ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2025

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை


ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம் திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றதுவேதனை வருகின்றது.
 
சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும் பதட்டம் வந்து விடுகின்றது.
 
பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.
 
இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”
 
இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.
 
நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.
 
எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.
 
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள் வந்து விடுகின்றது.
 
இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால் தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.
 
வேதனையா உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.
 
அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.
 
நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!
 
ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.