ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2021

பழனி மலை முருகனிடம் என்ன கேட்க வேண்டும்...? என்று சொன்னார் குருநாதர்

 

நான் (ஞானகுரு) வேலையை விட்டு நின்று... சரியான சாப்பாடு இல்லாது... நண்பர்களும் மற்றவர்களும் கேவலமாகப் பேசி மனம் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்திருக்கின்றேன். அந்த நேரத்தில் என்னை ஒரு உணர்வு இழுத்து பழனி மலைக்கு மீதாவது போய்ப் பார்க்கலாம் என்று இயக்குகிறது.

அங்கே போகத் தொடங்கியதும் குருநாதர் இங்கிருந்து குறுக்காட்டுகிறார்.

1.டேய்....... பணம் வேண்டும்... செல்வம் வேண்டும்... செல்வாக்கு வேண்டும்... சொல்வாக்கு வேண்டும்...
2.இந்த மூன்றும் வேண்டும்...! அது இல்லை என்றால் பிழைக்க முடியாது.
3.போகிறாய் அல்லவா... அவனிடம் கேளுடா...! என்று சப்தமிடுகிறார்.

யாரிடம்..?

இந்தப் பக்தியில் (ஆரம்பத்தில்) நான் இருப்பதால் “முருகனிடம் கேளுடா...!” என்கிறார் குருநாதர்.

ஏற்கனவே குரு பல உண்மைகளை எனக்கு உணர்த்தியிருக்கின்றார். உலகத்தில் இருக்கும் மந்திரவாதிககள் செயல்களிலிருந்து... மற்ற உலக நடப்புகள் அனைத்தையும் சொன்ன பிற்பாடு “நீ முருகனிடம் சென்று பணத்தைக் கேள்...” என்று சொன்னால் எப்படி இருக்கும்...!

அங்கே பசியுடன் தான் மேலே போகிறேன். ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறோம் ஏது பண்ணுகிறோம் என்று தெரியாதபடி படி மேல் கிடு... கிடு... என்று ஏறிப் போகின்றேன்.

உள்ளே முருகன் சிலை இருக்கும் சந்நிதிக்கே சென்றுவிட்டேன். முன்னேப் பின்னே முருகனை நேரடியாகப் பார்த்ததில்லை. “சிரித்த முகமாக முருகனே வருகிறார்...!”

இதைத் தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது குருநாதர்.. முருகன் வந்ததும் கேளுடா என்று... இந்த நினைவு வருகிறது. சிலையிலிருந்து அப்படியே முருகன் வருகிறது.

அந்த நேரத்தில் அங்கே கூட்டமும் இல்லை. யாரோ கொடுத்த மாலையை என் கழுத்தில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஏனென்றால் அங்கே தெரிந்தவர்கள் இருப்பதால் நான் டிக்கெட்டும் எடுக்கவில்லை உள்ளேயே போய்விட்டேன்.

மொத்தம் அங்கே இரண்டே பேர் தான் இருக்கிறோம். மாலை எனக்கு விழுகிறது. முருகன் சிரித்துக் கொண்டே வருகிறார்.

பார்த்ததும் குருநாதர் சொன்ன ஆசையெல்லாம் விட்டுவிட்டது. அங்கே முருகனிடம் என்ன கேட்கிறேன்...?

1.முருகனே காட்சி கொடுத்துவிட்டான் இனி நமக்கு வேறு என்ன வேண்டும்...?
2.எல்லாம் அவனே பார்த்துக் கொள்கிறான்...! என்ற இந்த எண்ணம் தான் வந்தது.

குருநாதர் இதற்கு முன்னாடி காட்டிய நிலை எல்லாம் இருக்கிறது அல்லவா. இவ்வளவு பெரிய சக்தி நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் முதலில் “நம் புத்தி சரியாக இருக்க வேண்டும்...”

கோபம் வந்து ஏதாவது செய்து விட்டால்... இவ்வளவு பெரிய சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னென்ன கேடுகள் வரும் என்று குருநாதர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு கையைக் நீட்டினால்
1.வேருடன் மரம் கீழே சாய்கிறது
2.காக்காயைக் காட்டினால் காகத்தின் இறக்கை பிய்ந்து விழுகிறது.
3.பாம்பைக் காட்டினால் பாம்பு அப்படியே ஒடுங்குகிறது
4.மாட்டைக் காட்டினால் அது செயலற்றதாகிறது
5.மனிதனைக் காட்டும் போது கை கால் நின்று போகிறது
6.ரோட்டில் போகிறவனைக் கை கால் வராது ஆக்குகிறது

இத்தனையும் செய்து காட்டியவுடன் இந்தப் பவர்கள் இருப்பதால் நீ எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை... என்று சொல்லி குருநாதர் என்னென்னமோ காட்டுகிறார். இதை எல்லாம் சொல்லிச் செய்து பார்க்கவும் சொல்கிறார்... முதலில்...!

அந்தச் சக்தி எல்லாம் வந்தவுடன் திமிரும் கூட ஏறுகிறது.

முருகனை இதற்கு முன்னாடிப் பார்த்ததில்லை அல்லவா...! முருகனின் காட்சி கிடைத்தவுடன் இந்த எண்ணம் எல்லாம் ஓடுகிறது.

மேலே சொன்ன சக்தியெல்லாம் அடுத்தவர் மீது பாய்ச்சிச் செயல்படுத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களின் வேதனை எல்லாம் உன்னிடம் வந்து சேரும்....
1.கடைசியில் ஒட்டு மொத்தமாக எல்லா வேதனையும் நீ அனுபவிக்க வேண்டும் என்று குருநாதர் சொல்கிறார்.
2.இவ்வளவு தெரிந்த பிற்பாடு இது நமக்கு எதற்கு...?

இது எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லி எச்சரிக்கை செய்கிறார் குருநாதர்.

ஆரம்பத்தில் நாயெல்லாம் என்னைக் கடிக்க வரும். அந்த நேரத்தில் குருநாதர் சொன்னபடி விரலை நீட்டினால் வாயைக் கட்ட முடிகிறது.

இந்த உணர்வின் தன்மையை எண்ணும் போது அந்த நாய் எவ்வளவு வேதனைப்படுகிறதோ உன்னை எண்ணியே தான் அது வேதனைப்படும். கடைசியில் அது எதையும் சாப்பிட முடியாதபடி ஆனது போல் நீயும் சோறு சாப்பிட முடியாமல் நீயும் வேதனைப்படுவாய். இதையும் குருநாதர் காட்டி இருக்கின்றார்.

அப்புறம் நமக்கு எப்படி அது மேல் ஆசை வரும்...? சாட்சாத் முருகனே சிலையிலிருந்து எழுந்து வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருக்கும்...?

நான் என்ன செய்தேன்...!

செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன்.
1.நான் நல்லவனாக இருக்க வேண்டும்
2.நான் பார்ப்பது எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்
3.என்னை அறியாது ஏதாவது தீங்கான செயல் வந்தது என்றால்
4.அது வராது தடுக்க வேண்டும்... எனக்கு ஒன்றுமே தெரியாது.
5.நான் யாருக்காவது கெட்டதைச் சொல்லி விட்டேன் என்றால் அவர்களிடமிருந்து கெட்டது தான் போக வேண்டுமே தவிர
6.“என்னால் அவர்களுக்குக் கெட்டது ஆகிவிடக் கூடாது...!” என்று இதைக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே வந்த பின் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கின்றார் குருநாதர். என் குடுமியைப் பிடித்தார். வாயில் வராத பேச்சுக்களைப் பேசினார். வார்த்தைகள் இன்னது தான் என்று இல்லாத அளவுக்குப் பேசுகின்றார். அடி... அடி... என்று அடிக்கின்றார். சட்டை எல்லாம் கிழித்து விட்டார்.

அங்கிருந்து சந்தோசமாகக் கீழே இறங்கி வந்தேன், அங்கே என்னென்னமோ காட்சி கிடைத்தது. இங்கே வந்தால் உதை விழுகிறது. குருநாதர் முகத்தையும் பல்லையும் கண்களையும் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றார்.

இங்கே வாடா....... என்று சட்டையைப் பிடித்து இழுத்தார்.

நீ நல்லவன் தான்...! நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டான். செல்வம் வேண்டும்... செல்வாக்கு வேண்டும்... சொல்வாக்கு வேண்டும்... இந்த மூன்றும் வேண்டும்...! இது இல்லை என்றால் மனிதனுக்கு வழி இல்லை என்று சொல்கிறார். அதையே மீண்டும் சொல்கிறார்.

1.குருநாதராக இருந்து முருகனையே காண்பித்துக் கொடுக்கின்றீர்கள்
2.இங்கே முருகனும் இருக்கின்றார்... நீங்களும் இருக்கின்றீர்கள்...!
3.எனக்கு வேறு என்ன வேண்டும்...? இதைக் காட்டிலும் வேறு என்ன சொத்து வேண்டியிருக்கிறது...?
4.நான் இப்படியே கேட்டேன்... வேண்டியதில்லை...! என்று சொன்னேன்.

இது நடந்த நிகழ்ச்சி.