ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2025

தாய் தந்தையரை உயர்த்தினால் தான் நமக்கு உயர்வு

தாய் தந்தையரை உயர்த்தினால் தான் நமக்கு உயர்வு


விநாயகனைக் கும்பிடும் பொழுது தாய் தந்தையரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.அவர் அருளால் என்னை அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்றுண்ண வேண்டும்.
 
ஏனென்றால் அந்த அருள் ஞானிகள் காட்டி அருள் வழியில் தாய் தந்தையர்களைண்ணும் பொழுது அவர்களை அங்கே இணைக்கச் செய்கின்றது.
 
தாய் தந்தையர் முதுமை அடைந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்கள் என்றும் 16 என்ற நிலையில் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் ந்தித் தள்ள இந்த நினைவு கொண்டு அங்கே செலுத்த முடியும்…”
 
அதைத் தான் கந்த புராணத்தில் காட்டப்பட்டது.
 
நாரதன் கனியைக் கொண்டு வந்து சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது சிவன் சொல்கின்றான்.லகத்தை மூட்டுவதற்காக இங்கே நீ இதைக் கொண்டு வந்திருக்கின்றாயா என்ன…? சரி சொல் எது என்று பார்க்கின்றேன்…? என்று நமக்குத் தெளிவுபடுத்த புராணத்தில் இப்படிக் காட்டுகின்றார்கள்.
 
இந்த உலகை யார் வென்று வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி என்று சொல்லப்படும் பொழுது
1.ஆறாவது அறிவு என்ற திறனின் தன்மை எண்ணத்தைப் பலவாறு செலுத்தி மகிழ்வாகனா…!
2.நான் எதையுமே மகிழ்ச்சியாக படைக்கும் திறமை கொண்டு உலகைச் சுழன்று வந்து விடுவேன் என்ற அகம் அங்கே வளர்கின்றது.
3.ஆனால் தாய் தந்தையரை மறந்து விடுகின்றது.
 
விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு தன் ஞானத்தாலே தன் எண்ணத்தைக் கொண்டு சக்தியின் திறனை எண்ணினாலும் அங்கு நாரதன் காட்டுகின்றான் நீ இந்த உடலில் சேர்க்க வேண்டிய வினை எது…?”
 
அன்னை தந்தை உடலில் இருந்து வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். ஆகவே பேரண்டமும் பெரும் உலகத்தின் தன்மையும் அவர்கள் தான்.
 
ஆகவே இந்தக் கனி எப்படிப் பிஞ்சாக இருந்து துவண்டு அது காயாகும் பொழுது புளித்து கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப் போல
1.அன்னை தந்தையர் கனியின் தன்மை பெற வேண்டும்
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று மெய் உணர்வினைப் பெற்று
இந்த மனித உடலில் உயிரின் தன்மையைக் கனியாக்க வேண்டும்.
 
அப்படி என்றுமே சுவை கொண்டதாக விண்ணிலே திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த மம் தான் இந்த நாரதன்.
 
உன் அன்னை தந்தையை நேசித்து
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற க்கத்தில்
2.இந்த வினையை உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று தெளிவுறக் கந்த புராணத்தில் காட்டியுள்ளார்கள்.
 
அன்னை தந்தையர் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நமக்காகப் பட்ட துயரங்களில் இருந்து அவர்கள் மீண்டு என்றும் பதினாறு என்ற நிலை பெற வேண்டும் என்று அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு அந்த ஞானி சென்ற அருள் வழியினை நுகர்ந்து தனக்குள் அதைச் சேர்த்து
1.அன்னை தந்தையருக்கு இதை ஆராதனையாகவும் அவர் ஏக்க அலைகள் உயர வேண்டும் என்று நினைத்து
2.இந்த உணர்வினை இணைத்துக் கொண்டால் தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு ஒளியான சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.
 
அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாகச் சேர்த்து இந்த மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று “கனியாகப் பெற்ற ஞானிகளின் அருள் சத்தைத் னக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி அதே கனியின் தன்மையைத் தாய் தந்தையரைப் பெறச் செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
தாய் தந்தையை விநாயகர் சுற்றி வந்து கனியைப் பெற்றார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் ஆறாவது அறிவு விரிவடைந்த தன்மை கொண்டு
1.எதையும் செயல்படுத்தி விடுவோம் என்ற உணர்வை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது
2.பொருளாக்கத்தை இழந்து எங்கோ பரந்த மனம் கொண்டு போய் விடுகின்றது.
 
ஆக நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் மனிதனை (நம்மை) உருவாக்கி நல்வழி காட்டியது என்ற நிலையைத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.
 
அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி அந்த மகரிஷியின் அருள் ஒளி கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை வென்று மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் நின்று என்றும் பதினாறு என்ற நிலையினை அனைவரும் அடைய வேண்டும்” என்று காட்டப்பட்டது.
 
விநாயகரை எண்ணும் பொழுது மகரிஷியின் அருள் சக்தி என் தாய் தந்தையர் பெற வேண்டும் தாய் தந்தையரின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் அவருடைய அருளால் எனக்குள் வரும் இருளை நீக்கி மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறும் தகுதியைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தன் உணர்வுக்குள் அதைச் சேர்த்து இப்படிப் பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள்.
 
ஆதியிலே அகஸ்தியன் தன் குழந்தைப் பருவத்திலிக்கும் போது
1.தன்னை அறியாமலே தாய் தந்தையரின் ஈர்ப்பின் ஆற்றல்களைப் பெற்று விண்ணை நோக்கி ஏகி
2.வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று ஞானம் பெற்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றான்.
3.தே வழியில் தான் நாமும் விண் செல்ல வேண்டும்…!