ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 3, 2023

விஞ்ஞான அறிவால் சாதாரண இரும்பை வலுக் கொண்டதாக (HARDENING) மாற்றுவது போல் நம் எண்ணங்களையும் உறுதியாக்க முடியும்

ஒரு மனிதன் தீமையால் வாடுகின்றான் என்று நாம் பார்க்கின்றோம். அப்போது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்

உதவி செய்ய வேண்டும் என்றால் அவன் படும் தீமை நமக்குள் வராது தடுப்பது எப்படி…?

பார்த்து நுகர்ந்து “அவன் அவதிப்படுகிறான்…” என்று தெரிந்து கொள்கின்றோம் ஆனால் அந்தத் தீமை தனக்குள் வளராதபடி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் எண்ணி உள்முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் போது அது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ளே வலுவாக்கினால் இந்த சக்தி உள் நின்று அந்தத் தீமையை வெளியே தள்ளிவிடும்.

அந்த வலிமையான உணர்வுகள் நமக்குள் சுவாசமாகி தீமை புகாதபடி தடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகக் கொடுக்கின்றது. இப்படி நாம் கொடுத்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக இரும்பை எத்தனையோ வகைகளில் காய்ச்சி உருக்கி உருவாக்குகின்றார்கள் அதில் திரவங்களை ஊற்றப்படும் போது பல வகைகளிலும் வலு கொண்டதாக மாறுகின்றது.

வலு கொண்ட இரும்பாக ஆன பின் மற்றது இதைத் தேய்க்க முடியாது ஆனால் இது மற்றதை அறுத்துவிடும். மனிதர்கள் இரும்புக்குள் பல திரவங்களை சேர்த்து எப்படி அதை உறுதியாக்குகின்றார்களோ

உதாரணமாக… இரும்பை நன்றாகப் பழுக்க அதைச் சூடாக்கிய பின் தண்ணீரிலே போட்டால் அது இணைந்து கொண்ட பின் அந்த இரும்பு ஒடியும் தன்மை வருகின்றது… உடைந்து விடுகின்றது.

ஏனென்றால்
1.அதிகமான காய்ச்சலாகும் பொழுது பருவம் தவறினால் தட்டியவுடன் அது உடைந்து விடுகிறது
2.ஆனால் பருவத்துடன் இரும்பைக் காய்ச்சி பக்குவமாகத் தண்ணீரில் விட்டால்
3.அது மற்றதைக் காட்டிலும் வலுக்கொண்டதாக மாறுகிறது.

ஆகவே பருவம் தவறினால் அதனின் வலு மாறிவிடுகிறது.

இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை மனிதன் தன் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின்
1.இது எல்லாம் மனிதனுக்கு எவ்வாறு…? என்ற நிலை வருவதனால்
2.இந்த மனித வாழ்க்கையிலிருந்து பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
3.பிறவி இல்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத் தான் அதிகாலையிலே துருவ தியானமாகக் கொடுத்துள்ளோம்.

வாழ்க்கையில் எப்பொழுது சங்கடமோ சலிப்போ வேதனையோ துன்பமோ வருகின்றதோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டி விடாதபடி ஈஸ்வரா என்று தடைப்படுத்திடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வலுவாக்கி உடலுக்குள் அதை உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது தீமையை செய்யும் உணர்வுகளை அது உள்ளே புகாது தடுத்து விடுகின்றது