ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2025

பிராணயாமத்தின் மூலக்கூறு

பிராணயாமத்தின் மூலக்கூறு


ஆண்டென்னாக்களை வைத்து அதில் பல சக்திகளைக் கூட்டி அதனின் ஆற்றல் கொண்டு அதைத் திசை திருப்பி வைக்கப்படும் பொழுது வெகு தொலைவில் இருப்பதை எங்கிருந்தாலும் அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து கொண்டு வருகின்றது.
 
இதைப் போன்று
1.நாம் அந்த அருள் ஞானிகள் வித்தை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.அதனின் நினைவைக் கண்ணுக்குள் கொண்டு வரப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவினைக் கூட்டப்படும் பொழுது
4.மகரிஷிகளின் அருளாற்றல் நமக்கு முன் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து
5.நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக உருவாக்கச் செய்வது தான் அது.
 
அன்றாட வாழ்க்கையில் உடல் அழுக்கைப் போக்குகின்றோம் ஆனால் அதே போல் வாழ்க்கையில் நம் நல்ல உணர்வுகளில் படும் அழுக்கைப் போக்குகின்றோமா…? 
 
அன்புடன் பண்புடன் பணிவுடன் மற்றவருடைய துயரைக் கேட்டு அவர்களுக்கு நன்மைகளை செய்திருந்தாலும் அவருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது அதைத் துடைத்திடும் நிலையாக ஆன்மாவைத் தூய்மை செய்தல் வேண்டும்.
 
தங்க நகை செய்யும் பொழுது தெரிந்து தான் செம்பும் வெள்ளியையும் இணைக்கின்றோம். அதைப் போல் வாழ்க்கையில் நாம் சென்றாலும் மற்றவர்கள் குறைகளைக் கேட்டுத் தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றது.
 
ஆக அதை நுகர்ந்து உணர்ந்து அதன் பின் பல நன்மைகள் செய்திருந்தாலும் நமக்குள் அவர்களின் உணர்வின் சத்து நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.
 
தீமைகளில் இருந்து அகற்றிடும் நிலையாகத் தன்னைக் காத்திடும் நிலையாகப் பரிணாம வளர்ச்சியில்
1.தனக்குள் வலுக் கொண்ட நிலைகளை நுகர்ந்தாலும்
2.அதனின் உணர்வுகள் இதற்குள் வலுவாகி அதனின் மணத்தை நுகர்ந்து அதனின் ஈர்ப்புக்குள் சென்று
3.“அப்படித்தான் பரிணாம வளர்ச்சி என்பதே வளர்ந்தது…”
 
அப்படிப் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நாம் மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஒன்றி ஒளியாக மாற்றிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் தான் அவன் தீமையை அகற்றியது போன்று நாமும் நம்மை அறியாத உட்புகந்த தீமைகளை அகற்ற முடியும். அதைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்தும் பொழுது அதற்குப் பெயர் பிராணயாமம்…”
 
ஒரு பானையிலே பொருளைப் போட்டு நெருப்பைக் கூட்டி வேக வைத்துச் செயல்படுத்தினோம் என்றால் அது வெந்து ஆவியாக வெளியாகி வருவது போல
1.நாம் உயிரோடு ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி
2.உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் கவர்ந்தோமென்றால்
3.உடலில் ந்த மங்கள் வெளிப்படுகின்றது… தீமைகளைப் பிளக்கின்றது… ஆன்மாவிலிருந்து அதை அகற்றுகின்றது.
 
ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை எண்ணாது தன்னுடைய வலுவால் அதைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை எடுப்பது போன்று அருள் ஞானிகள் உணர்வை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்து நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால் இது பிராணயாமம். அந்த மகரிஷிகளின் உணர்வு உடலுக்குள் சென்று நமக்குள் கலக்கப்படும் பொழுது ஆன்மாவில் இருக்கக்கூடிய தீமைகளைப் பிளக்கின்றது.
 
இதைத் தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் காட்டினார்கள்.
 
நாம் விண்ணை நோக்கி ஏகி… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரின் துணை கொண்டு வலு சேர்க்கப்படும் பொழுது வாசல்படி மீது அமர்ந்தான் நர நாராயணன். மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளக்கின்றான்.
 
இரண்யன் என்பது இந்த வாழ்க்கையில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் நல்ல குணங்களைக் கொல்லும் திறன் பெற்றது. நம் ஆன்மாவிலே அது கலந்து நல்ல சிந்தனைகள் செய்யக்கூடிய உணர்வின் அலைகளைச் செயல்படுத்தத் தடைப்படுத்துகின்றது.
 
இதைத்தான் நாராயணன் மடி மீது இந்தத் தீமைகளை வைத்து அது உள் புகாது பிளந்தான் வாசல்படி மீது அமர்ந்து…! என்று சொல்வது.
1.நமக்கு இந்த மூக்கு தான் வாசல்படி…. அந்த வாசல்படிக்கு மேல் பகுதியில் தான் நமது உயிர் அமைந்திருக்கின்றது.
2.அங்கே நம் நினைவைச் செலுத்தி அதன் வழி அருள் ஞானிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்தினால் இது நரசிம்ம அவதாரம் ஆகின்றது.
 
உயிர் வழி மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தி அதன் வழி இயக்கச் சக்தியாகக் கொண்டு வரும் பொழுது உடலுக்குள் இருந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அருள் மங்களாக வெளிப்படும் பொழுது நம் முன் படர்ந்து இருக்கும் தீமையான உணர்வுகளைப் பிளக்கின்றது… சிந்திக்கும்படி செய்கின்றது.
 
தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பு பித்தளை எப்படி ஆவியாக மாறுகின்றதோ அது போன்று நமக்குள் இரண்டறக் கலந்த தீமை செய்யும் உணர்வின் சத்தை அந்த ருள் மகரிஷிகள் உணர்வுகள் வலு இழக்கச் செய்கின்றது.
 
1.அன்றைய ஞானிகள் மகரிஷிகள் எவ்வாறு தங்களுக்குள் வந்த தீமைகளை வலுவிழக்கச் செய்தார்களோ
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் இந்த விநாயகர் தத்துவமே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.