ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2025

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது


தாய் தந்தையர் நம்மைக் காத்திட எத்தனையோ வேதனைகளை அனுபவித்து உடலில் அதை நுகர்ந்துள்ளார்கள். அவ்வாறு நம்மைக் காத்திட நஞ்சின் தன்மையாக விளைய வைத்த நிலையில் ன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வின் துணை கொண்டு
2.என் அன்னை தந்தைக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளிடர வேண்டும்.
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
4.என்னை ஈன்ற அந்த அன்னை தந்தையர் பிறவா நிலை பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று உடல் பெறும் அந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தும் கரைந்து விட வேண்டும்.
 
என்னை வளர்த்திட்ட உயர்ந்த உணர்வின் ஒலிகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரமான பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று
1.”விண்ணை நோக்கி உந்தி இந்த உணர்வின் வேட்கை கொண்ட பின்
2.எந்தத் தாயின் சரீரத்தில் இருந்து நாம் உருவானமோ அவர்களை விண்ணை நோக்கி ந்தித் தள்ள வேண்டும்.
 
ஆகவே… தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்தால் இன்னொரு உடலுக்குள் புகாது நஞ்சு கொண்ட உணர்வுகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் சேர்த்திருந்தாலும்… அதிலே அவர்கள் சிக்காது அடுத்த கணமே விண் செலுத்தும் படி தான் ஞானிகள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
 
அவ்வாறு செலுத்தி விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் இணைந்து “சப்தரிஷிகள் உமிழ்த்தும் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருப்பார்கள்.
 
ஆனால் இன்று ஐதீகம் என்று சொல்லி இறந்தவர்களின் சுட்ட சாம்பலைக் கங்கையில் கொண்டு கரைத்து விட்டால் “செய்த பாவம் போய்விடும் என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
அவர்களுக்குப் பிரியப்பட்ட பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மகிழ்ந்து விடுவார்கள்… சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்…! என்று தான் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
 
எது சொர்க்கம்…? எவ்வாறு அங்கே அனுப்ப வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய உண்மைகள் காலத்தால் மறைந்து விட்டது.
 
ஆகவே ஞானிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணை வேண்டும் என்று
1.உந்து விசை கொண்டு தான் அங்கே செலுத்த வேண்டும்.
2.உந்து விசை இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது.
 
ஈர்ப்பால் கவர்ந்த தாவர இனச் சத்து நம் உடலாக விளைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பிலே தான் இருக்கும். தேத்தின் துணை கொண்ட நிலையில் மனிதருடன் பற்று கொண்டால் “அந்தப் பற்றின் ஈர்ப்பின் நிலைகளுக்கே மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்கே வந்துவிடும்…”
 
தன் மீது பற்று அதிகமானதோ… அந்த நஞ்சு கொண்ட உணர்வு இணைக்கப்படும் பொழுது அதனின் நிலைகள் கொண்டே உயிரினங்களுடைய ரூபங்கள் மாத்தான் செய்யும்.
 
குருநாதர் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்.
 
ஆகவே அவர் காட்டிய அருள் வழிப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
 
அதன் மூலமாக சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எளிதில் பெற்று மூச்சும் பேச்சும் பிறருடைய தீமைகளை அகற்றும் நிலையாக வருகின்றது.
 
நீங்கள் இதனைச் செயல்படுத்தும் போது… விஞ்ஞான உலகில் ஏற்பட்டுள்ள நஞ்சினை உங்கள் மூச்சலைகள் துரத்தி விட்டு மெய் ஞானிகள் உணர்வுகளைக் கூட்டச் செய்து மெய் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்து உடலை விட்டு அகன்றாலும் மெய் ஞானியின் உணர்வுடன் நாம் ஒன்றிட முடியும்.
 
ஆகவே… உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
1.எண்ணியதை இயக்குவது உயிரே
2.எண்ணியதை இறையாக்குவதும் உயிரே
3.ண்ணியதை உடல் ஆக்குவதும் உயிரே
4.எண்ணியதை உடலுக்குள் விளையச் செய்வதும் உயிரே
5.நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிரே
6.எண்ணியதைப் பிரம்மமாகச் சிருஷ்டிப்பதும் உயிரே
7.எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமாக இயக்குவதும் அவனே.
 
இதனை நினைவு கொண்டு தையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.