ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2021

பளிச்… பளிச்… என்று ஊசி குத்துவது போல் உடலில் வலி எதனால் வருகிறது…?

 

சாதாரணமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு தடவை கோபமாகப் பேசியிருப்போம். அந்த உணர்வு பட்டவுடனே பாவிப் பயல்... இப்படிப் பேசுகின்றானே...! என்று அந்த உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்படும்...!

அப்போது
1.நாம் கேட்கும் போது நமக்குள் பதிவாகிறது... அணுவாகிறது.
2.எவ்வளவு வேதனைப்பட்டார்களோ அதனுடைய உணர்வின் அணுக்களை
3.அது தன் ஆகாரத்திற்காக எடுக்கப்படும் போது போது பளீர்... பளீர்... என்று நம் உடலில் மின்னும்.

நாம் நினைப்போம்... நாம் ஒன்றும் சொல்லவில்லையே. அவர்கள் தவறு செய்ததனால் தானே நாம் கோபித்தோம்…! என்போம்.

ஆனால் அதிலே உருவான அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நமக்குள் இங்கே விளைந்த பின்
1.அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது கிளர்ச்சிகளைச் செய்யும்.
2.அந்த நேரத்தில் பளீர்...ர்ர்.. என்று மின்னல் தாக்குகிற மாதிரி (ஊசி குத்துவது போல்) இருக்கும்.

காரணம் இந்த அணுவின் தனமை தனக்குள் ஆகாரத்திற்காகப் பளீர் என்று மின்னும். அதற்குப் பின்
1.நினைவு அந்த இடத்திற்கே வரும்.
2.நினைவு வரப்படும் போது உள்ளுக்குள் எடுத்து அந்த ஆகாரத்தை விஷத்தைப் பரப்பும்.

அதே போல் சந்தர்ப்பவசத்தால் நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம் என்றால் அந்த வேதனையின் அணுக்கள் டி.பி. நோயாக மாறுகிறது.

நல்ல உணர்வின் அணுக்களாக இருந்தால் அதனின் மலம் பட்டால் நம் எலும்புகள் சீராக இருக்கும். ஆனால் வேதனையால் உருவான அணுகக்ளின் மலம் பட்டால் எலும்புகளை அது அரிக்கத் தொடங்கும்.

நம் சுவாச நாளங்களில் இத்தகைய விஷமான அணுக்கள் பட்டால் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரலை இது சாப்பிட ஆரம்பிக்கும். ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும்.

இதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாலோ...
1.அதனுடைய கிளர்ச்சியைச் செய்த பின் அம்மம்மா...! என்போம்
2.அந்த வலி எடுக்கும் போது இப்படிக் கூடி
3.அந்த உணர்வைத் தூண்டி அது தன் சாப்பாடை எடுத்துக் கொள்ளும்.

அதாவது ஒரு பக்கத்தில் நம் உடலில் பளீர் என்று மின்னினால் அந்த உணர்வுக்காக அந்தக் கிளர்ச்சியைச் செய்கிறது என்று அர்த்தம்
1.கிளர்ச்சி செய்த பின் இந்த ஆன்மாவில் இழுக்கும்.
2.எந்த அணு கிளருகிறதோ அது தான் சாப்பாட்டுகளைக் கவரும்.
3.இது கிளர்ச்சிகளைத் தூண்டவில்லை என்றால் நமக்கு அந்த (வேதனை) நினைவு வராது.

ஆனால் கிளர்ச்சியைத் தூண்டும் போது கண்ணுக்கு நினைவு வரும்.
1.கண்ணில் உள்ள கருமணி இங்கே பதிவு செய்கிறது.
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ “யாரைப் பார்த்து வேதனையைப் பதிவு செய்ததோ…”
3.அந்த மனித உடலிலிருந்து வந்ததை இது (மீண்டும்) எடுக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!

நாம் ஒருவரைக் கோபித்துப் பேசினாலும் அல்லது ஒருவரைச் சாபமிட்டுப் பேசினாலும் அது வேறு.

ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் இரக்க உணர்வுடன் பார்த்தாலும் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் வந்துவிட்டால் மேலே சொன்ன அதே கிளர்ச்சியைச் செய்யும்.

ஆக… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அதே உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையும்.
1.அப்பொழுது அதற்குச் சாப்பாடு வேண்டும்
2.இந்த உயிரின் மூலமாகத்தான் அது எடுத்துக் கொள்ளும்.

சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சப்படும் போது ஒரு செடியில் தாக்கி அந்தச் செடியை இயக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அதே காந்தத்தால் அதனின் உணர்வை இழுக்கச் செய்கிறது.

இருந்தாலும் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதைப் போல் நாம் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவான பின் அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும்.

1.ஸ்ஸ்...ஸ்ஸ்... அப்பா......! என்று இந்த நினைவு எண்ணியவுடனே கண்ணுக்குத் தான் வரும்.
2.நேராக அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போய்ச் சேரும்.
3.எம்மா......! என்று நினையுங்கள்... இந்தச் சாப்பாடு போனவுடனே கொஞ்சம் அடங்கும்.

அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாக நம்மிடம் வந்து சிரித்துக் கொண்டே ஏதாவது சொன்னால் கோபம் வரும். சொல்பவர்கள் மீது வெறுப்பு அதிகமாக வரும். நமக்குள் வேதனை அதிகமாகும்.

நாம் தவறு செய்ததனால் இது வரவில்லை.
1.நாம் தவறு செய்தவர்களைப் பார்க்கப்படும் போது
2.அந்த உணர்வின் அணுக்கள் உடலிலே விளையப்படும் போது
3.அதனின் உணர்வுக்கு இரைகளை எடுக்க கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.ஆன்மாவில் வந்த பின் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் சத்தை எடுக்கிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் குருநாதர் காட்டிய வழியில் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்தால் அதை எல்லாம் மாற்றி நல்ல அணுக்களாக நம் உடலில் விளையச் செய்ய முடியும். தீமை செய்யும் அணுக்களின் விளைச்சலைத் தடைப்படுத்தவும் முடியும்.