உதாரணமாக கெமிக்கல் கலந்த நாடாவில் காந்தத்தின் தன்மை கொண்டு ஒலி அலைகளைப் பதிவு செய்கின்றோம். பாடல்களையும் பதிவாக்குகின்றோம்.
மீண்டும் வேறு ஒரு பட்டனைத் தட்டினால் காந்தப்புலனை ஈர்த்து நாம் எதைப் பாடிப் பதிவு செய்தோமோ அதன் உணர்வின் அலைகள் வருகின்றது.
இதைப் போன்ற உணர்வின் அலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு காற்றில் அலைகளாகப் பரப்புகின்றனர். இதனைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.
அதனுடைய இயக்கத் தொடர் கொண்டு
1.ஒரு ஏரியலை வைத்துக் கவர்ந்து
2.டிரான்ஸிஸ்டருக்குள் செலுத்தி டிரான்ஸாக்சன் செய்து
3.ஒலி அலைகளை வடிகட்டி
4.உணர்வின் ஒலிகளைத் தனியாகப் பிரித்துக் கொடுக்கின்றது.
ரேடியோ மூலமாக இந்தச் சொற்களையோ அல்லது பாடல்களையோ நாம் கேட்கின்றோம்.
இது போன்றுதான் நமது உயிரின் காந்தப்புலனறிவு பிறருடைய நிலைகளை நுகரப்படும் பொழுது
1.இந்த உணர்வினை உயிர் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.அதனின் உணர்வின் அறிவாக இயக்கவும்… அறியவும் செய்யச் செய்கின்றது.
ஆனால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் அதனின் அணுத்தன்மையாக மாற்றும் திறன் பெறுகின்றது.
1.அது கருவாக உருவாகி முட்டையாகி வெடித்து
2.அணுவின் தன்மை பெறும் நிலையாக
3.நம் இரத்தநாளங்களில் சேமித்து விடுகின்றது நமது உயிர்.
மனிதர்களான நாம் எதை நுகர்கின்றோமோ அது நமக்குள் இணைந்து அதன் வழி நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறியச் செய்தனர் மெய்ஞானிகள்.
1.மனிதர் தாம் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கமாக
2.தீமைகளை வென்றிடும் அருள் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே இணைக்கவும்
3.அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலையைப் பெறச் செய்யவும்
4.மரணமில்லா பெருவாழ்வாக வாழச் செய்வதற்காகவும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்க்கச் செய்வதற்கு
6.அருள் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.
அருள் ஞானிகள் காண்பித்த அருள் ஞான உணர்வுகளைத் தம்முள் பதித்து அருள் ஞான உணர்வின் ஆற்றலலைத் தமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக… பேரானந்த நிலை பெற்று மகிழ்ந்து மகிழ்ந்து வாழ முடியும்.