ஆரம்பத்தில் குருநாதர் என் மனைவி உயிரைக் காப்பாற்றினாலும்… என் (ஞானகுரு) மனைவிக்கு நோய் இல்லை என்று தான் நினைக்கின்றேன். சந்தர்ப்பத்திலே அனுபவத்திற்குத் தான் கடைசி நேரத்திலே குருநாதர் ஏதோ உண்டு பண்ணி… எப்படியோ அவர் வழியில் என்னை இழுத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
1.என் மனைவியின் சந்தர்ப்பம்… எனக்கு ஞானம் பெறும் ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்தது.
2.இந்த உபதேச வாயிலாக இப்பொழுது சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
3.இப்படி “எல்லாமே சந்தர்ப்பம் தான் காரணம்” என்கிற வகையிலே குருநாதர் விபரத்தைச் சொல்கிறார்.
ஏனென்றால் பல அவஸ்தைகள் பட்டுத் தான் யாம் மீண்டு வந்தோம். வந்த பிற்பாடு எல்லோரையும் தேடி வந்து நான் இதைச் சொல்லப்படும் போது எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றார்கள்…?
எத்தனையோ பேர்களுக்கு நோய்களையும் துன்பங்களையும் நீக்கிக் கொடுத்தோம். அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்திருக்கின்றார்கள்...!
கடுமையான நோய்களைக் கூட நிவர்த்தி செய்ய முடிந்தது. அது எல்லாம் நடந்த பிற்பாடு… நன்றிக்கடனாக…
1.கடைசியில் ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் காணிக்கை செலுத்தக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள்
2.நம்முடைய பழக்க வழக்கங்கள் அப்படித் தான் இருக்கிறது.
ஆனால் யாம் சொல்வது… நீங்கள் இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து அதன் வழி மற்றவர்களுக்கு நன்றாகி விடும் என்று சொன்னாலே போதும். அவர்கள் இதை எடுத்தால் அவர்கள் நோய் விலகுகின்றது… துன்பம் விலகுகிறது.
1.விலகிய பின் அதிலே விளைந்த அந்த நல்ல வாக்கை அவர்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால்
2.அவருடைய கஷ்டமும் போகின்றது… இப்படி நாம் கொண்டு வருகின்றோம்.
அதற்காக வேண்டித் தான் ஆரம்பத்தில் யாம் எல்லாவற்றையும் நேரடியாகச் செய்தோம். ஆனால் அது எல்லாம் “தோல்வி அடைந்தது...” காரணம்… அவரவர்கள் இஷ்டத்திற்கு அதை எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.
எதை…?
கொஞ்சம் விஷயம் தெரிந்த பின்… தனது வசதிக்குத் தான் கொண்டு செல்கின்றார்களே தவிர மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
1.ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள்…! எனக்குள் எல்லாமே இருக்கின்றது… இதை நான் தான் செய்கின்றேன்
2.ஏதாவது ஒன்றைச் செய்தால் “நான் செய்தேன்…!” என்று நீ போய்ச் சொல்
3.”என்னால் நல்லது ஆனது…” என்று சொல் என்று இப்படி விளம்பரப்படுத்த விரும்புகின்றார்கள்.
பெரும்பகுதி இப்படித்தான் ஆகின்றார்கள்
தனித்தன்மை வைத்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் மனமார அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி வந்ததெல்லாம் “தோல்வி அடைந்த பிற்பாடு” இனி காலம் இல்லை என்ற நிலையில் இப்பொழுது
1.எல்லாமே வெட்ட வெளிச்சமாகக் கொடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றிக் கொடுக்கின்றோம்…
2.எல்லோரும் வளரட்டும்…! என்ற இந்த ஆசையிலே நான் இதைச் சொல்கிறேன்.
ஆக… தியானத்தைச் செய்தால் நல்லதாகும் என்ற இந்த முடிவுக்கு யாம் வந்தது. தியானம் செய்யாதபடி நல்லதாகாது. அப்போது அந்த ஆசையிலாவது வரட்டும்…!
யாம் சொன்ன முறைப்படி ஒருவர் தயாரானால்… தொழிலில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றீர்கள் என்றால் உங்கள் பார்வையால் அந்த 100 பேருக்கும் நன்மையாகின்றது.
ஆனால் அதே சமயத்தில் நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். 100 பேர் கஷ்டம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள். அந்த நூறு பேரின் கஷ்டம் என்ன செய்யும்…?
நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுடைய நல்லதை அது மாற்றி விடுகின்றது. இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளிலிருந்து மாற்றுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.அதைக் கடைப்பிடித்து எந்த வகையில் அவர் நல்லவராகிறாரோ
2.அவர் மற்றவருக்கு அதைச் சொன்னால் அவர்கள் தீமைகளும் போகிறது.
சாதாராண நிலையில் பிறரைப் பார்க்கும் பொழுது இங்கே நமக்கு நோய் ஆகிறது. ஆனால் அருள் வழியினை எடுத்து நாம் செயல்படுத்தும் பொழுது நம் பார்வையில் மற்றவர்களுக்கு நோய் போகின்றது.
அந்த அளவுக்கு நீங்கள் வளர வேண்டும். உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் நோய் போக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்கள் நோய் அகலும்… துன்பங்கள் அகலும்… உங்கள் தொழில் சீராகும்… என்று
1.இப்படி ஆர்வமாகச் சொல்லிவிட்டால் அதை எடுக்கும் போது
2.எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்கு வருகின்றார்கள்.
தனியாக யாரையும் போற்றுவதில்லை. குரு அருள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோரும் எடுத்து வளர்க்கும் நிலை வருகின்றது நான் எடுத்த பங்கிற்கு அந்த நல்ல நிலையைப் பெறுகின்றேன்… அதே போல் அவரவர்கள் எடுத்த பங்கிற்கு அந்தப் பலனை அடைய முடியும்.
1.எல்லோரையும் அந்த உயர்ந்த நிலைக்குத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்
2.ஆனால் அது முடியவில்லை… அந்த ஆசையிலே போகின்றேன்.
எத்தனையோ வருடங்கள் சிரமப்பட்டு அதிலிருந்தெல்லாம் மீட்டி “எல்லோருக்கும் அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும்…” என்ற அந்த ஆசையில் தான் உங்களிடம் வருகின்றேன்.
1.குரு உணர்வு தான் இங்கே இயக்குகின்றது... அவரால் தான் நாம் வளர்கின்றோம்…
2.அத்தனை பேருக்கும் அந்த சந்தர்ப்பம் தான்… நான் செய்தேன் என்று சொல்வதற்கு இல்லை.
அருளைத்தான் நான் தேடி வைத்திருக்கின்றேன். அந்த அருளால் உங்களுக்கு நன்மை செய்ய முடிகின்றது எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற அந்த ஆசை உங்களிடம் இருந்து தான் நான் பெறுகின்றேன். அந்த வழியைத்தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.
உங்களுடைய ஊக்கம் தான் இதை வலுப் பெறச் செய்கின்றது நீங்கள் அந்த குரு அருளைப் பெறும் பொழுது அந்த ஊக்கத்தால் நானும் அதை வலு கொண்டு செயல்படுத்த முடிகின்றது.
நீங்களும் அந்த நிலையை வளர்க்க முடியும்.. அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். இந்த உலகை அருள் வழியில் அழைத்துச் செல்லலாம்.
1.நான் சொல்வது லேசாகத் தெரியலாம்
2.ஆனால் மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை நீங்கள் வளர்க்க முடியும்.