=
நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.
இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.
செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”
1.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
2.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
3.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.
பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில்… பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.
ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.
இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.
மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.
பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.
மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.
மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.
இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.
மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.
மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள் இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
2.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.
ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.
ஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.
ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.
இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!
வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.
1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்
2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…
3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…!”
அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு...!”