ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2023

குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துச் சிந்தித்துப் பாருங்கள்... உயர்ந்த ஞானம் கிடைக்கும்

ஒரு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்கின்றார்கள்... அந்தப் பதிவுக்குத் தகுந்த மாதிரி அது வேலை செய்கின்றது. என்னென்ன ஆணையிடுகின்றார்களோ அனைத்தையும் அது செய்கின்றது.

சந்தர்ப்பத்தில் ஒரு கோபமான உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

யாரால் அது வந்ததோ கோபத்தில் அவன் நம்மை ஏதாவது செய்து விடுவானா...? என்று பதிலுக்கு
1.அவனுக்கு எப்படி இடைஞ்சல் செய்வது...?
2.அவனை எப்படித் துன்புறுத்துவது...?
3.அவனை எப்படி மிரட்டுவது...? என்றெல்லாம் நமக்குச் சிந்தனை வருகின்றது

இந்த மாதிரி ரெக்கார்டு நமக்குள் பதிவான பின் நல்ல குணத்துடன் அது இணைக்கப்படும் பொழுது “எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக்...” என்று அதனுடைய அழுத்தங்கள் ஆகி... பல சிந்தனைகள் பல செயல்களாக இந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக ஊட்டி... அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

உங்களிடம் தொடர்ந்து இப்போது அருள் ஞானிகள் உணர்வுகளை ரெக்கார்ட் செய்கின்றேன் (ஞானகுரு). “கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்தது” வேலை செய்வது போன்று உங்களுக்குள் இயக்கச் சக்தியாக அதைக் கொடுக்கிறேன்.

குரு காட்டிய அருள் வழியில் வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தி இந்த ரெக்கார்டுகளைக் கொடுக்கின்றோம். “ஈஸ்வரா...” உங்கள் உயிரை எண்ணி
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதே சமயத்தில் உபதேச வாயிலாக ஒவ்வொன்றாக ரெக்கார்டு செய்கின்றோம். அதை எல்லாம் பதிவு செய்து தியானத்தில் நினைவு கொண்டீர்கள் என்றால் “அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்த ஞானமே உங்களுக்கு வரும்...”

தொழிலுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் அதை எப்படி வழி நடத்த வேண்டும்...? என்று அதற்குண்டான சிந்தனைகள் வரும்.

எப்படிச் செய்ய வேண்டும்...? என்று பிறரிடம் யோசனை கேட்டால் அவர்கள் எதை எதையோ சொல்லிக் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு பேசுவார்கள். என்னடா போன இடத்தில் இப்படிச் சொல்கிறார்களே...! என்று நமக்குப் பல சந்தேகங்கள் வந்துவிடும்.

அதற்குப் பதிலாக...
1.நம் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
2.”இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்” என்று உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் வரும்.

உங்கள் சிந்தனை உயர்ந்த ஞானத்திற்கு வழிவகுக்கும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணிச் செய்ய வேண்டியது:
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என் செயல் நல்லதாக இருக்க வேண்டும் என்று கணவனும்
2.உங்களுடைய அருள் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவியும்
3.இரு மனமும் ஒரு மனமாக வேண்டும்... இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் செயல் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி இருவருமே சேர்ந்து எண்ணிப் பழக வேண்டும்.

அவ்வப்பொழுது இதை நீங்கள் செயல்படுத்தினால் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அழுத்தங்கள் ஆகி...” வாழ்க்கையில் எதிர் நிலைகள் வந்தால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்ற நிலைக்கொப்ப வலுவான நிலைகள் கொண்டு “கணவனைக் காத்திடும் சக்தியாக... மனைவியைக் காத்திடும் சக்தியாக நிச்சயம் வரும்...”

1.தவறு என்றால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்குச் செல்ல விடாதபடி தடுக்கும்.
2.அதே சமயத்தில் நல்ல இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

இதன் வழி செயல்படுத்துவோர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நீங்கள் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

விஞ்ஞானம் இன்று இதையெல்லாம் நிரூபிக்கின்றது. ஆனால் மெய்ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது...? என்றால் நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது... அதற்குத்தான் நாம் அடிமையாகின்றோம்... நல்ல குணங்களின் தரத்தை அது குறைத்து விடுகின்றது.

ஆகவே நாம் அருள் உணர்வினை நமக்குள் பெருக்க வேண்டும். தீமை என்ற உணர்வை மாற்ற வேண்டும்.

ஒரு விறகுக் கட்டை இருக்கிறது என்றால் அதை எரித்தால் நெருப்பு ஜுவாலையைக் கொடுக்கின்றது... ஒளியாக மாறுகின்றது... நன்மை செய்கின்றது.

இது போன்றுதான் தீமை என்று வந்தாலும் அருள் ஒளி என்ற உணர்வை எடுத்து அதனுடன் இணைத்துப் பழக வேண்டும். காரணம்
1.ஒளியாக அந்தத் தொக்கி உள்ளதை இயக்குவது அது தான்.
2.ஆனால் கருகலை நீக்கி இதனுடன் சேர்க்கும் போது ஒளியாக மாறுகிறது.

அதாவது கட்டையை எரித்தால் கருகுகின்றது ஆனால் வெளிச்சம் கொடுக்கின்றது... ஒன்றைச் சமைக்கின்றது.

இதைப் போன்று... வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அனைத்துமே கதிரியக்கப் பொறியின் உணர்வால் தான் இயக்குகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.அருள் ஒளி என்ற உணர்வை இதற்குள் சேர்த்து நல்ல முறையிலே இயக்கப்படும் பொழுது அந்தக் கருகிய உணர்வுகளை நீக்கிவிடும்.
2.நமக்குச் சமைக்கும் பக்குவமும் வரும்... வெப்பமும் வரும்.
3.அதே சமயத்தில் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிடைக்கும்.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும். குரு வழியில் இதைப் பதிவு செய்கின்றோம்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்