துருவ நட்சத்திரத்திலிருந்து பூமி அதிகமான சக்திகளைக் கவரக்கூடிய நேரம் தான் அதிகாலை நேரம்.
1.அந்த நேரத்திலே… அது பெற்ற… அந்த உணர்வு வழிப்படி யாம் உபதேசிக்கப்படும் பொழுது
2.எதைச் சொல்கிறோமோ அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஒவ்வொன்றிலும் கலக்கின்றது.
3.அப்படிக் கலந்தது என்றால் எல்லாக் குணங்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும் ஒரு வித்தாக இப்போது உருப்பெறுகின்றது.
விவசாயப் பண்ணைகளில் வீரிய வித்துகளை உருவாக்குவது போன்று உங்களுக்குள் ஞான வித்தாக இணைத்துக் கொண்டு வருகின்றோம்.
அதே சமயத்தில் அந்த விவசாயப் பண்ணையில் வீரிய வித்துக்களை உருவாக்கிய பின் அதை வைத்து எவ்வாறு நல்ல மகசூலாக எடுக்க வேண்டும் என்று அதற்குண்டான பக்குவ முறைகளையும் சொல்லிக் கொடுப்பார்கள்.
அதை போன்றுதான் உங்களுக்கு ஞான வித்தை வளர்க்கும் விதமாக ஆத்ம சுத்தி என்ற பயிற்சியும் கொடுக்கின்றோம். அந்த ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் செய்து வந்தால் உங்களுக்குள் பேரருளை உருவாக்க முடியும்.
1.துருவ நட்சத்திரம் அழியாத நிலையாக… ஒளியின் சுடராக எப்படி இயங்கிக் கொண்டுள்ளதோ
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒளியாக எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ
3.அதை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்து “ஞான வித்துக்களாக” உருவாக்கிக் கொண்டு வர வேண்டும்.
அப்படி உருவாக்கி விட்டால்
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடியதை “நீங்களே மாற்றக்கூடிய பக்குவமும்…”
2.வரும் தீமைகளை விலக்கக்கூடிய நிலையும் சமப்படுத்த கூடிய நிலையும்
3.சர்வத்தையும் ஒளியாக ஆக்கக்கூடிய நிலையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.
அதைத்தான் உபதேச வாயிலாக அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குத் தினமும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).
ஏனென்றால் தனுசுக்கோடி என்று சொல்வார்கள் ஒவ்வொன்றாக உபதேச வாயிலாக யாம் சொன்ன சொல்கள் உணர்ச்சிகளாகும் போது “தனுசு…”
ஒரு வில்லிலே அம்பை ஏற்றிப் பாய்ச்சினால் அது இலக்கைத் தாக்கி… அங்கே எப்படி ஊடுருவிக் காயத்தை ஏற்படுத்துகின்றதோ அது போன்று
1.உங்கள் உடலில் உள்ள எல்லாம் அணுக்களிலும் இது ஊடுருவிப் பாயும்.
2.உபதேசத்தைக் கேட்போர் உணர்வுகளிலே இது தைத்து அந்த ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.உங்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வளருகின்றது.
இதுதான் விஷ்ணு தனுசு…!