ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2022

ஒலி... ஒளி... அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது... அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்...?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்... வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது... சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்... ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது... வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது... நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது... ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்... அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.