ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2022

எத்தகைய நிலையாக இருந்தாலும் அங்கே மறைந்த உண்மையை வெளியே கொண்டு வரும் சக்தி நமக்கு உண்டு

 

பணத்திற்கு அடிமையானவர்கள்... பணத்தையே குறிக்கோளாக வைத்துப் பிறருடைய துன்பத்திற்குத் தீர்ப்பு கூறுவார்கள். அங்கே உண்மையின் நிலைகள் தீர்ப்பு வராது. இன்று சத்தியம் தர்மம் “செல்வத்தில் தான்…” இருக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில்
1.நாம் வளர்த்துக் கொண்ட அருள் செல்வத்தை வைத்து…
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வைத் தவறு செய்வோருக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தவறு இல்லாத நிலையில் நடந்து கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டும்.

தவறு செய்வோர் உணர்விலும்...
1.அந்த உண்மைகளை உணர வேண்டும்
2.அவர் தெளிவான செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்று உணர்வைப் பாய்ச்சும் பொழுது
3.நம்மை அவர்கள் எண்ணும் பொழுது இது ஊடுருவி
4.தவறு செய்யும் உணர்வினைப் பிளந்து உண்மையை உணர்த்தும் சக்தியாக அங்கே மாறும்.

இந்தச் சக்தி உங்களுக்கு உண்டு...!

ஒருவர் மேல் வெறுப்படையும் போது அந்தச் சக்தி கொண்டு “நாசமாகப் போவான்...!” என்று சொல்லப்படும் பொழுது அவர் செவிகளில் இது பட்டு இந்த உணர்வுகள் அவர் தொழிலுக்குப் பாதகத்தைப் ஏற்படுத்தும்... அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றது.

1.மனித வாழ்க்கையில் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
2.பிறருடைய வேக உணர்வுகள் தாக்கி விட்டால் நம்முடைய சிந்தனையை அது சீர்குலையைச் செய்து விபத்துகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
3.சில விபரீத செயல்கள் நம்மை அறியாமலேயே செயல்படுத்தத் தொடங்கிவிடும்.
4.விபரீத செயல்கள் செயல்படுத்துவது மட்டுமல்லாதபடி குற்றவாளியாக ஆக்கும் நிலையும் உருவாக்கி விடுகின்றது.

பகைமையை வளர்த்து வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது அடுத்து நம் நண்பரிடத்தில் பழகினாலும் அவரையும் வெறுப்பின் தன்மை அடையச் செய்யும்.

நம் பெயரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவருக்குள் சென்று ஏற்கும் நிலை இல்லாதபடி நமக்கு உதவி செய்வதும் தடைப்படும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எண்ணி எடுக்கும் பொழுது பிறருடைய தீமைகள் எதுவாக இருப்பினும் அது நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டாது இது அடக்கிவிடும்.

அதே சமயத்தில் யார் யாரெல்லாம் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாது செய்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலே அவர்களுக்குள் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு அருள் ஞானத்தை இப்படி ஊட்டுங்கள்.

நாரதன் கலகப்பிரியன்... நாம் ஈடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாரதனாகச் சென்று உண்மையை வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது. இதைத் தான் காவியங்களில் நாரதனை முக்கிமாக வர்ணித்துக் காட்டியிருப்பார்கள்... “நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று...!”

இதனின் உணர்வினை நாம் வழிப்படுத்தினால் தீமைகளை உருவாக்கும் நிலையில் இருந்து “நம் எண்ணத்தாலேயே நாம் விடுபட முடியும்…”
1.இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் உணர்வை நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்
2.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்கின்றோம்.