ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2021

தவமிருந்து ஆண்டவன் அருளை எப்படிப் பெறுவது…?

 

கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு தியானித்தவர் அனைவருமே “நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு நான்கு பேர் சேர்ந்து கூட்டமைப்பாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும்.
2.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் இதைச் செய்து பழக வேண்டும்.

அதே போல் ஒரு குடும்பத்திற்கு எதிரியாக இருந்து பல பேர் பல நிலைகளைச் செய்கின்றார்கள் என்றால்
1.அடுத்த நிமிடம் கூட்டாக அந்த வீட்டிலே இந்தத் தியானத்தைச் செய்து
2.அவர்களை அறியாது இயக்கும் இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்து வர வேண்டும். இதை நாம் செய்தோம் என்றால் அந்த ஞானிகளின் உணர்வை நாம் பெறுகின்றோம். தியானமும் தவமும் என்பது இது தான்.

ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுக்கின்றோம்… நமக்குள் வளர்க்கின்றோம். எல்லோரும் பெற வேண்டும் என்று தவத்தைச் செய்கின்றோம்.

எங்களைப் பார்க்கின்றவர்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்க வேண்டும்.

அதாவது
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கின்றோம்... அதை வளர்க்கின்றோம்.
2.நீங்கள் அதைப் பெற வேண்டும்… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்கும் போது
3.உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்… இது தான் தவம்.

தவத்திற்கு இலக்கணம் வேண்டுமல்லவா…! அந்த ஆண்டவனின் அருளைப் பெறுவதற்காகத் தவமிருக்கின்றோம் வேண்டும் என்றால் அந்த ஆண்டவன் எங்கே இருக்கின்றான்…?

1.உங்கள் உயிர் தான் ஆண்டவனாக இருக்கின்றது
2.அந்த ஆண்டவன் இருக்கும் ஆலயத்திற்குள் தீமையின் உணர்வுகள் வாட்டுகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து விடுபட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி
5.நீங்கள் பெறவேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.
6.அப்பொழுது உங்கள் உயிரான ஆண்டவனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது.
7.அந்தத் தவத்தின் பலனை நான் பெற முடிகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ளாது ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான் என்றால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் உயிர்.

1.அருள் சக்திகளைத் தியானித்து அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற தவத்தினைச் செய்தால்
2.அதனின் பயனாக நல்ல விளைவின் நிலைகளை… அந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகர முடியும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று தியானித்த பின்… மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று உள்ளபூர்வமாகச் செய்தால் அது தான் உண்மையான தவம்….!