
புலஸ்தியர் அகஸ்தியர்
தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அவன் வளர்ச்சி அடையும் பொழுது
காரணப்பெயராக “அகஸ்தியன்” என்று
வைக்கின்றார்கள்.
அவருடைய தாய் தந்தையர் செடி கொடியின் மணத்தைப் புலனறிவால் நுகர்ந்து அறிந்ததனால் “புலஸ்தியர்” வம்சத்தில் வந்தவர்கள் அவர்கள்.
ஆனால் தாய் கருவிலே சக்தி
பெற்றுப் பிறந்ததால்
1.அணுவின் இயக்கத்தை
அறியும் ஆற்றல் பெறுகின்றான்
2.அகத்தின் இயக்கங்களை
அறிந்ததனால் அகஸ்தியன்.
செடியின் மணத்தை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்… “இந்தச் செடி இன்னது தான் செய்யும் என்று…” அதனுடைய விஷத்திற்கு
எல்லா விஷத்தையும் இயக்கத் தெரிந்தாலும் “உணர்வின்
அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்…”
மனிதனின் சிறுநீரை எடுத்து அதிலே சில கெமிக்கல்களைப் போட்டால் அதில் இரத்தத்தில் இருக்கக்கூடிய பலவிதமான
சத்துக்களை விஞ்ஞான அறிவு கொண்டு இன்று அறிகின்றார்கள்.
இரத்தக் கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றதா…? சளி
இருகின்றதா…? உப்புச் சத்து
இருக்கின்றதா…? சர்க்கரைச் சத்து
இருக்கின்றதா…? என்று பிரித்துக்
காணுகின்றார்கள்.
ஆனால் அகஸ்தியன் எல்லாவற்றையும் கடந்து தாய் கருவிலேயே ஆற்றல்களைப் பெற்றதனால் ஒவ்வொரு தாவர இனத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.
அப்படிப் பெற்ற ஆற்றல் தான் அவன் வாழ்நாளில் அவன் வளர வளர
1.நோய் வந்தவர்களுக்கு
ஒரு பச்சிலையைக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்கின்றான்…
2.நோய் நீங்குகிறது.
அகஸ்தியன் குழம்பு என்று சொல்வார்கள்.
3.அவன் அறிந்த உணர்வு
கொண்டு அக்காலங்களில் பல நோய்களைப் போக்கவும் காரணமாகின்றான்.
4.அதே சமயத்தில் இவனைக் கண்டாலே மற்ற மிருக இனங்கள் இவன் அருகில் வராது விலகிச் சென்று விடுகிறது.
பச்சையாக வேப்பிலைகளைச் சாப்பிட்டால் உடலில் கசப்பின் மணம் வரும்.
வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால்
உடலில் வெங்காய வாசனை வரும்.
கத்திரிக்காயைச் சாப்பிட்டால் அந்தக் காரல் வாசனை வரும்.
இது எல்லாம் இயற்கையின்
உண்மையின் உணர்வுகள். உயிரின் இயக்கத்தால் அறியும் ஆற்றல் வந்து விடுகின்றது.
இதை எல்லாம் அகஸ்தியன்
அறிந்ததனால் அன்று மனிதனுக்குகந்த புதுப்புது தாவர இனங்களை
உருவாக்குகின்றான்.
1.உருவாக்கினாலும் அதை
வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும்
ஏற்படுத்துகின்றான்.
2.வேக வைக்கப்படும்
பொழுது “அதனின் இயக்கங்கள் மாறுகின்றது” என்று உணர்கின்றான்.
அதே சமயத்தில் மற்ற
பொருள்களை இணைத்து அதைச் சுவையாகவும் உருவாக்க முடியும் என்றும்
காணுகின்றான். அத்தகைய சக்தி பெற்ற முதல்
மனிதன் அகஸ்தியன் “உணவை எப்படிச் சமைக்க வேண்டும்…?” என்று தெரிந்து கொள்கின்றான்.
இன்றைய விஞ்ஞானிகள் செய்வது போன்று அக்காலத்திலே மனிதனுக்குகந்த
பல பயிரினங்களையும் அகஸ்தியன் உருவாக்குகின்றான்.
இப்படி அவன் வாழ் நாளில்
அவன் வளர்ச்சி அடையப் படும்போது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எப்படி
உணவு கிடைக்கின்றது…? என்று அவன் அறிகின்றான்.
பிரபஞ்சத்திற்குள்
இருந்து வரும் சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து… பூமிக்குள்
பரவச் செய்து நீராகவும் மண்ணாகவும் கல்லாகவும் வளர்ந்து அதனுடைய
கலவை கொண்டு தாவர இயல்கள் உருவாகி… தாவரவியல்
உருவாக்கப்படும் பொழுது அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு உடல்கள்
பெற்று மனிதனாக எப்படி உருவாக்கியது…?
என்று இந்த பூமிக்குள் வளர்ச்சியான சகலத்தையும் அறிகின்றான்.
இதையெல்லாம் அறிந்து
கொண்ட முதல் மனிதன் அகஸ்தியன் மனிதனான பின்
1.வாழ்க்கையில் வரும்
தீமைகளை வென்று பழகியவனும் அவனே.
2.இந்த உண்மைகளை
எல்லாம் தனக்குள் அறிந்து பூமிக்குள் வரும் விஷத்தை அடக்கும் தன்மையும் பெறுகின்றான்.
பிரபஞ்சத்தில் இருக்கும்
விஷத்தன்மைகள் துருவத்தின் வழி பூமிக்குள்
வந்தாலும் தாவர இனங்களில் அது இணைந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத்தை ஒடுக்கியதால் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் போது விஷத்தின்
இயக்கத்தையும் அறிந்து கொண்டான்.
அவனுடைய வளர்ச்சியில் காலப்பருவம் வரும் பொழுது திருமணம் ஆகின்றது.
தான் கண்ட அனைத்தையுமே தன் மனைவிக்கு எடுத்து உணர்த்துகின்றான்.
மனைவிக்குள் இது பதிவான
பின் கணவன் தெரிந்து கொண்ட நிலையைத் தானும் அறிய வேண்டும்
என்று அதன் வழி பெற்று
1.மேலும் தன் கணவன்
உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.அதே போன்று அகஸ்தியனும் தன் மனைவி அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
எண்ணுகின்றான்.
அவர்கள் இருவரும்
வசிஷ்டர் அருந்த்தியும் போன்று வாழ்ந்து தான் தெரிந்த உண்மையை மனைவிக்கும் மனைவி தெரிந்த உண்மையைக் கணவனுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து வானுலக ஆற்றலை அறியும் பருவம் பெறுகின்றனர்.
1.எதை எல்லையாகக் குறி வைத்து அந்த ஆற்றல்களை எல்லாம் வளர்த்துக் கொண்டார்களோ
2.அங்கேயே அவர்கள்
சென்று துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்…
வளர்கின்றார்கள்… அழியாத நிலைகள் கொண்டு…!
அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை
நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.