ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2023

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ வகையான சாப அலைகள் சாடி உள்ளது (நமக்குத் தெரியாமலே…!)
1.நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்
2.நல்லவர்களாக வேண்டும் என்று முயற்சித்தாலும் சாப வினைகள் கலந்து
3.வாயிலே விஷம் கலந்தது போன்று வாழ்க்கையில் ஈடேற முடியாத நிலைகளில் சாப வினைகள் தடுத்துக் கொண்டுள்ளது.

சாப வினைகளையும் பாப வினைகளையும் சுட்டுப் பொசுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளோர் வலுவாக எண்ணினால் அவைகள் நீங்கும்.

இன்று பார்க்கலாம்…! ஒன்றுமறியாத இளம் குழந்தைகளாக இருந்தாலும் கூட சாப அலைகளால் கை கால் முடமாகி… நாளுக்கு நாள் குறுகி எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றது.

ஒரு குடும்பத்தில் செழித்த நிலைகள் செல்வங்கள் இருப்பினும் எனக்கு எப்படி இந்தக் கதியானதோ… உன் குடும்பமும் இப்படித்தான் போகும்…! என்று யாரோ சாபமிட்ருப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய் இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் போதும்.
1.சாபம் இட்ட உணர்வின் வீரிய சக்தி அந்தக் குடும்பத்தில் வாழும் பெண் கொடி வழியில் அது படர்ந்து வந்து
2.அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுத்து… அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் படுவதைப் பார்க்கலாம்.

எல்லோருக்கும் நல்லது தான் செய்வார்கள்… நல்ல குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் கொடி வழி வந்த அந்தச் சாப வினைகள் அவர்களை ஈடேற விடுவதில்லை.

அதே சமயத்தில் எல்லோருக்கும் பரிபக்குவ நிலைகளை நாம் செய்திருப்பினும்… அன்புடன் பண்புடன் பழகி மற்றவருக்கு உதவி செய்வோராக நாம் இருந்தாலும்…
1.ஒரு ட்ரெயினிலே போகும் பொழுது சாதாரணமாக ஒருவருடன் பழகி இருப்போம்… உதவி செய்திருப்போம்
2.ஏனென்றால் கஷ்டமாக அவர் இருந்திருப்பார்… நாம் உதவி செய்த உணர்வோ ஆழமாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

கஷ்டங்களைப் பட்டவராக இருப்பதால் “அவருடைய சந்தர்ப்பம்” அவர் வீட்டுக்குச் சென்ற பின் ஹார்ட் அட்டாக் வந்தோ அல்லது திடீரென்று அதிர்ச்சியினாலோ இறந்து விடுகிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உயிர் பிரியும் நேரம்… உதவி செய்த நம் மீது தான் அவருடைய எண்ணம் வரும்.
1.காரணம் அவருக்கு நாம் உதவி செய்த நன்றிக் கடனாக நம்மை எண்ணுவார்.
2.ஆக… ஹார்ட் அட்டாக்கில் இறந்த அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும்
3.வந்த பின்… அவருக்கு எப்படி அந்தப் பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலை இங்கேயும் வருகின்றது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றது. இதை யாரும் குறையாகச் சொல்வதற்கு இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் வராது தடுக்க வேண்டுமா இல்லையா…!

ஆறாவது அறிவு துணை கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்திக் கொண்டால் மனிதன் முழுமையாகின்றான்.

இல்லை என்றால் மீண்டும் நரகலோகம் தான்…! (மீண்டும் பிறவி நிலை) என்று சாஸ்திரங்களில் தெளிவாகத் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேளுக்குக் கொடுக்கிலே விஷம் இருக்கின்றது ஆனால் உணவு உட்கொள்ளும் போது எத்தனையோ வேதனைப்படுகின்றது. மற்ற எதிரிகளிடமிருந்து தப்பித்து வாழ “அஞ்சியே வாழ்கின்றது…”

இது போன்று ஒவ்வொரு உயிரினங்களும் எத்தனையோ வகையில் அல்லல்படுகின்றது… நரக வேதனைப்படுகின்றது இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

1.அது போன்ற வேதனைப்படும் உயிரினங்களாக மீண்டும் பிறவிக்கு வந்து
2.இன்னொரு இழி நிலையான சரீரத்திற்குள்ளே சென்று விடாதபடி
3.இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் ஆற்றல்களைப் பெற்றுத் தீமைகளை அகற்றி
4.நம்மை அறியாது சேர்ந்த சாப வினைகளையோ பாவ வினைகளையோ நீக்கி
5.வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்து வாழும் அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும்.

இந்த உடலை விட்டு அகன்றால் நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! அந்த எல்லையை அடிப்படையாக வைத்து வாழ்க்கை வழி நடத்தினால் தான் அது சரியாக இருக்கும்.
1.யாரும் என்னை மதிக்கவில்லை… எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…! என்ற
2.பிறருடைய எண்ணங்களோ அல்லது அது போன்ற உணர்வின் இயக்கமோ நம்மைக் கீழே இழுத்து விடாது…!