
நான் தியானிப்பது யாரை…?
குருநாதர் பித்தரைப் போன்று இருந்து சாக்கடை அருகே எம்மை
அமரச் செய்து…
1.அந்தச் சாக்கடையை நீக்கி நல்ல உணர்வுகளை எவ்வாறு பெற
வேண்டும்…? என்று
2.உபதேசித்த அருளைத் தான் “நீங்களும் நிச்சயம் பெற முடியும்” என்று உபதேசித்து வருகின்றோம்.
அந்த அருள் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்த ஆற்றல்கள் இங்கே நமக்குன்
முன் படர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள்
பெற முடியும்.
நாம் எண்ணியதை நம் உயிர்
படைக்கின்றது என்ற நிலையில் நாம் எதை
எண்ணுகின்றோமோ அதுவாகின்றோம். கீதையில் சொன்னது போன்று நீ
எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.
கண் காட்டிய வழியில்
நிச்சயம் அந்த அருளை நீங்கள் பெற முடியும்.
1.யாம் உபதேசித்த உணர்வை நீங்கள் பெற வேண்டும்
என்று “நான் தியானிப்பது யாரை என்றால்… உங்கள் உயிரைத் தான்…!”
2.உயிரால் அமைக்கப்பட்ட
இந்த உடலான ஆலயத்திற்குள்…
3.மனிதனாக
உருவாக்கப்பட்ட அரும்பெரும் சக்திகள் நல் உணர்வுகளாகத் தெய்வமாக இருக்கும் நிலையில்
4.அறியாத உட்புகந்து
தீமைகள் செய்யும் அந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான பயிற்சி.
ஒருக்கிணைந்த நிலையில் தியானிக்கப்படும் பொழுது உங்களுடைய
நினைவலைகள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது… “உங்கள் உயிரை நான் தியானிக்கின்றேன்…”
1.என் குரு காட்டிய நிலைகள் கொண்டு உங்களுக்கு
உறுதுணையாக
2.உங்கள் உயிரை ஈசனாக
மதித்து அவன் கட்டிய ஆலயத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி படர வேண்டும் என்று தியானிகின்றேன்.
மனிதனாக உருவாக்கிய
அரும்பெரும் சக்தியான அந்தத் தெய்வ நிலைகள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அங்கே அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று தான் உங்களை
நான் தியானிக்கின்றேன்.
நீங்கள் இதை எண்ணித் தியானித்து அந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்த உபதேச வாயிலாக
உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… அந்த
மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் இணைய வேண்டும்
என்று உங்களை தியானிக்கும் பொழுது
1.நீங்களும் அதே போன்று
எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் சக்தி
பெற்று
2.உங்கள் ஆன்மாவிலே
கலக்கப்பட்டு… உங்களுக்குள் சக்தி
வாய்ந்த ஞான வித்துக்களாக
ஊன்றப்படுகின்றது.
இந்த உணர்வின் நினைவு
கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து தியானத்தில்
அமர்ந்திருக்கும் “அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற வாக்கினைப் பதியச் செய்கின்றோம்.
அதன் வழியில் உடல் நலம்
மன நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் பெறவும்… யாம்
கொடுக்கும் வாக்கின் தன்மையால் ஒற்றுமையான உணர்வுகளை வளர்க்கவும் இது உதவும்.
இந்த உணர்வின் துணை கொண்டு உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் உபதேசித்து
உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
அந்த அருள் ஞானியின் சக்திகளைப் பருகும் தகுதி பெற வேண்டும் என்பதற்குத்தான் கூட்டுத் தியானத்தைச் செய்வது.
கூட்டுத் தியானம் இருக்கக் கற்றுக் கொண்டவர்கள்
1.மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று எந்த நிமிடத்தில் என்று எண்ணினாலும்
2.உடனுக்குடன் அதை
நீங்கள் பெற முடியும்… தீமைகளிலிருந்து விடுபட முடியும்… மகிழ்ந்து வாழும் அருள்
சக்தியைப் பெற முடியும்.