
நாரதனை “முனி” என்று காட்டியது ஏன்…?
துருவ நட்சத்திரம்
சப்தரிஷி மண்டலம் இவைகளில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகளைத் தான் (துருவ நட்சத்திரத்தின் அணு) நாரதர் என்று
காரணப் பெயர் வைத்தார்கள். ரிஷியின்
மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது
2.விஷத்தின் தன்மை
அணுகாத நிலை கொண்டது…
3.விஷத்தை ஒடுக்கும்
நிலைகள் பெற்றது என்ற நிலை கொண்டு தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள்
பெற்றவன் என்றும் அன்று பெயர் வைத்தார்கள் “அந்த அணுவிற்கு…”
துருவ நட்சத்திரத்தில்
இருந்து வெளி வரும் அந்த உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ…
இந்த மனித வாழ்க்கையில் தன் ஆசையின் நிலைகளைக் கலைத்து… தன்னை
அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான செயல்களை நீக்கிவிட்டு… “கலகப் பிரியன்” என்று அது நன்மையிலே முடியும்.
மனித வாழ்க்கையில் குழந்தைகளை
வளர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும்
நம்மை அறியாது அதிலே சிறு தடை ஏற்படும் போது நாம் எண்ணியபடி
அவன் வளர்ந்து வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.
வேதனை என்ற அந்த விஷமான
உணர்வுகள் நமக்குள் வந்து கலக்கமாகிச் சிந்திக்கும் திறனை
இழக்கச் செய்யும் இந்த நிலையை அவன் இப்படிச் செய்தான் இப்படிச்
செய்கின்றானே என்ற இந்த ஏக்க உணர்வு கொண்டு செயல்படுத்துவோம்.
அதே சமயத்தில்
பிறருக்கு உதவி செய்யும் போது… தான் எண்ணியபடி காசைக் கொண்டு வந்து அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அவரை
எண்ணி நேரத்தில் உதவி செய்தேன் இப்படிக் காலம்
கடத்துகிறார்கள் என்று ஏசி வேதனைப்படுவோம்.
இதைப் போன்ற மனித
வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் “பற்றுடன்
நமக்குள் வரும் பொழுது… பாசத்திற்கு எதிராக வரும் பொழுது” வெறித்தனமாகக் கூடி அந்த
வெறியான உணர்வுகளைக் கூட்டிடும் இந்த நிலையை
1.அந்த நாரதன் என்ற
உணர்வினை நுகரும் பொழுது அதை எல்லாம் பிரித்து விட்டு
2.நமக்குள் ஓங்கி
நிற்கும் ஒளியாக… நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.
அதற்காக வேண்டித் தான் ரிஷியின் மகன் நாரதர் என்று துருவ
நட்சத்திரத்தில் இருந்து வரும் அணுவிற்குப் பெயரிட்டு அழைத்தார்கள் சாதாரணமாக நாம் புரிந்து கொள்வதற்கு…!
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அதை நுகரும் திறனுக்காக
உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்வதற்கும் அந்த நினைவுகளை எண்ணும் பொழுது அந்த ரிஷியின் சக்தியை நீங்கள் பெறுவதற்கும் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
நன்மை செய்ய வேண்டும்
என்ற நிலையில் பிறர் படும்
துயரத்தை நுகர்ந்து பரிவுடன் பண்புடன் பண்புடன் அவருக்கு உதவி செய்தாலும் நீங்கள் நுகர்ந்த
வேதனையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதை உங்கள் நல்ல குணங்களை அழித்திடும் அந்த
உணர்வை
1.அதை அழித்திட்ட தனக்குள் அடக்கிட்ட அந்த மகரிஷிகளின் அருள்
ஒளியை நுகர்ந்தால் அதை மாற்றி
2.உதவி செய்த நல்ல
பண்புகளைக் காத்துப் பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக விளைய வைத்து
3.என்றும் நிலையான
நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் 16
என்ற நிலையை நாம் அடைய முடியும்.
இதைத்தான் குருநாதர் பல
வகைகளிலும் காட்டினார்.
பித்தரைப் போன்று அவர் வாழ்ந்தாலும் தன் உடலுக்கு
அந்த உணர்வுகளை (பித்தான) கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வுகளை உணர்த்திக் காட்டி அதன் வழி செயல்பட்டார்.
எத்தகைய நல்ல துணிகளை அவருக்குக் கொடுத்தாலும்
பைத்தியக்காரனைப் போன்று “அதைக் கிழித்துக் காலில் கட்டிக் கொள்வார்… ஒவ்வொரு கட்டாக கட்டி விடுவார்…”
என்ன சாமி…? புது துணிகளை எல்லாம் இப்படிக்
கிழித்துக் கட்டி விட்டீர்கள்…! என்று
கேட்டால்
1.கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைப்படுத்தப் புது துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன்
2.இல்லையென்றால் விஷம்
ஏறிவிடுகின்றது என்று இப்படித்தான் உணர்த்தினார்.
ஒவ்வொரு எண்ணங்களுக்கும்
அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகளைக் காட்ட
ஒவ்வொரு நிறத்திலே துணியைக் கட்டுவார். அதே போன்று தாவர இனங்களுடைய சக்தியை அதனுடைய திறனை
அறிவதற்கு அது எப்படி விஷத்தை முறியடிக்கிறது…? எப்படி எல்லாம் தனக்குள் அந்த ஆற்றலை கவர்ந்து கொள்கிறது…? என்பதையும் காட்டுவதற்காக காலிலே துணிகளைக் கட்டுகின்றார்.
ஆனால் அந்த நேரத்தில்
அவரிடம் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உடலை விட்டுச் சென்ற பின் மலைக் காடுகளுக்குள் நான் செல்லப்படும் பொழுது அவரை நினைவு கொண்டு துணிகளை
எல்லாம் ஏன் அப்படிக் கிழித்துக் கட்டினார்…? என்று எண்ணும் போது
1.காலில் கட்டிய கிழிந்த
ஆடையும்… அவர் நினைவலைகளாக நின்று அதை நான் சுவாசிக்கும் பொழுது
2.அந்த உண்மைகளை நுகர
முடிந்தது… தீமைகளிலிருந்து நான்
விடுபட முடிந்தது.
அன்றைய மெய் ஞானியான
அகஸ்தியன் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்… அவன் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…? தீய விளைவுகளிலிருந்து விஷமான ஜந்துக்களிடமிருந்து தனக்குள் வரும் பய உணர்வுகளிலிருந்து எவ்வாறு மீண்டான்…?
அவன் பெற்ற அந்த ஆற்றல்கள் அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வலைகள்
படர்ந்துள்ளது. அங்கே சென்று அதை நுகரும்
பொழுது நுகர்வோர் உள்ளங்களில் அது எதைச் செயல்படுத்துகிறது…? என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் காலிலே இது போன்று பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.
12 வருட காலம் காட்டிற்குள் நான் அலையப்படும் பொழுது திகைத்து நான் எந்த நிலையைச் செய்வது…? என்று உணவுக்காக நான் தவித்துக் கொண்டிருக்கும் நிலை வந்தது. உணவே இல்லாது
காட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?
எதை எதையோ சாப்பிட்டுக்
கொண்டிருப்பேன். இருந்தாலும் அரிசிச்
சோறு சாப்பிட்டுப் பழக்கப்பட்டது… அந்த
நினைவு வரும் பொழுதெல்லாம் துயரங்களே
ஏற்படும்.
அதைப் போன்ற நினைவுகள்
வரும் பொழுது குருவைத் தான் எண்ணுவேன். அவர் உணர்வினை நுகரும் போது மெய் உணர்வுகள் எனக்குள்
ஈர்க்கப்பட்டு
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன்
சென்ற பாதையும் அவன் விஷத்தை முறிக்க எடுத்துக்
கொண்ட நிலையும்
2.அவரிடமிருந்து
வெளிப்பட்ட உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதையும் பூமியிலே இறுகிப் பதிந்திருப்பதையும்
3.அந்த இடங்களில் நின்ற
பின் அந்த உணர்வின் நினைவலைகள் எனக்குள் வருகிறது என்ற
நிலையை உணர முடிந்தது.
மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு
இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குருநாதர்
காட்டிய வழி கொண்டு தான்.
அவர் உடலை விட்டுச் சென்ற பின் இதையெல்லாம் அறியக்கூடிய நிலையும்… நுகர்ந்தறிந்து… எனக்குள்
என்னை அறியாது வந்த தீயவினைகளை அடக்கியதும்… “மெய் உணர்வைப் பெற வேண்டும்
என்ற ஏக்க உணர்வு கொண்டு ஓங்கி வளர்ந்த
அந்த உணர்வின் எண்ண அலைகளே” இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றது “நான் அல்ல…!”
1.குருவை நான்
நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
2.அதை நீங்கள் கூர்ந்து
கேட்டு நுகரும் போது உங்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.
ஆகவே… குருநாதர் எனக்கு
எப்படி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெறும்படி செய்தாரோ… அதற்குண்டான உபாயங்களைத் தெரியப்படுத்தினாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும்
இப்பொழுது அந்த உயர்ந்த சக்தியைப் பெறுவதற்குண்டான தகுதிகளை
ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்.
அதன் வழி நீங்கள் எண்ணி
ஏங்கினால் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பெற்று அவர்களைப் போன்ற உயர்ந்த நிலையைப் பெற முடியும்.