ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2023

தீமை நீக்கும் பயிற்சியைப் பெறுவதற்குத்தான் தியானம்… “கண்களை மூடி ஜெபிப்பதற்காக இல்லை”

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் படரச் செய்து கொண்டிருக்கிறது.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

ஏற்கனவே பல முறை இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அதன் வலிமை பெற்றதனால்
2.அதன் துணை உண்டு உங்கள் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிரின் இயக்கத்துடன் தொடர் கொண்டு நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு ஏங்கி தியானிக்கும் போது
1.கருவிழியின் வழி… கண்ணின் நரம்பு மண்டலத் தொடர்புடன்…
2.உங்கள் உடலில் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இயக்கும் வலிமை பெறுகின்றது.

புருவ மத்தியில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே மீண்டும் மீண்டும் செலுத்தி உயிருடன் இணைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வோடு கண்களை மூடுங்கள்.

இப்பொழுது உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு உயிருடன் அந்தப் புருவ மத்தியிலே இணைத்து இயக்கப்படும் பொழுது…
1.உணர்ச்சிகள்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை (உயிர் வழி) உயிரிலே ஈர்க்கப்படும் பொழுது
2.உடலிலே உருவாகிக் கொண்டிருக்கும் அந்தத் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் புகாது இப்போது நாம் தடைப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் நிலை வரும் பொழுது புருவ மத்தியில் சிறிது கனமாக இருக்கும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே மோதும் பொழுது
2.வெளிச்சங்கள் புருவ மத்தியில் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களுக்கு ஆகாரம் உள் புகாது இப்பொழுது தடுத்து நிறுத்தப்படுகின்றது “நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு…”

கண்ணின் நினைவை இப்போது உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே செலுத்துங்கள். அதில் உள்ள ஜீவணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

சந்தர்ப்பத்தில் நாம் வெறுப்போ வேதனையோ சலிப்போ கோபமோ ஆத்திரமோ கொள்ளும் போது… எவர் உடலில் இருந்து இந்த உணர்வுகள் நமக்குள் வந்ததோ அதை நினைவாக்கி மீண்டும் எண்ணும் பொழுது உணவு உட்கொள்ளும் பொழுது இங்கே தடையாகிறது

ஆனால் வெறுப்பு வரும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது ஒடுங்குகின்றது.

அல்லது அந்த இரத்தத்தில் உருவான அத்தகைய அணுக்களுக்குக்
1,கண்ணின் உணர்ச்சி கொண்டு வீரிய சக்தியான நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தத்தில் கலப்பதை இப்பொழுது நீங்கள் உணரலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் கடந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியைப் பெறும் பொழுது அந்த உறுப்புகள் அனைத்தும் வலிமை பெறுகிறது.

உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்)
1.முன்னாடி இருக்கக்கூடிய தீமைகள் உங்கள் சுவாசத்திற்கு மூக்கின் வழி உள்ளே செல்லாதபடி அதைத் தள்ளிவிடும்
2.அதற்குத்தான் பயிற்சியாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம்.