ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2023

தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”

ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.

அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாக்குகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.

வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது

இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.

இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சக்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் தன்னை பெற்றது நம்ம்ய்டைய கணையங்கள்.

ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.

சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.

நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.

வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.

அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்” ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.

அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.

1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.

நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.