ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2021

ஞானிகள் உணர்வை வைத்துத் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர தீமை செய்வோரை அல்ல...!

 

குருநாதர் எம்மைப் பல பரிசீலனைகள் செய்து அதிலே பட்ட அவஸ்தைகள் எத்தனையோ. ஏனென்றால் பல சக்திகளையும் கொடுத்து அந்தப் பரிசீலனை செய்கிறார்.

அவர் கொடுத்த அவஸ்தைக்கெல்லாம் ஆளாகித் தான் உங்களிடம் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஏனென்றால் கஷ்டத்திலிருந்து தான் எல்லா உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார். ஆனால் உங்களுக்குக் கஷ்டம் வரும் போது அதை நிவர்த்தி செய்வதற்குச் சக்தி கொடுக்கின்றேன்.

1.உங்களுக்குக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தார் கஷ்டப்பட்டு...
2.நீங்கள் எங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்...? என்று கேட்டால் எப்படி...!

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளில் பல சக்திகளை குருநாதர் கொடுத்தார். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பல பரீட்சைகளுக்கும் ஆளாக்கினார்.

இப்பொழுது வரையிலும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாராவது ஒருத்தர் இரண்டு பேர் வந்து நம் பவரைச் சோதிப்பதற்கு அது போல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆனால் இது போன்று வரும்.

1.அதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வை வைத்துத் தான் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர
2.தீமைகளிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டுமே தவிர
3.அவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று “தீமையை வைத்துத் தீமையை அழிப்பது அல்ல...”

எத்தனையோ நிலைகள் வருகிறது... எத்தனையோ தவறுகள் நடக்கிறது. தவறு நடக்கும் போது அந்தத் தவறைத் திருத்துவதற்குத் தான் நாம் வழியைக் காட்ட வேண்டுமே தவிர அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்... ஞானிகள் வழியில் அதைச் செயல்படுத்த வேண்டும்.

அதைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) இங்கே உபதேச வாயிலாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறோம். ஆனால்
1.ஒரு நிமிடம் அந்த குரு உணர்வை விட்டு விலகிவிட்டோம் என்றால்
2.அந்தக் குரு அருள் இல்லை என்றால் இருள் சூழும் நிலைக்கே நாம் செல்ல நேரும்.
3.உலகில் பேரும் புகழும் பெற முடியும்... புகழ் தேடி வரும்... அந்த நேரத்தில் இருள் சூழும்.
4.குரு கொடுத்த சக்தியை நாம் பெற முடியாது.

குருநாதர் கொடுத்த அளவுப்படி இந்த உலகில் எத்தனை தீமை இருந்தாலும் அந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொண்டதனால்
1.மகரிஷிகளின் உணர்வை விளையச் செய்வதற்குத்தான்
2.இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உண்மையை உணர்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாக உணரச் செய்தார். பல நிலைகளைச் செய்து அந்த உணர்வுகள் எப்படி இயக்குகிறது...? என்று தெரிந்து கொண்டோம்.

அதன் வழிகளில் நீங்கள் எல்லோரும் மெய்ப் பொருள் காண முடியும்... மெய் ஞானம் பெற முடியும்... என்ற நம்பிக்கையில் தான் இந்த உண்மைகளை உணர்த்துகின்றோம்.