ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2025

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்
 
இன்று நமது வாழ்க்கையில் எத்தகைய நிலையில் இருப்பினும் அதை நாம் சீர்படுத்துவதற்குப் பல பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மந்திரம் எந்திரம் யாகங்கள் ஆலயங்களுக்குச் செல்வது… என்று இப்படி எத்தனையோ நிலைகளைச் செய்து அதை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்…” என்ற எண்ணத்தில் தான் நாம் செல்கின்றோம்.
 
ஆனால் பண்டைய கால ஞானிகள் எவ்வாறு உயர்ந்த சக்திகள் பெற்றார்கள்…? என்பதை
1.நீங்களே உங்களுக்குள் உணர்ந்து
2.அறியாது புகுந்து தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை நீக்கிட முடியும் என்ற நிலையை
3.பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஸ்வராய குருதேவர் தான் இதையெல்லாம் உணர்த்துகின்றார்.
 
ஆனால் நான் அவரை அணுகிச் செல்லவில்லை. அவரே தான் எம்மை அடிக்கடி அணுகி வந்து கொண்டிருந்தார். அவர் அணுகப்படும் போது அவரிடமிருந்து விலகிச் செல்லும் நிலையே ஏற்பட்டது. அப்படி நான் விலகிச் சென்றாலும் அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாத நிலையில் என்னை அணுகியே சில நிலைகளைச் சொல்வார்.
 
அதை எல்லாம் நான் கேட்ட பின் பித்தன் என்ற நிலையில் மந்திரங்கள் தந்திரங்கள் செய்து அதில் சிக்குண்டு தவிக்கின்றார்.
1.ஆக அவரிடம் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் இந்தக் கதி வந்துவிடும் என்று
2.அவரை அணுகாது நான் விடுபட்டுச் சென்று கொண்டிருந்தேன்.
 
இருப்பினும் அவர் விட்ட பாடில்லை.
 
அது சமயம் என் மனைவிக்குக் கடுமையான எலும்புருக்கி நோய் வந்தது. வந்தபின் ஒட்டன்சத்திரம் ஹாஸ்பிடல் சேர்த்தோம். ஆனால் அங்கே டாக்டர்களால் ஒன்றும் முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கூட்டிச் சென்று விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
 
காரணம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து வேலை செய்யவில்லை. ஆகையினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
 
என்னுடைய மாமனாருக்கு ஒரே பெண் குழந்தை. வீட்டுக்கு மனைவியை நான் கூப்பிட்டு வந்த நிலையில் “இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற பின் மூர்ச்சையாகி” அவர் மரணமடைந்து விட்டார்.
 
பின் அதற்கு வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தேன். என் மனைவி இன்றோ நாளையோ என்று ஜீவன் பிரியும் நிலையில் இருக்கின்றது. இத்தருணத்தில் பித்தரைப் போன்று இருந்த குருநாதர் இங்கே வருகின்றார்.
 
அவருடைய உணர்வுகள் என்னைக் கடுமையாகச் சாடுகின்றது. இங்கே வா என்று என்னைக் கூப்பிடுகின்றார் நான் மறுக்கின்றேன்.
 
ஏனென்றால் மாமனார் இறந்த சூழ்நிலை வேறு விதமாக இருப்பதால் நான் அவரிடம் செல்ல மறுக்கின்றேன். ஆனால் அவரோ நீ வந்து தான் ஆக வேண்டும்…” என்று போர் செய்யும் முறையில் வருகின்றார்.
 
சுற்றத்தார் அனைவரும் அங்கே இருக்கப்படும் பொழுது இவருடன் அடிக்கடி தகராறு செய்தால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நிலையில் சரி என்று அணுகி அவருடன் சென்றேன்.
 
காபி வாங்கிக் கொடுத்தார் குடித்தேன் குடித்த பின்பு இன்று உன்னை விடவே மாட்டேன் என்று கட்டாயப்படுத்துகின்றார். பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் நீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் அழைத்துச் செல்கின்றார்.
 
அங்கே என்னுடைய வாழ்க்கை வரலாறு என் இளமைப் பருவம் சிறு வயதில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும் சொல்கின்றார்.
1.நான் உன்னைப் பல காலமாகப் பின் தொடர்ந்தே வருகின்றேன்.
2.என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்று சொல்கின்றார்.
 
என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி உன் மனைவி இறந்துவிடும் நிலையில் இருக்கின்றது. கையினால் நான் கொடுக்கும் இந்த விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் உன் மனைவிக்குக் கொடு… எழுந்து நடப்பாள் நலமடைவள்…! என்று சொல்கின்றார்.
 
அவர் சொன்னது போன்று செய்த பின் என் மனைவி அதிலிருந்து மீண்டது. இரண்டு நாட்களில் இடுப்புக்குக் கீழ் அசைவில்லாது இருந்த கால்களில் அசைவுகள் கிடைத்தது. அடுத்து எழுந்து உட்காரும் நிலையும் வந்தது உணவு உட்கொள்ளும் நிலையும் வந்தது அதன் நடமாடும் நிலைகள் வந்தது.
 
ஒரு மாதம் கழித்து குருநாதர் மீண்டும் எம்மைச் சந்திக்கின்றார் அவரைச் சந்தித்த பின் அவருடன் சென்றேன்.
 
இப்பொழுது எனக்கு டீ வாங்கிக் கொடு என்று என்னிடம் கேட்கின்றார். வாங்கிக் கொடுத்த பின் என்னை அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்துகின்றார்.
 
ஒரு சமயம் என்னைச் சாக்கடை அருகிலே அமரும்படி சொல்கின்றார். கடைக்குச் சென்று காபி டீ வாங்கி வா என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்த பின் அங்கிருக்கக்கூடிய சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பைகளை அதிலே போடுகின்றார்.
 
அவர் டீ குடிப்பார் நான் காபி குடிப்பேன். சாக்கடையை அள்ளிப்போட்டு என்னை குடிக்கச் சொல்கிறார். நான் மறுக்கின்றேன்…! அவருக்குக் கோபம் வந்துவிட்டது.
 
நான் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்று சொன்னாயே இப்பொழுது ஏன் மறுக்கின்றாய்…? என்று மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்.
 
இருப்பினும் எனக்கு அந்த இடத்திலே சிரமம் ஏற்படுகின்றது அங்கே வருவோர் போவோரை எல்லாம் உற்றுப் பார்க்கின்றேன். இவரையும்  பார்க்கின்றேன்… மற்றவர்களையும் பார்க்கின்றேன்.
 
சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடையும் அள்ளிப் போட்டுக் குடிக்கச் சொல்கின்றார்… வசமாகச் சிக்கிக் கொண்டேனே…! என்று தவிக்கின்றேன்.
 
காரணம்
1.என் மனைவியை எழுப்பிய பின்… நான் சொல்வதை எல்லாம் செய்கின்றாயா…! என்று
2.சரி செய்கிறேன் என்று என்னிடம் வாக்கை வாங்கிக் கொண்ட பின் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.
 
சரி அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வா. வரும் பொழுது முறுக்கு கடலைப்பருப்பு பொரிகடலை வாங்கி வா என்று சொன்னார்.
 
வாங்கி வந்த பின் சாக்கடைக்குள் கோடுகளைப் போடச் சொல்கின்றார். அவர் சொன்ன முறைப்படி கோடு போட்ட இடங்களில் முருக்கையும் கடலைப் பருப்பையும் பொரிகடலையும் போட்டேன்.
 
பன்றி அங்கே வருகின்றது. சாக்கடைக்குள் அமிழ்ந்திருக்கும் கடலைப் பருப்பை நுகர்ந்து எடுத்து முதலிலே உட்கொள்கின்றது. அடுத்து முறுக்கைச் சாப்பிடுகின்றது. கடைசியில் பொரிகடலையும் சாப்பிடுகின்றது.
 
சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை எண்ணாது
1.பன்றி எவ்வாறு அதிலிருக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது…?
2.அதற்கு அந்த நுகரும் சக்தி எப்படி வந்தது?
3.நல்லவைகளை எப்படி நுகர்கின்றது…? தீமைகளை எப்படிப் பிக்கின்றது…?
4.அதனுடைய வலிமை எப்படிப்பட்டது…? என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
 
கடவுளின் அவதாரத்தை அங்கு அமர்ந்தே உபதேசிக்கின்றார். வராக அவதாரம் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று சொன்னார்.
 
ஓர் உயிரணுவின் தோற்றமும் பல நிலைகளிருந்து மீண்டு காத்திடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்து நுகர்ந்து… பரிணாம வளர்ச்சியில் பன்றியாகப் பிறந்து மற்ற தீமைகளை பிளந்திடும் உணர்வாக அந்த சக்தியைப் பெற்றுப் பெற்று கெட்டதை நீக்கிடும் வலிமை கொண்டு நல்லதை நுகரும் சக்தியும் வலுவான நிலை கொண்டு அதைப் பெற்று வளர்த்து எவ்வாறு இத்தகைய செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்று உணர்த்துகின்றார்.
 
1.பின் நல்லவைகள் அதற்குள் அதிகமாக நாற்றமான உணர்வுகள் தணி
2.நாற்றமான உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் வலிமை அதிகமாக
3.அந்த நாற்றம் தணிந்து இந்த நாற்றத்தை நீக்கிடும் அந்த உணர்வின் சத்து அதிகமாக விளைந்து உடலைப் பிளந்து
4.அதில் விளைந்த வித்தின் உணர்வின் சத்தை அது கவர்ந்து வெளிவந்த பின் பரசுராம் என்று
5.அந்தத் தத்துவப் பிரகாரம் சமப்படுத்தும் உடலாக மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
6.இதைத் தான் கடவுள் என்ற நிலையில் புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.
 
இதையெல்லாம் நீங்கள் தெளிவாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
கல்வி அறிவு அற்றவனாக நான் இருந்தாலும் குருநாதர் பதிவு செய்த உணர்வின் சக்தி அதை நான் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அன்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி கணக்கிலடங்காத நிலைகளையும் அவர் உணர்த்திதை மீண்டும் நினைவு கூறும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாமும் கவர முடிகின்றது.
 
உங்களுக்கு அதை உபதேசிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்தாலும் எனக்குள் அது விளைகின்றது. சூரியனின் காந்த சக்தி கவரு போது கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.
 
பதிவை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ அதைப் போன்று
1.தனக்குள் விளையும் இந்த உயர்ந்த உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்
2.கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருவது.
 
ஆகவே பொறுமையான நிலைகள் கொண்டு மகரிஷிகள் அருள் உணர்வலைகளை எண்ணி எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளுமாறு எல்லோரையும் வேண்டுகின்றேன்.