
நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் “இப்பொழுது தேவை”
இந்த தியானத்தைக்
கடைப்பிடிப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.
நம்மால் முடியவில்லை
என்றாலும்… வீட்டில் கர்ப்பமானால் அந்தப் பத்து மாதமாவவது
அமைதியாக இருந்து
1.அகஸ்தியன் பெற்ற அருள்
கருவிலே இருக்கும் சிசு பெற வேண்டும்
2.உலகை அறிந்த அகஸ்தியனுடைய
அருள் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
3.துருவத்தின் ஆற்றலைp பெற்ற அந்த அருள் சக்தி கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக
ஆன அந்த ஒளியான உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும் என்று
5.காலையில் 6:30
மணிக்குள்ளாவது ஒரு பத்து நிமிடமாவது எண்ணிப் பாருங்கள்.
வீட்டில் உள்ளவர்கள்
எல்லாம் பகைமைகளை மறந்து விடுங்கள்… ஞானிகளை
உருவாக்குங்கள். அவன் உருவாக உங்கள் குடும்பத்தில் சாப அலைகளோ
பாவ அலைகளோ பூர்வ ஜென்ம அலைகளோ அத்தனையும் நீக்கும் மகரிஷியாக அவன் உருவாகின்றான்.
விஞ்ஞான உலகில் காற்று
மண்டலத்தில் பரவி உள்ள நச்சுத்தன்மையை நீக்க… பன்றி
சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கியது போன்று… வளர்ச்சியில்
மனிதனாக எப்படி அது உருவானதோ…
1.ஞானி அவன்
வாழ்க்கையில் தனக்குள் வந்த இருளை நீக்கி ஒளியாக எப்படி மாற்றினானோ அதன் உணர்வை
2.கருவில் வளரும் அந்தச்
சிசுவிற்கு ஊட்டினால் அவன் இருளை அகற்றி ஒளியான உணர்வை நமக்கு ஊட்டுவான்… இந்த உலகைக் காப்பான்.
ஆகவே உலகைக் காத்திடும்
மகரிஷிகளை நாம் உருவாக்குதல் வேண்டும்
அகஸ்தியன் தெரிந்து அந்த
ஆற்றல்களைப் பெறவில்லை. தாய் கருவிலே நுகர்ந்த உணர்வு தான் அவனை
இயக்கியது.
அவன் பெற்ற சக்தியை
எடுத்துக் கர்ப்பிணியின் செவிகளிலே ஓதுங்கள்.
கர்ப்பிணியை எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்… சுவாசித்து
உமிழ் நீராக உருவாக்குங்கள்… அதைக் கருவில் இருக்கும்
சிசுவிற்கு ஊட்டுங்கள். அருள் ஞானியை உருவாக்குங்கள்.
இப்படி உருவாக்கினால்
விஞ்ஞான உலகில் வரும் அசுரத் தன்மைகளை நீக்க முடியும். காரணம்… இன்று உலகெங்கிலும் நரமாமிசத்தைச்
சாப்பிடும் அளவிற்கு மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகள் சென்று விட்டது.
குழந்தைகள் கருச் சிதைவானால்
சிதைந்த உடலை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள் சீனாவிலே. அதை முதியவர்கள் சாப்பிட்டால் வலிமை பெறுவார்கள் என்று இப்படி
நம்பிக்கையை ஊட்டி தாய்லாந்து நாட்டிலும் மற்றும் நீக்ரோக்கள் வாழும் நாடுகளிலும்
ரஷ்யாவிலும் ஏன் அமெரிக்காவிலும் கூட இப்படி அறிவிலிகளாகச் செயல்பட்டுக்
கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால்… இந்த உடல் எத்தனை காலம் வாழ்கிறது…?
என்று எண்ணுகின்றான்…! அதே சமயத்தில் விஞ்ஞானி பல உணர்வுகளைச்
சேர்த்து மனிதனை 1500 வருடம் வாழ வைக்க முடியும் என்று
நினைக்கின்றான்,
அவ்வளவு காலம் வாழ்ந்தால்
இவனுடைய எண்ணங்கள் ஆசையின் பால் சென்று நிராசையாகி வேதனையின்பால் செல்லப்படும்
பொழுது “அந்த வேதனையைத் தான் வளர்க்க முடியும்...” என்பதை மறந்து விட்டார்கள்.
இது போன்று உலகம் சென்று
கொண்டிருக்கும் இத்தகைய நிலையில் இருந்து மக்களை மீட்ட அருள் ஞானிகளை நாம் ஒவ்வொருவரும்
உருவாக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியை அதிகாலையில் எடுத்துப் பழகுங்கள். உங்களுக்குள்
பதிவான நிலைகள் கொண்டு கருவிலே இருக்கும் சிசுவிற்கு இந்தச் சக்தி கிடைக்க
வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற
அருளை அவன் பெற வேண்டும்
2.அவன் துருவத்தின்
ஆற்றல் பெற்றதை இந்தக் குழந்தை பெற வேண்டும்
3.இருளை நீக்கி ஒளி
என்ற உணர்வாகப் பிறவி இல்லாத நிலை அடைந்த அந்த அருள் சக்தி பெற வேண்டும்
4.உலக இருளை நீக்கும்
ஞானியாக வரவேண்டும்
5.அனைவரும் தெளிந்த மனம்
கொண்டு வரும் அந்த மகரிஷியாக வேண்டும் என்று
5.”இது போன்ற ஆயிரம்
அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்…”
அன்று ஒரு சமயம் பூமி
நீளவாக்கிலே வளர்ந்து வரும் பொழுது தலைகீழாக்க் குடை சாயும் நேரத்திலே அகஸ்தியன் அவனுடைய
திறமையால் பூமியைத் திசை திருப்பிச் சமப்படுத்தினான்… சீராக்கினான்.
தென் துருவம் வட துருவம்
சில பகுதிகளில் உறை பனி உருவாவதைச் சமப்படுத்தி இன்று வரை இந்த பூமியைச் சீராக
இயங்கும்படி செய்துள்ளார்.
இரண்டு நட்சத்திரத்தினுடைய
சக்திகள் எதிர்மறையாகி மோதலாகி மின்னலானால் மரத்தைக் கருக்குகின்றது. கடலில் பட்டால் மணல் ஆகின்றது.
பூமிக்குள் ஊடுருவினால் கொதிகலனாக மாறுகின்றது.
ஆனால் கடலில் இவ்வாறு
விளைந்த மணலை விஞ்ஞானி எடுத்து யுரேனியமாகப் பிரித்து எதிர்நிலையான உணர்வுகள்
மோதம்படி செய்து மீண்டும் மின்னலைப் போல கதிரியக்கங்களை உருவாக்கச் செய்து மின்
கதிர்களாக மாற்றுகின்றான்.
மனித உடலுக்குள் இது
மோதும்படிச் செய்து மனிதனையே கரைக்கும் தன்மையும் மரத்தைக் கரைக்கும் நிலையம் கல்
மண் அனைத்துமே அதற்குள் தாக்கப்பட்டு அதிலிருக்கக்கூடிய கதிரியக்கங்கள் ஒன்று
சேர்ந்து கரைந்து போகும் படி செய்கின்றான்.
அந்த அளவுக்கு இன்று
விஷத்தன்மைகள் வளர்ந்து விட்டது.
1.மனிதனால்
உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சூரியனால் அது கவரப்பட்டு
2.பூமி கொதிகலனாகி
நிலநடுக்கம் ஆவது போன்று சூரியனுக்குள்ளும் எதிர்நிலையாகிக் கரும் புகைகளைக் கக்கிக்
கொண்டிருக்கின்றது.
இத்தகைய விஷத்தன்மைகள்
மோதப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் பரவி இரு
நிலையான மோதலாகி… எப்படி மின்சாரம் செல்லும் வயர்கள் ஒன்றுடன்
ஒன்று மோதினால் இரு மடங்கு மின்சாரமாகின்றதோ இதைப் போன்று சூரியனுக்குள் அது இரு மடங்கு
இயக்கச் சக்தியாகி….
1.இந்த விஞ்ஞானமும்
அழியப் போகின்றது.
2.மனிதன் உயிரின்
துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது… சிந்தனைகள் கருகப்
போகின்றது.
3.மிருக உணர்வு கொண்ட
நிலையில் விஷத்தன்மை கொண்ட மனிதர்களாகத் தன் இனத்தைப் புசிக்கும் அளவிற்கு வந்துவிடும்.
தான் வாழ வேண்டும் என்ற நிலையில்
அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு அதைக் கண்டு ஆனந்தப்படும் நிலையாக
வந்துவிட்டது.
எங்கே சென்றாலும் இது போன்ற
விஷ உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எந்தச் செல்வத்தைத்
தேடப் போகின்றோம் எதைக் காக்கப் போகின்றோம்…?
அழியாச் செல்வமான அந்தப்
பேரருளை நீங்கள் பெற்று இருளை மாய்த்திடும் தன்மை பெற்று வீட்டிலே கர்ப்பமாக
இருக்கும் அந்த கருவில் வளரும் சிசுக்கள் மகானாக வேண்டும் என்று அவர்களை மகரிஷியாக
உருவாக்குங்கள்.
இது போன்ற ஆயிரம் குழந்தைகளை
உருவாக்கினால் நீங்கள் வாழும் ஊருக்குள் விஷத்தன்மை புகாதபடி தடுக்க முடியும்.
துருவ நட்சத்திரம் எப்படி
விஷத்தை ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போன்று இந்தக் குழந்தைகள் விஷத்தை மாற்றிடும்
உணர்வின் அறிவாகப் படரச் செய்யும் பொழுது தொக்கி உள்ள மனிதர்களைக் காக்க முடியும்… தப்புவிக்க முடியும்.
ஆகவே உங்களை நீங்கள்
நம்புங்கள்… நம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுங்கள்.
கர்ப்பம் என்று
தெரிந்தாலே அந்தக் குடும்பத்தில் யாரும் சங்கடமே படக்கூடாது
1.சந்தோசம் வரவேண்டும்… ஞானி உருவாகின்றான் என்று…!
2.உலகைக் காக்கப்
போகின்றான்
3.இருளை அகற்றப்
போகின்றான்
4.மெய்ப்பொருளைக் காணப்
போகின்றான்
5.அனைவரையும் அருள்
வழியில் அழைத்துச் செல்லப் போகின்றான்
6.அவன் பார்வையில் சர்வ
பிணிகளையும் நீக்கப் போகின்றான்
7.அத்தகைய கரு குடும்பத்தில்
உருவாகின்றது என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்…
8.அந்தக்
கர்ப்பிணியிடம் இதைச் சொல்லிப் பாருங்கள்… அற்புதம் நடக்கும்.
இன்றைய உலகம் இருக்கக்
கூடிய சூழ்நிலை என்பது தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டிருப்பது போன்று தான்
உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும்
அவர்கள் வெடிக்கவில்லை என்றாலும் தானாக வெடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.
அவை வெடித்தால் பூமியே
முழுமையாக நஞ்சின் தன்மையாகிவிடும்.
மனிதனுடைய உடலையே மனிதப் பிறவியை அழிக்கக்கூடிய நிலைகளாக வந்துவிடும். மனிதனல்லாத பிறவிக்குத் தான் செல்ல நேரும்.
ஆனால் அதற்குள் ஞானிகளை
உருவாக்கி விட்டால்…
1.அவனுடைய நிழலால் நாம்
பிறவி இல்லாத நிலை அடையலாம்… அவன் மடிய மாட்டான்… நம்மை உந்தித் தள்ளுவான்.
2.நம்மை ஒளியாக்குவான்… பிறவியில்லா நிலையை அடையச் செய்வான் இருளைப் போக்குவான்.
ஆகவே… நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் இப்பொழுது தேவை. ஞானிகள் உலகமாக நாம் உருவாக்க வேண்டும். காலம்
குறுகிக் கொண்டிருக்கின்றது.
அன்று அகஸ்தியன் கொடுத்த
தத்துவங்கள் பெரும்பகுதி மறைந்து விட்டது. விஞ்ஞான
உலகம் அழியும் தருணத்தில் உங்களுக்கு ஞானிகள் அருள் உணர்வுகளை உபதேசமாகக்
கொடுக்கின்றேன்.
உடலை விட்டு அகன்று
ஒளியாக நான் சென்றாலும்
1.எனக்குக் கிடைத்த
சக்தி உங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் .என்பதற்குத்
தான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.
2.நீங்கள் அனைவரும்
ஞானியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
3.நீங்கள் அவ்வாறு
உருவானால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் செயலாக அமையும்.
உங்கள் உயிரை ஈசனாக
மதித்து உடலை ஆலயமாக மதித்து… குரு வழியில் நீங்கள்
எல்லோரும் அந்த நிலை பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன். அதன் வழி
செயல்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.