளிச் சுடராக உருவாக்கும் நிலை நாம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேல் நோக்கிச் செல்லும்படி செய்தான் போகன்.
ஒரு மனிதன் வேதனைப்படுவதைப் பார்த்தபின் அது நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.
அதே சமயத்தில் அந்தச் சோர்வான உணர்வுகள் நம்
நல்ல உணர்வுடன் கலந்து விடுகின்றது.
இதைப் போன்ற தீமைகளை அகற்றிடும் நிலையாக முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் சத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த அழுக்கினைத் துடைக்க தீமைகளை அகற்றிட அத்தகைய
நிலைகளைச் செய்தான் போகன்.
மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவுடன்
கண் கொண்டு அந்தச் சிலையைக் கூர்ந்து நோக்குவோம் என்றால் அவன் வடித்த உணர்வின் தன்மையை நாமும் நுகர முடியும்.
உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து அதற்குள் இருக்கும்
நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து
1.ஆன்மாவில் அறியாது புகும் தீமைகளைச்
சுத்தப்படுத்தும் மார்க்கமாகத் “தன்னை
வணங்கும்படி” அந்தச் சிலையை
உருவாக்கினான் அன்று போகன்.
2.அவன் காட்டிய
வழிப்படி அதைச் செய்தோம் என்றால் இது
தான் “பஞ்ச அபிஷேகம்” என்பது.
கண் காது மூக்கு இவைகள்
கொண்டு ஒருங்கிணைந்து அந்த அருள் சக்திகளைப் பெற
வேண்டும் என்று ஏங்கும் பொழுது… ஒலி கொண்டு அதைக் கேட்டாலும்… கண் புலனறிவால் உற்று நோக்கப்படும் பொழுது அதிலிருந்து
வெளிப்படும் மணங்களைச் சுவாசிக்கும்
போது நறுமணமும்… இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது சுவையாகவும்…
நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலையாக அந்தச் சிலையை உருவாக்கினான் போகன்.
பல கனிகளை அபிஷேகித்து
அதை உணவாக உட்கொண்டால் நம் தீமை அகலும் என்று
எண்ணுகின்றோமே தவிர இது புறநிலைக்கு உகந்தது… அகநிலைக்கு
உதவாது.
அகநிலைகளுக்குள்
எடுக்கும் சக்தியை உணர்ந்து அறியாமல் புகுந்த தீமைகளை அகற்றிட… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் அதைச் செய்தாலும் அதே
போன்று…
1.ஆறாவது அறிவின் தன்மையை இயல்பாகக் கொண்டு
தனக்குள் ஞானத்தைக் கண்டுணர்ந்து
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக ஒவ்வொன்றிலும் உயர்ந்த சக்திகளைப் போகித்தான் மோகித்தான்…
3.இந்த உணர்வினைத் தனக்குள் இணைத்தான் போகன் ஒவ்வொரு சக்தியாக.
இன்னொரு உடலுக்குள்
செல்லாதபடி அவன் கண்டறிந்த உணர்வின் சத்தைத்
தனக்குள் தெரிந்து… சரீரத்தையும் காத்து முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தான்.
அவன் வாழ்ந்த காலம் 5000 ஆண்டுகளுக்கு முன். ஆனால் காலத்தால் இது மறைக்கப்பட்டு விட்டது.
பல கோடித் தாவரங்கள் மூலிகைகளைப் பச்சிலைகளை நுகர்ந்தான். அந்தச் சத்தியினைத் தனக்குள் இணைத்தான் உணர்வினை அறிந்தான் தீமை
அகற்றிடும் ஆற்றலை கண்டான் அந்தச்
சக்திகளைத் தான் சிலைக்குள் சாரணையாக ஏற்றினான்.
1.நல்லதைக் காத்திடும் நிலையாக “தீமைகளை அகற்றிடும் ரிமோட்
கண்ட்ரோல் போன்று”
2.அந்தச் சிலையை உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்கே அதை உருவாக்கினான்.
பழனியம்பதியின் தத்துவம் இதுதான்.
அவன் வெளிப்படுத்திய உணர்வலைகள் இங்கே படர்ந்துள்ளது. அதை நுகர்ந்தால் இந்த மனிதப்
பிறவியின் முழுமையை அடையலாம்.. தீமைகளை அகற்றலாம்.
இன்று விஞ்ஞானிகள் தாவரங்களின் சத்தை இணைத்துப் புது விதமாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதைப் போன்று
1.மெய் ஞானிகள்
உணர்வுகளை நமக்குள் இணைத்திடும் சக்தியாக அந்த அரும்பெரும்
சக்திகளை ஆலயத்தில் வணங்கிப் பெற முடியும்
2.போக மாமகரிஷியின் அருளை இணைத்து நமக்குள் உருவாக்க முடியும்.