வியாசருக்கு மீன்களைப் பிடித்துத்தான் ஜீவிதம். அவர் அலைகடலிலே செல்லும் பொழுது புயலிலே சிக்கிப் படகு கவிழ்கின்றது. அப்பொழுது தன் உயிருக்காக வேண்டித் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணங்கள் தோன்றுகின்றது.
தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம்… உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து… அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான்,
1.அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ
2.அதே மீன் இனம் காப்பாற்றி இவனைக் கரை சேர்க்கின்றது.
கடல் வாழ் மீன் இனங்களில் மனிதனைக் காத்திடும் உணர்வலைகள் வெளிப்பட்ட பின் அந்த மீனை மீனவனான வியாசகன் எண்ணுகின்றான். இவனைக் காத்திட்ட அந்த உணர்வுகள் இவனுக்குள் கருவாகி அப்போது தான் அதைத் தியானிக்கின்றான்.
பிறிதொரு ஜீவனால் காப்பாற்றப்பட்ட உணர்வின் எண்ணம்… இவன் தன்னைக் காக்கும் எண்ண உணர்வுடன் கலந்தவுடனே வீரியம் அடைந்து… அந்த உணர்வின் சக்தியை ஆற்றலாகப் பெற்று… இயற்கையின் செயலின் ஆற்றல் இவனுக்குள் உருப்பெற்று “விண்ணை நோக்கி ஏங்குகின்றான்…”
அவ்வாறு ஏங்கும் நிலைகள் கொண்டுதான் சூரியனின் காந்த சக்தியின் ஆற்றல் இவனுக்குள் வேகத்தைக் கூட்டி அந்த உணர்வின் சத்தான நிலைகள் அவனுக்குள் வளரச் செய்கின்றது.
எந்த மீன் இனம் அவனைக் காத்ததோ அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அந்த வளர்ச்சியின் தன்மை பெறப்படும் போது தான்
1.அகண்ட அண்டங்கள் எப்படி இருக்கின்றது...?
2.அண்டத்திற்குள் நம் பிரபஞ்சம் எப்படி உருவானது...?
3.பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படி உருவானது...?
4.இந்தப் பூமிக்குள் கடல்கள் எப்படி உருவானது...?
5.கடல் நீருக்குள் உயிரணுக்கள் எப்படி உருவானது...? என்ற நிலையை
6.வியாபித்திருக்கும் உணர்வின் சக்தியை இவன் அறியும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
அவனை மீன் காத்தது... அதை அவன் தியானிக்கின்றான். காத்திட்ட உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. தன்னைக் காத்த உடலுக்குள் அந்த மீன் இனத்தைத் தியானிக்கும் போது கடல் வாழ் மீன் இனம் அது இயற்கையில் தனக்குள் ஒன்றுக்கொன்று விழுங்கி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “அகண்ட அண்டத்தின் நிலையை…” இவனுக்குள் நினைவுபடுத்திக் காட்டும் நிலை வருகின்றது.
தன் எண்ணங்களை வியாபித்துக் கிடக்கும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து தனக்குள் உருவாக்குகின்றான். அதனால் தான் வியாசகர் என்று அவனுக்குப் பிற்காலங்களில் காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
ஒவ்வொரு காலங்களிலும்...
1.மனிதன் வானுலக உணர்வின் தன்மையைத் தனக்குள் சந்தர்ப்பத்தால் எடுக்கப்படும் போது - நுகர்ந்த உணர்வை
2.இந்த உயிர் அவனை மீட்டிடும் உணர்வுகளாக விளைந்த பின்
3.அவனின்று சொல் வடிவில் வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
அதை நாமும் நுகர்ந்து இரத்தத்தில் அணுக்கருக்களாக்கி அணுக்களாக நமக்குள் உருவாக்கும் தன்மை பெற வேண்டும்
வியாசகரால் கண்டறிந்த இந்த வியாபித்த உணர்வின் தன்மையைத் தனக்குள் குவித்து நாம் எப்படி வாழ வேண்டும்..? என்று காட்டுகின்றார் நமது குருநாதர்.
அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வுகள் வெளிப்பட்டதை நமது குருநாதரும் அதைக் கண்டுணர்ந்தார். அதைத் தனக்குள் விளைய வைத்தார். ஒளிச் சரீம் பெறும் தகுதியைப் பெற்றார்... ஒளியின் சரீரமும் ஆனார்.
அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அதிலே விளைந்த வித்தினைத்தான் உங்களுக்குள்ளும் பெறும்படி ஊழ்வினை என்ற வித்தாக இப்போது பதிவு செய்வது.
1.இதை நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ அந்த அருள் சக்தியை நீங்கள் உணர முடியும்.
2.அந்த உணர்வின் துணை கொண்டு அதை வளர்த்திடவும் முடியும்.
3.அருள் மகரிஷிகள் சென்ற இடமான சொர்க்க பூமியான சொர்க்கலோகத்தை அடைய முடியும்.