ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2021

தியானம் செய்தால் தான் பலன்... தியானம் செய்து பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்திற்குப் போகக்கூடாது

 

யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.

இருந்தாலும்...
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்... என் தொழில் சீராக வில்லையே...
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்... என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே...! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.

ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்... என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே...!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்...?

வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்...?

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா...!

நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.

ஏனென்றால் ஆசையின் நிமித்தம்... உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே... அது கிடைக்கவில்லையே...! எல்லாம் செய்தேனே...
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்...
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே...! காசையெல்லாம் செலவழித்து விட்டானே...! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றிவிடுகின்றோம்.

விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.

மூஷிகவாகனா...! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.

1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக்கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.

அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே... இப்படி ஆகிவிட்டதே... இப்படி ஆகிவிட்டதே...! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.

எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.

கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.

இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை... அசைக்க முடியவில்லை... வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது...?

இவன் இப்படிச் செய்கின்றான்... அவனுக்குப் பணம் கொடுத்தேனே...! அவன் ஒன்றும் செய்யவில்லையே...! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.

கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.

அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து...
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்.... அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்... சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்... சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்

அந்த அருள் உணர்வைப் பெருக்கினால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை மாற்றும். உடலை விட்டுச் சென்றபின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே மெய் உணர்வோடு நாம் ஒன்றிச் செல்வோம்.